Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

சினிமா துறையில் ஜெயிக்க வைக்கும் கிரகங்கள்

V.G.KrishnaRau, Astrologer

மக்கள் மத்தியில் எளிதில் செல்வாக்கு பெற இரண்டு துறை இருக்கிறது. ஒன்று அரசியல், மற்றொன்று சினிமாதுறை. இந்த இரண்டு துறைகளும் ஒருவரை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறச்செய்கிறது. சினிமாதுறைக்கு வர எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதில் சிலர்தான் புகழ், பணம் ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை அடைகிறார்கள். அவ்வாறு நல்ல அந்தஸ்தை சினிமாதுறையில் பெற என்னென்ன கிரகங்கள் சாதகமாக ஒருவரின் ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்று ஆராய்வோம்.

ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9,10,11க்குரிய இடத்தில் புதன், சுக்கிரன், சந்திரன், சனி போன்ற கிரகங்கள் இருந்தால் அந்த நபருக்கு கலைதுறையில் ஈடுபாடு வரும். அல்லது 9,10,11ல் சுக்கிரன், புதன் சேர்ந்திருந்தால் அவர்கள் கலைத்துறையில் புகழ் பெறலாம். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படுகிற 5-ம் இடத்தில் சுக்கிரன், புதன் இருந்தாலும் பெறும் புகழ் பெற்ற கலைஞராக திகழ்வர்.

ஜாதகத்தில் சந்திரன், சனி, சுக்கிரன் 5,7,9,11-ல் இருந்தாலும் சினிமாதுறைக்கு செல்லலாம். நல்ல வசீகரத்தை தருகிற கிரகம் சுக்கிரன் ஆகும். பேச்சு வன்மை தருகிற கிரகம் புதன். எந்த துறையிலும் புகழ் தரும் கிரகம் சனி ஆகும். ஒருவருக்கு சிந்தனை தருகிற கிரகம் சந்திரன் ஆகும். ஆக இந்த கிரகங்கள் கூட்டு சேர்ந்த ஜாதகர் அல்லது இந்த கிரகங்கள் நல்ல இடத்தில் உள்ள ஜாதகர் கலைதுறையில் புகழ் பெறுவார்.

லக்கினத்திற்கு 10,11,க்குரிய கிரகங்கள் இணைந்தாலும், ஆனால் அந்த கிரகங்கள் புதன், சுக்கிரன் சந்திரனாக இருக்க வேண்டும். அத்தகைய ஜாதகர்கள் கலைத்துறையில் ஆடம்பர வாழ்க்கையை அடைவார்கள். கலைத்துறையில் புகழ் பெற்ற சில ஜாதகங்களை விரைவில் நமது பக்தி பிளானெட்டில் காண்போம்.♦

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 21 2011. Filed under Home Page special, ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »