கல்வியில் சிறப்பு பெற மரகத பச்சை உதவுகிறது
நவரத்தின மகிமைகள்
பகுதி – 4
இதற்கு முந்தைய பகுதிகள் படிக்க…
V.G.Krishna Rau
மரகத பச்சை. இது புதனுக்குரிய ரத்தினக்கல். இதை மோதிரமாக அணிவதாலும் டாலராக அணிவதாலும் நல்ல கல்வி, பேச்சாற்றல், பொறுமையான குணம் போன்றவை தரும். வடநாட்டில் ஸ்ரீஹீரன் என்பவர் வடமொழியில் வித்தகராக இருந்தார். ஒருநாள் அயல்நாட்டின் புலவருக்கும் ஸ்ரீஹீரனுக்கும் இடையே, தங்களுடைய திறமை, புலமை, வார்த்தை ஜாலம் போன்றவற்றை கொண்டு விவாதத்தை ஒரு வதம் போல நடத்தினார்கள். கடைசியில் ஸ்ரீஹீரன் தோல்வியடைந்தார்.
வெற்றியை மட்டும் அனுபவித்தவர்களுக்கு தோல்வியை தாங்கும் மன பக்குவம் இருக்காது. ஆம்… தான் பெரும் புலவனாக இருந்தும் அயல்நாடு புலவனிடம் தோல்வியடைந்துவிட்டோமே என்று வருந்தி தன் மனைவி மாமல்லதேவியை அழைத்து, “சிந்தாமணி” என்ற மந்திரத்தையும் அதனின் உட்பொருட்களையும் விளக்கமாக சொன்னார்.
அத்துடன், “இந்த மந்திரத்தை பண்ணிரண்டு வருடம் விடாமல் கூற வேண்டும். அப்படி சரியாக ஒருநாள் கூட தவறாமல் உச்சரித்தால் கலைமகள் வருவாள். அல்லது நடு இரவில் பிணத்தின் மேல் உட்கார்ந்து எந்த பயமும் சிந்தனையும் இல்லாமல் இந்த மந்திரத்தை உச்சரித்தாள் அடுத்த வினாடியே சரஸ்வதிதேவி காட்சிக்கொடுப்பாள்.” என்று கூறி மனைவிக்கு உபதேசித்துவிட்டு புலவனிடம் தோல்வி அடைந்த மன உலைச்சல் காரணமாக மரணத்தை தழுவினார் ஸ்ரீஹீரன்.
கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற தன் மகன் ஸ்ரீஹர்ஷனுக்கு கலைமகளின் ஆசி விரைவில் கிடைப்பதற்காக யாரும் நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு காரியத்தை செய்தாள் மாமல்லதேவி. தன் மகன் ஸ்ரீ ஹர்ஷனை அழைத்து, “உனக்கு இனிப்பு, பொம்மை வாங்கி தருகிறேன், ஆனால் நான் சொல்லுகின்ற மந்திரத்தை சரியாக உச்சரித்து சொல்ல வேண்டும்.” என்று கூறி அவனுக்கு மந்திரத்தை உபதேசித்த மாமல்லதேவி, படுத்துக் கொண்டு தன் மகனை தன் உடல் மேல் வைத்து கொண்டு விளக்கை அனைத்தாள். இருட்டில் “இப்போது சொல் சிந்தாமணி மந்திரத்தை.” என்ற கூறி கொண்டே, தன் அருகில் வைத்திருந்த அறிவாளால் தன் கழுத்தை தானே அறுத்து கொண்டு மாண்டாள்.
தாய் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை கூட இருட்டில் அறியாத சிறுவனான ஸ்ரீஹர்ஷன், தாய் சொல்லை தட்டாமல் சிந்தாமணி மந்திரத்தை தெள்ளத் தெளிவாக உச்சரித்தான். அந்த நிமிடமே சரஸ்வதிதேவி காட்சி கொடுத்து, “உலகமே போற்றும் புலமைக்கு வித்தகனாக நீ வருவாய்.” என்ற ஆசி வழங்கினாள். தன் தாயார் இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்ட ஸ்ரீஹர்ஷன் கண்ணீருடன்,
“கலைவாணி தாயே… எனக்காக தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் மாண்ட என் தாயாரின் உயிரை மீட்டு தாருங்கள்.” என்றான்.
“உன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும். உன் வாக்கு இந்த நிமிடம் முதல் பலிக்கும்.” என்று கூறி மாமல்லதேவியை மீண்டும் உயிர்பித்தாள் கலைவாணி. ஸ்ரீஹர்ஷன் வடமொழியில் பெரும் வித்தகராக திகழ்ந்தார்.
இப்படி அந்த காலம் முதல் இந்த காலம் வரை கல்வி சிறப்பு பெற பெரும் பாடாக படவேண்டியுள்ளது. கல்வியில் சிறப்பு பெற மரகத பச்சை பெரிதும் உதவுகிறது. அத்துடன் உங்கள் முயற்சியுடன் தெய்வபக்தியும் இருக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது. பரிகாரம் என்பது பக்கபலம். நிறங்களுக்கு ஆற்றல் இருக்கிறது. மருத்துவர்கள், மனிதர்களின் உடலில் ரத்த ஒட்டத்தை சரி செய்ய சிகப்பு மின்னோளியை உடலில் காட்டுவார்கள். அந்த ஒளியின் சக்தியால் நாளாக நாளாக நல்ல ரத்த ஒட்டமும் முன்னேற்றமும் ஏற்படும்.
அதுபோல பச்சை ஒளி, மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு உதவும் நிறமாகும். மரகத பச்சையை மோதிரமாக அல்லது டாலராக அணிந்தால் உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். நரம்பு தளர்ச்சி நீங்கும். மனதிற்கு அமைதி ஏற்படும். ஆனால் உங்களுக்கு மரகத பச்சை ரத்தினம் சாதகமாக இருக்குமா? என்று ஆலோசனை பெற்ற பிறகு அணிந்தால் இன்னும் நல்லது.
ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதியானது 5 அல்லது தேதி – மாதம் – வருடம் கூட்டினால் 5 என வந்தால் மரகத பச்சையை அணியலாம்.
உதாரணத்திற்கு –
5–14-23 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் மரகதபச்சை அணியலாம்.
பிறந்த தேதி 2.6.1995 என்று வைத்துக்கொண்டால், 2 + 6 + 1 + 9 + 9 + 5 = 32 வருகிறது. இதில் 3 + 2 = 5 வரும். இது உயிர் எண். இதன் ஆதிக்கம் புதன். புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மரகத பச்சை ரத்தினத்தை அணியலாம்.
தொகுப்பு: நிரஞ்சனா
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved