Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

கண்டத்தை வெல்லும் நீலகண்டன் மந்திரம்

V.G.Krishnarau

ஒரு ஜாதகத்தில் மோச்சதிசை, கண்டதிசை, மாரகதிசை வந்துவிட்டால், அதாவது. லக்கினத்திற்கு 2-க்டையவன் 7-க்குடைவன் பலம் இல்லாமல் இருந்தால், 11-க்குடையவன் திசை நீசம் பெற்று அல்லது நீச்சனுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர்களுக்கு அந்த திசைகள் நடக்கும் போதும், கோச்சாரத்தில் ராகு அல்லது கேது ஜென்மத்தி்ல் இருக்கும் போதும், அவர்களுக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரண வாசல்வரை நிறுத்திவிடும்.

இதற்கு பரிகாரம்

இவர்கள் இதிலிருந்து தப்பிக்க மார்க்கண்டேயன்  வழியை பின்பற்ற வேண்டும். மார்க்கண்டேயன் தன்னை பிடிக்க வந்த யமனிடம் இருந்து யமன் வீசிய பாசக் கயிற்றில் இருந்து தப்பிக்க சிவலிங்கத்தை சேர்த்து கட்டிப்பிடித்தான். சிவனுடைய பாசம், யமனின் பாசக் கயிற்றை பதற வைத்தது. சிவபெருமான் தோன்றி எமனை எட்டி உதைத்தான். மார்க்கண்டேயனுக்கு வந்த மாரகம் ஓடி மறைந்தது.

இதைபடிக்கும் அன்பர்களே ஜோதிடநம்பிக்கை இருப்பவர்களே… நீங்கள் பிரதோஷ தினத்தில் உங்கள் பெயருக்கு சிவன் கோயிலில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். பிடித்த கண்டம் காணாமல் போய்விடும்.

பரிகார மந்திரம்

மேற்கண்ட ஜாதக தோஷத்தில் இருந்து தப்பிக்க தினமும் சிவய வசி, வசிய சிவ என்கிற இந்த மந்திரத்தை 9 தடவை சொல்லுங்கள். காலையிலும் இரவு படுக்கும் முன்னதாகவும் 9 முறை சொல்லுங்கள். நோய், நொடி உங்களை விட்டு நொடியில் நீங்கிவிடும். இந்த மந்திரத்தை சொன்னால் பலன் கிடைத்துவிடுமா? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.

நாம் ஒருவரை நினைக்கும் போது அந்த நபரே நம் எதிரே வந்துவிடுவதேண்டு. அல்லது அந்த நபரே நம்மை தொலைபேசியில் அழைப்பதுண்டு. ஒரு மனிதனை ஒரு மனிதன் நினைக்கும் போது அந்த எண்ணம் டெலிபதியாக செயல்படுகிறது. அதுபோல, இறைவனால் படைக்கப்பட்ட நாம், அந்த இறைவனை நினைத்து பரிகார மந்திரத்தை உச்சரித்தால், கன்று, தாய் பசுவை நினைத்து குரல் தரும்போது தாய் பசு எங்கிருந்தாலும் ஒடி வருவதை போன்று, இறைவனின் நாமத்தை உச்சரித்தால் இறைவன் நம் முன் தோன்றவில்லை என்றாலும் இறைவன் பெயர் கொண்ட யாராவது ஒருவர் உங்களுக்கு உதவ முன் வருவர்.

ஈசனை மனதார பிடியுங்கள். ஏன் என்றால் நான் கண் கூடாக கண்ட அனுபவ உண்மை. என் நண்பர் ஒருவர் பல கோடிகளுக்கு அதிபதி. பெரும் தொழில் அதிபர். அவரும் மேற்கண்ட இந்த மந்திரத்தை உச்சரித்து தனது உடல்நல கோளாறுகளை நீங்கப் பெற்று பலன் அடைந்தார்.  மருந்தை உட்கொள்ளும்போது மருந்தீஸ்வரனையும் வேண்டி உட்கொண்டால் முழு பலன் கிடைக்கும். இதை படிக்கும் அன்பர்கள் வாழ்க வளமுடன்.♦

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 7 2011. Filed under ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »