1902-ஆம் ஆண்டில்…
நிரஞ்சனா
1902-ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவில் நடந்த சம்பவம்.
நீதிபதி ஒரு கைதிக்கு மரணதண்டனை வழங்கினார். அந்த கைதியை சக கைதிகள் இருக்கும் சிறையி்ல் அடைக்காமல் கீழ்தளத்தில் இருக்கும் ஒரு தனி சிறையில் அடைத்து வைத்தார்கள். மறுநாள் தண்டனை நிறைவேற்ற எல்லா போலீஸ்சாரும் தயாராக இருக்கும் போது, ஒரு எரிமலை வெடித்தது.
இதனால் சூடான காற்று வெளிப்பட்டது. வெப்பம் தாங்காமல் அருகில் இருந்த நகரத்தில் வாழ்ந்த நாட்பதாயிரம் மக்கள் இறந்தார்கள்.
இந்த நகரத்தில்தான் இருந்தது இந்த சிறைச்சாலை.
சிறைச்சாலையில் இருந்த அனைவரும் மாண்டார்கள். ஆனால் மரணதண்டனை பெற்ற கைதி மட்டும் கீழ் தளத்தில் இருந்ததால் அவன் மட்டும் உயிர் தப்பி்த்தான்.
அதே போல், பாபர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். பாபரின் மகன் இமாயூனுக்கு விஷ காய்ச்சல் ஏற்பட்டது. ஆக்ராவில் இருந்த உயர் மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் இமாயூனுக்கு காய்ச்சல் சிறிதும் குறையவில்லை. மனிதர்கள் கைவிட்டாலும் ஆண்டவன் கை கொடுப்பார் என்று ஆழ்ந்த நம்பிக்கையில், தன் மகன் அருகிலேயே இருந்து பிராத்தனை செய்தார் பாபர். ஹுமாயூன்காய்ச்சல் நீங்கி நலம் பெற்றார் என்கிறது வரலாறு.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர் நம் முன்னோர்கள். ஆம். இறைவன் மனம் வைத்தால்தான் இப்படிபட்ட அதிசயங்கள் நடக்கிறது. நம் வாழ்வில் என்றும் முன்னேற்றம் கிடைக்க தினமும் இறைவனை வணங்குவோம். தெய்வத்தின் குழந்தைகளான நாம் நிச்சயம் இறைவனின் ஆசியால் ஏற்றம் பெறுவாம்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved