வெற்றியா, தோல்வியா? என அறிய உன்னையே நீ அறிவாய்
நிரஞ்சனா
மனிதன் அறிய வேண்டிய முக்கியமானது தன்னை அறிதல்.
நாயை கண்டால் முயல் ஓடும்
பூனையை கண்டால் எலி ஒடும்.
இப்படி ஜீவராசிகள் தன்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறது. தான்யார் என்பதை உலகத்திற்கு தெரிவித்து இருக்கும் ஞானிகளும், விஞ்ஞானிகளும் பெரும் கூட்டமாக இல்லை. விரல் விட்டு என்ன கூடிய அளவே இருக்கிறார்கள்.
தண்ணீர் தாகத்தை தீர்க்கிறது, வயல்களை வளர்க்கிறது. அந்த தண்ணீரில் இருக்கும் மீன் அழுக்கை தின்று நீரை சுத்தப்படுத்துகிறது. அந்த மீனை பறவைகள், மனிதர்கள் ஆகாரமாக சாப்பிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும், ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்போது மனித பிறவிக்கும் காரணம் இல்லாமல் இல்லை.
ஆம்.. தமி்ழில் எல்லா சொல்லுக்கும் பொருள் உண்டு. அது போல் எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு. இப்படி காரணம் இருப்பதாலேதான் இறைவன் உலகத்தை படைத்து அதில் உலாவ பல உயிர்களை படைத்தான்.
மனிதா நீ வாழ்கையை வாழ்ந்துப் பார். நீ யார் என்பதை நீ அறிகிறாயோ இல்லையோ உன்னை பற்றி ஊர் மக்கள் நன்கு அறிவார்கள். வாழ்வதற்கே பிறந்தோம். வாழ்ந்து பார்த்து விடு. அதை விடுத்து தோல்வியை கண்டு விபரீத முடிவை எடுக்காதே. பிறவி என்பது உன் நிழல் போல் பின்தொடரும். எத்தனை பிறவி எடுத்தாலும் இதுபோல் வாழ்க்கையைதான் நீ வாழப் போகிறாய். அதனால் இந்த பிறவியிலேயே ஆண்டவன் நிர்ணயித்த ஆயுள் முழுவதும் போராடி வாழ்ந்து பார். அதுவே உன்னை வெற்றி பெற வழி காட்டும். “போதுமட சாமி இந்த வாழ்க்கை, ஏன்தான் பிறந்தோமோ” என்று சலித்த மனிதனின் மன கேள்விக்கு தன்னம்பிக்கை தரும் அளவில் வாழ்ந்துதான் பார்த்து விடுவோமே. வாழ வழியா இல்லை பூமியில் என்கிற கவியரசு கண்ணதாசனின் பொன்னான வரிகள் இவை.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்