ஒரு மனிதனின் ஆயுள்காலம்
விஜய் கிருஷ்ணாராவ்
பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான ஆயுள் உண்டு. ஒரு புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது. குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தை பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன. கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராண கதைகளில் இருக்கிறது. ஆனாலும், ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதை பார்த்தால், ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் என்கிறது. இந்த 120 ஆண்டுகள் ஒரு மனிதன் உயிர் வாழ முடியும். அதுவரையில் அவனுடைய ஜாதகப்படி வருகிற தசை – புத்திகள் கணிக்கப்படுகிறது. இப்படி 120 ஆண்டுகள் ஒரு நபர் உயிருடன் இருப்பது என்பது இன்றைய காலத்தில் அதிசயமான விஷயமாக இருக்கிறது.
விஞ்ஞான வளர்ச்சி பல முன்னேற்றங்களை தந்திருந்தாலும் எண்ணற்ற பாதக நிலைகளையும் தந்திருக்கின்றது – தருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இயற்கையாக நமக்கு கிடைக்கக் கூடிய காய் – கனிகளில் கூட மருந்துகள் கலங்கப்பட்டு அது மனித உடலுக்குள் சென்றஉடன் விஷ தன்மையாக மாறி மனிதர்களின் ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. இன்று முப்பது – நாற்பது வயதுக்குள்ளாகவே பல உடல் கோளாறுகளை மனிதன் தன் உடலில் வரவேற்கிறான். காரணம் ஆரோக்கியமான உணவு இங்கே யாருக்கும் இல்லை. ஒரு இளநீரை எடுத்துக் கொண்டாலும் அது இயற்கையாக இளநீர் காயாக இருந்து குடிப்பதுதான் ஆரோக்கியம்.
ஆனால் இங்கே என்ன நடக்கிறது?
அந்த இளநீர் கூட பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அதுவும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது. அந்த இளநீர் கெடாமல் இருப்பதற்காக அதில் என்ன ரசாயனம் கலக்கப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஒரு விஷயத்தை நாம் என்றுமே நினைவில் நிறுத்த வேண்டும். இயற்கையாக நமக்கு கிடைக்க் கூடிய காய், பழங்கள் இப்படி எந்த உணவாக இருந்தாலும் அதனை இயற்கை விதித்த குறிப்பிட்ட காலத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட காலம் சென்ற உடன் இயற்கையே அந்த பொருட்களை மனிதனுக்கு ஏற்றவை அல்ல என்பதை தீர்மானித்து அழித்துவிடுகிறது. அதாவது கெட்டுப்போகிறது.
நமக்கு தாயாக இருக்கக் கூடிய இயற்கை நமது உடலுக்கு எது ஏற்றது என்பதை தீர்மானித்து படைக்கிறது. பிறகு அந்த படைப்பை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த இயற்கையே அழித்தும் விடுகிறது. காரணம் அந்த பொருள் இனி மனிதர்களுக்கு உதவாது என இயற்கை அன்னைக்கு தெரிகிறது.
ஆனால் இங்கே விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் என்ன செய்கிறார்கள்?. இயற்கை படைத்த உணவு பொருட்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அழியாமல் இருப்பதற்காக அல்லது எப்போதும் கெடாமல் இருப்பதற்காக பல ரசாயன கலவைகளை அந்த உணவு பொருட்களில் சேர்க்கிறார்கள். அதனால் அதை சாப்பிடுவதற்குள் அழியாது, சாப்பிட்ட பிறகும் அழியாது. இதனால் வேறு விளைவுகளை உடலுக்குள் உண்டாக்குகிறது.
முன்பெல்லாம் சீக்கிரம் கெடும் வாழைப்பழம், மாம்பழம் போன்றவை இப்போது நீண்ட நாள் கெடுவதில்லை. அதற்குள் இருப்பது இந்த ரசாயன சேர்க்கைதான் என்பது கண்கூடு. இப்படி செயற்கையாக நம் ஆயுளை குறைக்கிறோம்.
இவ்வாறு மனிதனின் அற்ப ஆயுளுக்கு விஞ்ஞானம் தந்த செயற்கை விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், மனிதர்கள் உடல் கோளாறு இல்லாமல் வேறு விதமாக, அதாவது விபத்து, கொலை, தற்கொலை என்று இப்படி மனிதர்களின் ஆயுள் அற்பமாக முடிவதற்கு எது காரணம் என்று நாம் பார்த்தால், அது முன் ஜென்ம கர்மவினை என்று ஒரே வரியில் பல நூற்றாண்டுகளாக இந்து சமயம் சொல்லி வருகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் இந்த ஒரு பதிலை இந்துக்கள் வைத்திருக்கிறார்கள் என்று பிறர் கேலி பேசலாம். ஆனால் உண்மை இதுதான்.
சரி இந்த முன் ஜென்மகர்மா என்றால் என்ன?
© 2011 bhakthiplanet.com All Rights Reserved