மந்திரவாதியை கதிகலங்க செய்த முருகப் பெருமான்
நிரஞ்சனா
வள்ளிமலை சுவாமிகள். முருகப் பெருமானின் அருள் பெற்றவர். முருகப் பெருமானின் மனைவி வள்ளியின் உயிர் தோழியான பொங்கி, இவருக்கு நேரில் காட்சி தந்தாள். லஷ்மி,சரஸ்வதி,பார்வதி எனும் முப்பெரும் தேவிகளின் அம்சமானவள் பொங்கி. ஒருநாள் வள்ளிமலை சுவாமிகள், முருகனை தரிசித்துவிட்டு மலை மேல் இருந்து பக்தர்களுடன் இறங்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது பத்து வயது சிறுமி ஒருத்தி, சுவாமிகளின் முன் வந்து “எனக்கு பசிக்கிறது ஏதாவது கொடுங்கள்“ என்றாள். “என்னிடம் எதுவும் இல்லை பாப்பா“ என்றார் சுவாமிகள். “உன்னிடம் அன்பு கூடவா இல்லை“ என்றாள். இதை கேட்டு அதிர்ச்சியானார் சுவாமிகள். அவரின் கண்களில் கண்ணீர். “தாயே நீ யார்?“ என்று கேட்டு சாஷ்டாங்கமாக அந்த சிறுமியின் காலில் விழுந்தார். அந்த சிறுமி கலகலவென சிரித்து விட்டு, “நான்தான் பொங்கி.“ என்று சொல்லி மறைந்தாள். இதை கண்ட வள்ளிமலை சுவாமிகளும், மற்றும் உடன் இருந்தவர்களும் ஆச்சரியம் அடைந்தார்கள்.
தன்னிடம் பசி என்று வந்தது வள்ளி தேவியின் தோழி பொங்கியா என்ற மகிழ்ச்சியுடன், மெய்சிலிர்த்து போனார் சுவாமிகள். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் பொங்கி, நேரடியாக வள்ளிமலை சுவாமிகளிடம் நேரில் வந்து பேசுவாள். இப்படி முருகனின் அருளும் முப்பெரும் சக்தியின் அவதாரமான பொங்கியின் அன்புக்கும் அடிமையான வள்ளி மலைசுவாமிகளுக்கே செய்வினை செய்தான் ஒரு மந்திரவாதி.
வள்ளிமலை சுவாமிகள் பெங்களூரில் தங்கி, ஜதி வாத்தியத்தை வாசித்து கொண்டு திருப்புகழ் பிரசங்கம் செய்து கொண்டு இருந்தார். எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத அளவில் இனிய குரலில் சொல்லி கொண்டு வந்தார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு மந்திரவாதி, “ஒன்ஸ் மோர்“ என்று கத்தினான். இதை கேட்ட சுவாமிகளுக்கு கோபம் ஏற்பட்டது. “நோ மோர்“ என்றார் சுவாமிகள்.
இதனை அவமானமாக கருதிய மந்திரவாதி, சுவாமிகளுக்கு எதிராக ஏவல் செய்து வள்ளிமலை சுவாமிகளின் கை வீங்கும் படி செய்தான். இதனால் வள்ளிமலை சுவாமிகள் அன்று தொடர்ந்து திருப்புகழ் பாராயணம் செய்ய முடியாது என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த வலியை பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக நிகழ்ச்சியை முடித்தார் சுவாமிகள்.
மறுநாள் காலை அந்த மந்திரவாதி, வள்ளிமலை சுவாமிகள் தங்கி இருந்த வீட்டுக்கு ஓடோடி வந்தான். “சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள். சுவற்றியில் எரிந்த பந்து எரிந்தவனின் பக்கமே திரும்பும் என்பதை அறியாத மூடன் நான். உங்களுக்கு செய்த ஏவல் சூன்யத்தால் என் உடல் முழுவதும் ஊசி குத்தவது போல் இருக்கிறது. இரவெல்லாம் எனக்கு தூக்கமே இல்லை. தண்ணீர் குடித்தாலும் வயிற்றில் ஊசி குத்துவது போல் இருக்கிறது. நான் உங்களுக்கு ஏவிய மூன்று சுழி மந்திரத்தை திரும்ப பெறுகிறேன். நீங்கள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்.“ என்ற கதறிய அந்த மந்திரவாதி, சுவாமிகள் மீது ஏவிய மூன்ற சூழி மந்திரத்தை திரும்பப் பெற்றான்.
“தவறை உணர்ந்தாய். நீ ஏவிய தீய சக்தி மந்திரத்தை என் அப்பன் முருகன் அருளால் என்னால் உன் மந்திரத்தின் சக்தியை நீக்கி இருக்க முடியும். ஆனால் சூரியனின் அருகில் சென்றால் சென்றவன் சாம்பலாவான் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டாமா.? உன் மந்திரம் பெரிதா என் மகேசனின் மகன் பெரியவனா என்பதை நீ அறிய வேண்டாமா? அதற்காகதான் என் வலியை பொறுத்துக்கொண்டு காத்திருந்தேன். நீ செய்த துன்பத்திலும் எனக்கு ஒரு உண்மை விளங்கியது. என்னுடனே என் முருகப் பெருமான் இருக்கிறான் என்பதை மீண்டும் நான் உணர்ந்தேன். இறைவனை நம்புகிறவர்களுக்கு எந்த ஆபத்தும் வாராது. அப்படியே வந்தாலும் நிச்சயம் அதற்கு தீர்வு கிடைத்து விடும்.“ என்று மந்திரவாதியிடம் கூறிய வள்ளிமலை சுவாமிகள், விபூதியை எடுத்து மந்திர உச்சாடனம் செய்து, “இந்தா பிடி. இந்த திருநீறு உனக்கு மருந்து.“ என்று தனக்கு கெடுதல் நினைத்த அந்த மந்திரவாதியை மன்னித்து அருளினார். அந்த விபூதியை பெற்று தன் உடல் முழுவதும் பூசிய நிமிடமே மந்திரவாதியின் உடலில் இருந்த வலி நீங்கியது. வள்ளிமலை சுவாமிகளின் காலில் விழுந்து அவருக்கு நன்றி சொன்னான். முருகனின் அருள் இருப்பவருக்கு துன்பம் செய்தவனே துவண்டு போவான். முருகப் பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் எப்போதும் உண்டு.
© bhakthiplanet.com All Rights Reserved
ur post is super. miga nandraga ullathu.
வள்ளிமலை சுவாமிகளை பற்றி தொடர் எழுதுங்கள் நிரஞ்சனா. நீங்கள் மிக சிறந்த ஆன்மிக எழுத்தாளர்.
நிரஞ்சனா மேடம்… உங்கள் கட்டுரை தினம் தினம் சிறப்பாக இருக்கிறது. ஆன்மிகத்தில் நிறைய விஷயங்கள் தெரிந்து உள்ளீர்கள்.
Your writings are very different.. super
வள்ளி மலை சுவாமிகளின் வாழ்கையின் ஒரு நிகழ்வு பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றி, முருக பெருமானின் ஆசி விசேஷமானது! வெற்றி வேல்!
Congratulations Its simply wonderful