அபிரகாம் லிங்கன்
நிரஞ்சனா
அபிரகாம் லிங்கனின் தந்தை காலணி தைக்கும் தொழிலாளி. அபிரகாம் லிங்கன் தன் தந்தையுடன் காலணிகள் தைக்கும் தொழிலை செய்துகொண்டே தந்தைக்கு சிரமம் தராமல், தன் பட்டப்படிப்புக்கு வாரத்தில் மூன்று நாட்கள் ஏர் உழுது கூலி பெற்று அந்த பணத்தில் புத்தகத்தை வாங்குவார். இப்படி கடுமையாக உழைத்து சட்ட கல்வி கற்றார். பிறகு அரசியலில் சேர்ந்தார். அதில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். இருந்தாலும் விடமுயற்சியால் அரசியலில் மிக பெரிய வெற்றியை கண்டார். நாட்டின் ஜனாதிபதியாக தேர்வும் பெற்றார். பதவியேற்பு விழாவில் அபிரகாம் லிங்கன் பேசிக்கொண்டிருந்த போது, எதிர்கட்சியில் இருந்த ஒருவர் பொறமை மனதோடு எழுந்து, “மிஸ்டர் அபிரகாம் லிங்கன்… இதோ நான் காலில் அணிந்திருக்கும் காலணிகள் உங்கள் தந்தை தைத்து கொடுத்தது” என்று அபிரகாமை அவமானம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினார். அதை கேட்ட அபிரகாம் லிங்கன், “இந்த நேரத்தில் என் தந்தையை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. என் தந்தையிடமிருந்து நானும் காலணிகள் தைக்கும் தொழிலை கற்றுக்கொண்டவன். என் தந்தை தைத்து தந்த காலணிகளில் ஏதாவது குறை இருந்தால் தாருங்கள் உடனே சரி செய்து தருகிறேன்.” என்றார். அபிரகாம் லிங்கனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசியவர்தான் மக்கள் மத்தியில் கேலிக்கு ஆளானார். அபிரகாம் லிங்கத்தின் புகழோ இன்றுவரை உலகமெல்லாம் நிலைத்து இருக்கிறது. இன்னல்களை இன்முகத்துடன் ஏற்பவர்கள்தான் சாதித்து புகழ்பெறுகிறார்கள்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்