புத்திர பாக்கியம் தடை ஏன்?
V.G.Krishnarau, Astrologer
ஒரு ஜாதகத்தில் பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறப்படும் புத்திரஸ்தானம் பலம் பெற்று அமைந்தால் அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. அதாவது புத்திரஸ்தானம் என்பது 5.-ம் இடம். இந்த இடம் அருமையாக அமைந்தால் புத்திரர் பிறப்பது மட்டும் அந்த குழந்தைக்கு நல்ல புகழுடன் வாழ்க்கை அமையும்.
5-ம் இடத்தில் கேது, ராகு,சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால் பூர்வ புண்ணியம் தரும் இடம் பலவீனம் அடைகிறது. அவ்வாறு இருக்கும் ஜாதகத்தில் புத்திர பாக்கியம் தடைப்படுகிறது.
5-ம் இடத்தில் மேற்கண்ட கிரகங்கள் இருந்தாலோ 6,8,12க்கு உரிய கிரகங்கள் சேர்ந்தாலோ ஆண்டவன் அனுகிரகமே.
சிலருக்கு புத்திரர்களால் பல தொல்லைகள் வருகிறதே ஏன் என்று பார்த்தால், 5-க்குரிய கிரகம் நீச்சம் பெற்று இருந்தாலோ அல்லது 6,8,12ல் ஐந்துக்குரிய கிரகமானது மறைந்திருந்தாலோ சனி, செவ்வாய் பார்வை செய்தாலோ புத்திரர்களால் தேவை இல்லாமல் பிரச்சினை வரும். குடும்பத்தில் பிள்ளைகளால் பல இன்னல்கள் நடைபெறும். வயதான காலத்தில் பெற்றோர்களை கவனிப்பார்களா என்றால் அதுவும் ஆண்டவன் விட்ட வழியே.
புத்திரஸ்தானம் என்கிற 5-ம் இடத்தில் சுப கிரகம் அமர்ந்து, அந்த கிரகத்தை குரு பார்த்தால் அருமையான பிள்ளைகள் பிறந்து பெற்றோர்க்கு பெருமை தேடி தருவார்கள்.
பேர் சொல்லும் பிள்ளை பிறக்க ஐந்தாம் இடம் சிறந்து இருக்க வேண்டும். ♦
© 2011 bhakthiplanet.com All Rights Reserved