Friday 10th January 2025

தலைப்புச் செய்தி :

கௌரவ வாழ்க்கை நிலை தரும் அருள்மிகு கௌமாரியம்மன்

நிரஞ்சனா

கௌமாரியம்மன் வீரபாண்டி

இந்த வீரபாண்டி என்ற தேனி என்கிற ஊரில் இருந்து கம்பம் போகும் பாதையில் 10.கி.மீ தொலைவில் இருக்கிறது அருள்மிகு கௌமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தை ஒட்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் இருக்கிறது.  

கௌமாரியம்மன் தோன்றிய வரலாறு

தேவர்களையும், முனிவர்களையும் ஆட்டிபடைத்துகொணடு இருந்தான் ஓர் அசுரன். “அவன் பிடியில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கிகொடுங்கள்” என்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள் தேவர்கள். “மகிஷாசூரனை வீழ்த்திய சக்திதேவியால்தான் இந்த அசுரனை அழிக்க முடியும். பார்வதிதேவியே அந்த அசுரனை வீழ்த்தி அழிப்பாள். நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள்” என்றார் ஈசன்.

“பார்வதி… நீ பூலோகம் புறப்படு. அங்கு என்னை நினைத்து வழிப்பட்டு வா. முன்பு காஞ்சியில் என்னை காண உனக்காக தவம் இருந்தாய். இன்று நீ அந்த அசுரனை கொன்று பூலோக மக்களுக்கு நலம் புரிய வைகை நதி கரையில் தவம் செய்” என்றார் இறைவன். சக்திதேவியும் சிவன் கூறியது போல் வைகை ஆற்றின் அருகில் மண்ணால் சிவலிங்கத்தை செய்து தவம் இருந்தாள். தன்னை கொல்ல சக்திதேவி தவம் செய்கிறாள் என்பதை அறிந்த அசுரன், பார்வதியை கொல்ல விரைந்தோடி வந்தான். தேவி தவத்தில் இருந்தாள். சக்தியை பார்த்த அசுரன் பார்வதியின் அழகில் மயங்கி அவளை கவர்ந்து செல்ல திட்டம் போட்டான்.

அசுரனின் எண்ணத்தை தவத்தில் அறிந்த தேவி, தன் அருகில் இருந்த அறுகம்புல்லை எடுத்து அந்த அசுரன் மீது போட்டாள். முருகன், சூரபத்மனை இரண்டாக பிளந்தது போல, தேவியின் சக்தியால் அந்த அறுகம்புல் அசுரனை இரண்டாக பிளந்தது. அசுரன் மாண்டான்.

இதை கண்ட தேவர்களும முனிவர்களும் அசுரனிடம் இருந்து தங்களுடைய கௌரவத்தை காத்த கௌமாரியம்மன் வாழ்க என்று கூறிகொண்டே வானத்தில் கௌமாரியம்மனின் மீது மலர்களால் அர்ச்சனை செய்து மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். 

கௌமாரியம்மனை அரசருடைய பெயரோடு அழைப்பதற்கு காரணம்

மதுரையில் பாண்டியவம்சத்தில் பிறந்த வீரபாண்டியன் என்ற அரசர் மதுரையை ஆட்சி செய்து கொண்டு இருந்ததார். இந்த அரசருக்கு கண் பார்வையில்லை. பார்வை இல்லை என்றாலும் தன் நாட்டை கட்டுகோப்பாக வைத்திருந்தார். அந்த நாட்டு மக்கள் தங்கள் அரசருக்கு நல்ல குணம் ஆனால் பார்வையில்லையே என்று கவலையடைந்தார்கள். நல்லவர்களை இறைவன் இப்படியா சோதிப்பது? என்று மக்களிடத்தில் பேச்சு இருந்தது. தனக்கு பார்வை இல்லை என்பதை விட ஊர்மக்கள் தனக்காக இப்படி அனுதாபப்டுகிறார்களே என்று கவலையடைந்தார் அரசர்.

இதனால் பல திருதலங்களுக்கு சென்றார். ஆனாலும் நற்பலன் கிடைக்கவில்லை. முன்வினை பயனால் இந்த நிலை என்று தனக்கு தானே மனதை தேற்றிக்கொண்டார். ஒருநாள் அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, “கௌமாரியம்மன் வைகை நதியோரமாக சிவலிங்கம் செய்து தவம் இருந்தாள். அந்த சிவலிங்கத்தின் பெயர் “கண்ணீசுவரமுடையார். இந்த சிவலிங்கத்தை வணங்கி தவம் இருந்தால் நீ கண் பார்வை பெறுவாய்.” என்றார் ஈசன்.

மறுநாளே வைகை நதிகரைக்கு சென்று அந்த கண்ணீசுவரமுடையார் லிங்கத்தின் அருகில் தவம் செய்தார் மனனர். என்ன ஆச்சரியம்.. கர்ம பயனால் பார்வையில்லாமல் இருந்த வீரபாண்டிய மன்னருக்கு ஒரு கண் பார்வை கிடைத்தது இதனால் மகிழ்ந்த அரசர் கோயில் கட்டி திருகண்ணீசுவரமுடையார் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். கோயில் கட்டும் முன் அதன் அருகிலேயே சுயம்புவாக கௌமாரியம்மன் காட்சி கொடுத்தார். கௌமாரியம்மனின் அருளால்தான் ஈசனே இங்கு வந்தார் என்பதை உணர்ந்து அம்மனுக்கு ஆலயம் எழுப்பி சுயம்புவாக தோன்றிய கௌமாரியம்மனை பிரதிஷ்டை செய்து வணங்கினார். இதனால் மன்னருக்கு இன்னொரு கண் பார்வையும் கிடைத்தது. வீரபாண்டிய அரசர் இருகோயிலையும் கட்டியதால் வீரபாண்டிய என்று அரசருடைய பெயரும் இந்த இடத்திற்கு உண்டு.  

திருமணம் பாக்கியம் தரும் அம்மன்

மதுரையில் வாழ்ந்து கொண்டு இருந்த நீலாயதஷி  என்ற பெண் சிறந்த அம்மன் பக்தையாக இருந்தாலும் அவளுக்கு திருமணம் வயதை கடந்தும் திருமணம் நடக்கவில்லை என்ற கவலை அவளுடைய பெற்றோர்களுக்கு இருந்தது. கௌமாரியம்மனை வணங்கினால் திருமணம் பாக்கியம் ஏற்படும என்று உறவினர் ஒருவர் கூற, அந்த பெண்ணும் திருகண்ணீஸ்வரமுடையாரையும் கௌமாரியம்மனையும் வணங்கி வந்தாள். இதனால் சில தினங்களிலேயே நீலாயதஷிக்கு திருமணம் நடந்தது.

கௌமாரியம்மனின் அருளால்தான் தன் மகளுக்கு திருமணம் பாக்கியம் ஏற்பட்டது என்பதை உணர்ந்து, கௌமாரியம்மன் ஆலயத்திலேயே திருமணத்தை செய்தார்கள். இன்றுவரை செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டி கொண்டால் அவர்களுக்கு விரைவிலேயெ திருமணபாக்கியம் ஏற்படுகிறது என்கிறது ஸ்தலபுராணம். அதனால் இந்தக் கோயிலில் திருமணம் செய்து கொள்வது தோஷ பரிகாரமாக இருக்கிறது. கௌமாரிஅம்மனின் ஆலயத்தின் தீர்த்ததை எடுத்து வந்து வீட்டில் தெளித்தால் வீட்டில் இருக்கும் துஷ்டசக்திகள் விலகும். சுபி்ட்சம் ஏற்படும். அத்துடன் வயல்வெளியில் தெளித்தால் நல்ல விளைச்சல் ஏற்படுகிறது என்று அனுபவத்தில் உணர்ந்த விவசாயிகள் கூறுகிறார்கள்.   அருள்மிகு கௌமாரியம்மனை வணங்கி எல்லா வளங்களை நாமும் பெறுவோம்.

 

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 12 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »