மாவீரர் நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார் அதில்…
நிரஞ்சனா
மாவீரர் நெப்போலியன் ஒரு நூலகம் வைத்திருந்தார் அதில் ஏராளமான நூல்கள் இருந்தது. அந்த நூலகத்தில் ஒரு தமிழ் நூலும் இடம்பிடித்திருந்தது. அந்த நூல்,
“இராவணனை போல் இல்லாது பெண்ணாசையை நீக்கு. கேட்பார் பேச்சை கேட்டு நிம்மதி இழந்த கைகேயியை போல் இருக்காதே. கூனியை போல் சிண்டு முடித்து விடுபவர்களிடம் எச்சரிக்கையாக இரு. முடிந்தால் அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகியே இரு. நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் ஆஞ்சனேயனை போன்ற, குகனை போன்ற நண்பர்களிடம் நட்பு கொள். நீயும் நண்பர்களிடம் உண்மையாக இரு. லட்சுமணனை போல, பரதனை போல நீயும் சகோதரர்களிடம் ஒற்றுமையோடும் அன்போடும் இரு. கஷ்டங்களை மனதில் தாங்கினாலும், அமைதியாக இருந்து, தன் குடும்பத்தில் இருக்கும் யாவருக்கும் தொல்லை தராமல் இருந்த ஊர்மிளா போல இரு. இராமரை போன்று சீதையை போன்று சோதனையை தாங்கி சாதனைச் செய்.”
இப்படியாக வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதலும், அறிவுரைகளையும் சொல்லும் இந்தியாவின் புனித காவியமான “கம்பஇராமாயணம்” என்கிற புத்தகத்தை, மாவீரர் நெப்போலியன் தன் நூலகத்தில் வைத்திருந்தார். அவர் வைத்திருந்த ஒரே தமிழ் நூல் “கம்பஇராமாயணம்” மட்டும் தான்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved