எதிரியை நடுங்கச் செய்த சிறுத்தொண்டர்
அறுபத்து மூவர் வரலாறு
பகுதி – 11
நிரஞ்சனா
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்
சோழநாட்டில் சிறு நகரம் திருச்செங்காட்டங்குடி. இவ்வூரில் மாமாத்திரர் குலத்தில் பிறந்தவர் பரஞ்சோதியார். இவர் சோழமன்னரிடம் சேனாதிபதியாக இருந்தவர். பரஞ்சோதியார் போர்களத்தில் நின்றாலே எதிரிகள் அஞ்சுவர். எதிர்த்து வரும் எதிரியின் தலைகளை வெட்டி பந்தாடுவார். சோழமன்னரின் ஆட்சிக்கு பெரும் காவலாக இருந்து வந்தார் பரஞ்சோதியார். இதனால் சோழ மன்னர், பரஞ்சோதியார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே வைத்திருந்தார். ஒருநாள் வாதாபி என்ற நகருக்கு சென்று போர் செய்து யானைபடை, குதிரைபடை என்றும் மணிகள், விலை மதிப்பற்ற பொருட்கள் என பல பொக்கிஷங்களை திரட்டி கொண்டு வந்தார். இதை கண்ட சோழ மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.
“வாதாபி நகரத்தையே வீழ்த்திய நீ மாவீரன்.” என்றும், “உனக்கு நீகர் யாரும் இல்லை.” என்றும் மனமார பரஞ்சோதியாரை புகழ்ந்தார். அருகில் இருந்த அமைச்சர் ஒருவர், “அரசே நம் பரஞ்சோதியர் வீரர் மட்டுமல்ல… சிறந்த சிவபக்தர். பக்தர் என்று சொல்வதை விட சிவதொண்டர் என்று கூறுவது மிகையாகாது” என்று பரஞ்சோதியாரை பற்றி புகழ்ந்தார்.
இதை கேட்ட சோழமன்னர், “என்ன சிவதொண்டரையா நான் வேலை வாங்கினேன். பரசோதியாரே.. எம்மை மன்னியுங்கள். பல யுத்த களத்தில் ஒரு சிவதொண்டரையே உயிர்களை கொல்ல அனுப்பினேனே… இப்பாவம் எத்தனை பிறவி எடுத்தாலும் நீங்காதே.” எனக்கு என்று மனம்வருந்தி பேசினார் அரசர்.
“அரசே.. கவலைவேண்டாம். சிவபக்தி என்பது என் தொண்டு. சேனாதிபதி என்பது என் கடமை. செய்யும் தொழிலும் தெய்வம் என்பதே என் நிலை. இதில் எந்த தவறும் சிவ தொண்டுக்கு பங்கமும் நடக்கவில்லை. ஓர் சிவதொண்டனுக்கு நாட்டை பாதுகாக்கும் பணியை தந்த தங்களுக்கு புண்ணியமே சேரும்.” என்றார் பரஞ்சோதியார்.
“நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் என் மனம் கேட்கவில்லை. உங்கள் ஆயுள் முழுவதும் அரசு பணி செய்தால் எவ்வளவு சன்மானமோ அனைத்தையும் இன்றே தருகிறேன். மேலும் உங்கள் சிவதொண்டுக்கு தேவையான பொன்னும் பொருளும் தருகிறேன். அவை என் அன்பு பரிசு. மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்ற அரசர், பரஞ்சோதியாருக்கு சிறப்புகள் செய்து அனுப்பினார்.
பரஞ்சசோதியார் சிவதொண்டை தொடர்ந்து செய்தார். சிவாலயங்களுக்கு திருப்பணியை சிறப்பாக செய்து வந்தார். திருச்செங்காட்டாங்குடியிலுள்ள கணபதீஸ்வரர் பெருமானை தினமும் வழிபட்டு சிவனடியாருக்கு உணவு கொடுத்து உபசரித்த பிறகே, தான் உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார்.
அவரின் அன்பு மனைவி திருவெண்காட்டு நங்கையும், கணவரை போல் சிவபக்தியில் சிறந்து விளங்கினாள். தன் கணவர் அழைத்து வரும் அடியார்களுக்கு அருசுவை உணவும் பழங்களும் தந்து உபசரித்தாள். நம் நாட்டின் சேனாதிபதியாக திகழ்ந்தவர், எவ்வித ஏற்று தாழ்வு பாராமல் அனைவருக்கும் அன்னதானம் அளித்து குறிப்பாக சிவனடியார்களுக்கு உணவு படைத்த பிறகே சாப்பிடுவது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பதை மக்கள் போற்றினார்கள். பரசோதியாரின் சிவதொண்டை பாராட்டி சிறுதொண்டர் பெயர் தந்து என்று புகழ்ந்தனர்.
சிறுத்தொணடரின் மனைவி திருவெண்காட்டு நங்கை கருத்தரித்தாள். ஆனாலும் கணவர் அழைத்து வரும் சிவன்னடியார்களுக்கு உணவு படைத்தபிறகு தன் கணவர் உணவு உண்டயபிறகுதான் தானும் உணவும் உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தாள். இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு வாரிசு பிறந்தது என்ற மகிழ்ச்சியை விட சிவபெருமானுக்கும் சிவதொண்டர்களுக்கும் தொண்டு புரிய நமக்கு ஓர் வாரிசு பிறந்து இருக்கிறானே என்ற மகிழ்ச்சித்தான் சிறுதொண்டருக்கு அதிகமாக இருந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவையே ஓர் திருவிழா போல சிறப்பாக நடத்தினார். சிவன்னடியார்களுக்கு சிறப்புகள் செய்தும், சிவலாயங்களுக்கு அபிஷேகங்களை ஆராதனைகளை திருப்பணிகளை செய்தும், தன் குழந்தைக்கு “சீராளதேவர்” என பெயர் சூட்டினார்.
இப்படி மகிழ்ச்சியாக இருந்த சிறுத்தொண்டர் வாழ்க்கையில் வடதேசத்தில் இருந்து வந்த ஓர் அகோரியால் மிக பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அது என்ன..?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved