Saturday 28th December 2024

தலைப்புச் செய்தி :

ஜாதகப்படி மன சஞ்சலத்தோடு இருப்பவர்கள் யார்?

Astrologer, V.G.KrishnaRau

இறைவன், சொத்து சுகம் எல்லாம் தந்திருக்கிறான். ஆனால் என்னவோ மனசு மட்டும் சரியாக இல்லை. ஏதோ ஒரு குழப்பம்.

இப்படி சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். 

நல்ல வியபாரம். இரண்டு கார். நாலு வீடு. பாங்க் பேலஸில் குறைவில்லை. பிறகு இப்படிபட்டவர்களுக்கு என்ன கஷ்டம் என்று கேட்டால், குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லை, வேதனைபடுகிறார்கள். அதனால் ஏற்படும் சஞ்சலம் கொஞ்ச நஞ்சம் இல்லை.

எல்லாம் இருக்கிறது. பெரிய நிறுவனம்தான். ஏற்றுமதி இறக்குமதி தொழில். மேலும் சேர்ந்த பணம் வைக்க கூட இடமில்லை. ஆனால் பிள்ளைகள் சரியில்லை. மனசு பாதிக்கிறது.

லட்சுமியே அவர் வீட்டில் பாய் விரித்து உட்காந்துவிட்டாள். கேட்க வேண்டுமா? பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்கிறது. ஆனால் கவலை அவரை வறுத்து எடுக்கிறது. மனசு சதா சஞ்சலத்தோடு அலைபாய்கிறது. காரணம் என்ன?. மருமகன் தொல்லை. தினம் தினம் வந்து ஒப்பாரி வைக்கிறாள் பெற்றமகள்.

இப்படி மனசை சஞ்சலப்படுத்துவது ஜோதிட ரீதியாக எந்த கிரகம்?. அது சந்திரன். ஆம்…, நவகிரகங்களில் சந்திரன் மனக்காரகன் என்பார்கள். மனசை ஆட்டி வைப்பவன் சந்திரன். அவன் நம் ஜாதகத்தில் சரியான இடத்தில் அமைந்திருக்கவில்லை என்றால், அரச வாழ்க்கையாக இருந்தாலும் அங்கும் இங்கும் ஏதோ சிந்தித்து அலைந்துக் கொண்டே இருப்பான்.

சந்திரன் நீச்சம் பெற்று இருந்தால், அவன் லக்கினத்திற்கு 6.8.12.ல் மறைந்து இருந்தால் அவனோடு பாவிகள் எனப்படும் சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்களில் ஒன்று சேர்ந்திருந்தாலும், கேந்திரத்தில் நின்றாலும் அல்லது பார்த்தாலும் அவர்கள் அலைபாயும் மனதோடுதான் இருப்பார்கள்.

சிலர் கேள்வி கேட்பார்கள். யாருக்குதான் கவலை இல்லை? என்று.

கவலை என்பது வேறு சஞ்சலம் என்பது வேறு. தனிமையில் இருந்தால் கவலை. நண்பர்கள் பல விஷயங்களை வேடிக்கையாக பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களில் ஒருவன் மட்டும் ஏதோ யோசனையில் இருந்தால், அவன்தான் சஞ்சலன்.

கவலை என்பது வெளியே ஏற்பட்ட காயம். சஞ்சலம் என்பது உள்ளே மனதில் ஏற்படுகிற காயம்.

மருமகன் தொல்லை கொடுத்து கொண்டிருந்தான். பணம் வேண்டும். பணம் வேண்டும் என்று நச்சரித்தான். கொடுத்து தொலைத்தேன் கவலைவிட்டது. – இது கவலையானர் சொல்வது.

பணம் வாங்கி சென்ற மாப்பிள்ளை அந்த பணத்தில் வியபாரம் செய்வானோ – யாரிடமாவது ஏமாந்து போவானே – வந்தவரைக்கும் லாபம் என்று ஓடி விடுவானோ – கொடுத்த பணம் திரும்ப வருமோ. – சஞ்சலயாளர் யோசிப்பது.

நம் கடமையை செய்துவிட்டோம். இனி நடப்பது நடக்கட்டும் என்கிற தெளிவு இருக்காது.

லக்கினத்திற்கு இரண்டில் சந்திரன், பாவிகள் உடன் சேர்ந்து அமர்ந்திருந்தால், கோடி கோடியாக பணம் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது – சஞ்சலம்தான்.

5.-ல் சந்திரன் பாவிகளுடன் இணைந்திருந்தால், புத்திரர்களால் சஞ்சலம் உண்டாகும்.

7-ல் சந்திரன் பாவிகளுடன் இணைந்திருந்தால் மனைவியால் – கூட்டாளிகளால் சஞ்சலம் உண்டாகும்.

9-ல் சந்திரன் பாவிகளுடன் சேர்ந்திருந்தால் சொத்து விஷயத்தில் (பாக்கியம்) சஞ்சலம் உண்டாகும்.

11-ல் சந்திரன் பாவிகளுடன் இணைந்திருந்தால் மருமகள் – மருமகனால் சஞ்சலம வரும்.

மற்றபடி சந்திரன் மறையாமல் பாவிகளுடன் சேராமல் குரு பார்வை – சேர்க்கை பெற்றிருந்தால் அவர்கள் சஞ்சலப்பட மாட்டார்கள். அவர்கள்தான் தெளிவான சிந்தனை கொண்ட மனிதர்கள்.

 

Consult your Astrologer,

E-mail: astrokrishnarao@gmail.com

 

 

 

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 24 2011. Filed under Home Page special, ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »