கிஷ்கிந்தா காண்டம் படித்தால் விரோதிகள் வீழ்வர்
நிரஞ்சனா
இராமாயணம். இந்தியாவின் உலகப்புகழ் பெற்ற இதிகாசம். வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை, சகோதர ஒற்றுமையை, விதியின் வலிமையை, நட்பின் மேன்மையை எடுத்துக்காட்டும் காவியம். அரச குடும்பத்தில் பிறந்த அனைவருக்குமே இராஜவாழ்க்கை அமைந்துவிடாது, அவர்களும் குடும்ப போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்று உணர்த்துகிறது இராமாயணம். அந்த போராட்டங்களையும் நல்ல நட்பின் துணைக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை இராமாயணத்தின் ஏழு காண்டங்கள் நமக்கு சம்பவங்களாக சொல்கிறது.
பாலகாண்டம் : இராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. இராமனது குழந்தைப் பருவம், அவனது குறும்பான விளையாட்டுக்கள், எதிர்காலத்தில் அவன் சந்திக்க போகும் சோதனைகளின் அடிப்படை போன்றவை இந்த பாலகாண்டத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
அயோத்தியகாண்டம் : இராமன் சீதை கண்டது. சீதையுடன் திருமணம். இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்தின் சம்பவங்களை சொல்கிற பகுதி இது.
ஆரண்யகாண்டம் : அரச குடும்பத்தில் ஒருத்தியாக மரியாதை தரப்பட்ட கூனி, அதே அரச குடும்பத்தை பாதகத்தில் தள்ளி, இராமன் காட்டுக்குச் அனுப்பப்பட்ட சம்பவங்களையும், இராமனது வனவாசத்தையும் காட்டுகிற பகுதி.
கிஷ்கிந்தாகாண்டம் : விதிவசத்தால் இராமனது வனவாசத்தின்போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேட வானரப்படை உருவானதும் ஸ்ரீஆஞ்சனேயர் என்கிற மகிமையை பொருந்திய வானரரின் நட்பும் இராமனுக்கு அமைந்த சம்பவத்தை சொல்கிற பகுதி.
சுந்தரகாண்டம் : சீதையைத் தேடி ஸ்ரீஆஞ்சனேயரர் இலங்கைக்கு சென்றதும், அங்கே சீதையை சந்தித்து அவளுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் சொல்லி, இராவணனை சந்தித்ததும், “நீ ஒரு குரங்கு. உன்னால் என்னை என்ன செய்ய முடியும்.?” என்று இராவணன் பேச, ”ஆம். நான் குரங்குதான். குரங்கு என்ன செய்யும் என்பதை பார்.” என்று சொல்லி, இலங்கையை தீயிட்டு, இராவணனை எச்சரித்தது போன்ற சம்பவங்களை உள்ளடக்கிய பகுதி இது.
யுத்தகாண்டம் : இராமனுக்கும் இராவணனுக்கும் இடையே நடந்த கடுமையான யுத்தத்தை சொல்கிற பகுதி யுத்தகாண்டம்.
உத்தரகாண்டம் : இலங்கை போரில் இராவணன் வீழ்ந்து, இராமன் வெற்றி பெற்று, இராமன் அயோத்திக்கு மீண்டும் அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் சொல்கிற சம்பவ பகுதி இது.
இப்படியாக ஏழு காண்டங்களை கொண்டது வால்மீகி இராமாயண காவியம்.
சுந்தரகாண்டம்
குடும்பத்தில் நிம்மதி இல்லாதவர்கள், கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினை விலக, சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் பார்த்தது பற்றிய தகவளை இராமனுக்கு சொல்ல, இராமன் மகிழந்தது போன்ற சம்பவத்தை உள்ளடக்கிய சுந்தரகாண்டத்தை படித்தால் சுபிட்சம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.
எதிரிகள் தொல்லை, தீண்ட வழக்குகளில் இருந்து விடுபட…
விரோதிகளால் பிரச்சினை இருந்தால் கிஷ்கிந்தாகாண்டம் படித்து வந்தால் அதனை தொடர்ந்து படித்து வந்தவர், வல்லவனுக்கு வல்லவனாக மாறும் சக்தி கொண்டவராக திகழ்வார். நமக்கு அந்த ஆற்றலை தருகிற சக்தி கிஷ்கிந்தாகாண்டத்துக்கு உண்டு.
அதிலும் சனிஸ்வர பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வாரத்துக்கு ஒருநாள் சனிக்கிழமைதோறும் கிஷ்கிந்தாகாண்டத்தை படித்து வந்தால், ஸ்ரீஆஞ்சனேயரின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும். இதனால் விரோதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். அத்துடன் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இத்தகைய மகிமை கொண்டது கிஷ்கிந்தாகாண்டம்.
கிஷ்கிந்தாகாண்டம்
இராவணனின் பிடியில் இருந்து சீதையை எப்படி மீட்பது? என்ற கவலையில் இருந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் சுக்கிரீவனின் நட்பு கிடைத்தது. அத்துடன் தன் பக்தரான அனுமன் நட்பும் இராமன், லட்சுமணனுக்கு கிடைத்தது. சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன், கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றார். அங்கே அசோகவனத்தில் சிறையிலிருந்த சீதையைக் கண்டார். “அம்மா…நான் இராமபக்தன். பெயர் ஆஞ்சனேயன்.” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சீதைக்கு ஆறுதல் சொன்னார். தைரியம் தந்தார். இராமதூதனான ஆஞ்சனேயனை சிறைப்பிடித்த இராவணனுக்கு தகுந்த பாடம் புகட்டி, இராமனிடம் பத்திரமாக திரும்பினார் ஆஞ்சனேயர்.
இராமனிடம். சீதையை பார்த்தேன் என்றால், முதலில் “சீதை” என்ற பெயர் கேட்டவுடன் சீதைக்கு ஏதேனும் விபரீதமோ என்று இராமர் நினைத்துவிடுவாரோ என்றஞ்சி, “கண்டேன சீதையை” என்று மகிழ்ச்சியுடன் கூறி, “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தை பெற்றார் ஸ்ரீஆஞ்சனேயர்.
சீதை இருக்கும் இடத்தை அனுமன் மூலமாக அறிந்துக் கொண்ட இராமர், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்கு சென்றார். இராவணனின் தம்பியான விபீடணனும் இராமருக்கு உதவி செய்ய முன்வந்தார். கடும் யுத்தத்திற்கு பிறகு இராமன் சீதையை மீட்டார்.
அசுவமேத யாகம் செய்ய வேண்டுமானால்……
சீதையின் சிறப்பை நிருபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளி வர வேண்டியதாயிற்று. பிறகு இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு திரும்பினர். இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.
ஒருநாள் இராவணனின் பிடியில் இருந்த சீதையை பற்றி தவறாக பேசினான் ஒருவன். விதியின் விளையாட்டால் மீண்டும் சீதையைக் காட்டுக்கு அனுப்பினார் இராமர். அப்போது சீதை கர்ப்பமாக இருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர்.
அயோத்தியில் இராமன் அசுவமேத யாகம் செய்ய விரும்பினார். அசுவமேத யாகம் செய்ய வேண்டுமானால் அந்த மன்னன், ஒரு குதிரையைப் அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அந்த மன்னனுடன் போரிட விரும்பாத அண்டைநாட்டு அரசர்கள் அந்த குதிரையை தமது நாட்டில் உலவ விடுவர். அப்படி இல்லாமல் அவ்வூர் அரசன் அந்த குதிரை பிடித்து கட்டிவிட்டால், அந்த நாட்டின் மேல் புரிந்து போர் புரிந்து அந்த நாட்டை வென்ற பிறகுதான் அசுவமேத யாகம் செய்ய வேண்டும்.
அதனால் அசுவமேத யாகம் செய்ய விரும்பிய இராமர், தன் குதிரையை அனுப்பினார். அந்த குதிரை, இராமரின் பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் சென்றது. இராமரின் பிள்ளைகள் அந்த குதிரையை பிடித்துக் கட்டினார்கள். இதனால் இராமர், தன் குதிரையை பிடித்துக்கட்டியவர்கள் தன்னுடைய பிள்ளைகளே என்று அறியாமல் தன் போர் படையை அனுப்பினார்.
ஆனால் இராமர் அனுப்பிய போர்படை தோல்வியடைந்தது. இதை அறிந்த இராமர், அவரே நேரடியாக வந்து லவன்-குசனுடன் போரிட்டார். ஆனால் போர் முடிவதாக இல்லை. பிறகு “யார் அவர்கள்.” என்று விசாரித்து, லவனும் குசனும் தம் பிள்ளைகளே என்பதை அறிந்து சீதையையும் கண்டார். அவர்களை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் ஸ்ரீ இராமர்.
வாரந்தோறும் சனிக்கிழமையில் இந்த கிஷ்கிந்தாகாண்டத்தை படித்தால், ஆஞ்சனேயரின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். சனிஸ்வர பகவானின் தொல்லையில் இருந்து விடுபடலாம். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். விரோதிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். நம் விரோதிகளுக்கு துணையாக இருப்பவர்கள், விபீடணனை போல் நமக்கு உதவியாக வருவார்கள். எதிலும் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் உள்ள கருத்துவேறுபாடு மறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved