Sunday 17th November 2024

தலைப்புச் செய்தி :

அமைதியான மருமகள் எந்த மாமியாருக்கு அமைவாள்.?

Astrologer,

V.G.Krishnarau

எந்த வீட்டில்தான் மாமியார் – மருமகள் சச்சரவு இல்லை.? அப்படி இருந்தால்தான் அது மாமியார் –மருமகள் இருக்கிற வீடு என்கிற நிலைதான் எங்கும் இருக்கிறது. கணவன் – மனைவி அமைவதெல்லாம் இறைவன் தருகிற வரம். அப்படியே அமைதியான மருமகள் அமைவதும் ஒரு மகனின் தாய்க்கு பூர்வ ஜென்ம புண்ணியம்தான். நல்ல அன்பான மருமகள் அமைய வேண்டும் என்று விரும்புகிற மாமியார்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை என்றார் கவியரசர். ஆம்… தனக்கு வரப்போகும் மருமகள் அன்பாக, பண்பாக இருக்க வேண்டும் என்று கனவுகாணும் மாமியார்களே… உங்கள் ஜாதகத்தில் அத்தகைய பாக்கியம் இருந்தால்தான் அப்படி அமையும். உங்கள் ஜாதகத்தில் 11-ம் இடம் (லாபஸ்தானம்) சுபர் வீடாக இருக்க வேண்டும்.

11-ம் இடத்தில் அசுபகிரகங்கள் என்று சொல்லக் கூடிய இராகு, கேது, சூரியன், செவ்வாய் – சனி இவர்களில் ஒருவர் அமர்ந்தால் கூட தண்ணீரில் எண்ணெய் எப்படி சேராதோ அதுபோல, வீட்டுக்கு மருமகளாக வரப் போகிற பெண் அடங்கி அன்பாக உங்களை நடத்துவாள் என நினைப்பது கனவுதான்.

11-ல் பாபி எனப்படும் கிரகங்கள் அமர்ந்து, அந்த கிரகத்தோடு 6,8,12.க்குரிய கிரகமும் உடன் இணைந்தால் மாமியாரை பார்த்து, “மாமி… நீ யார்.?“ என்று கேட்கும் மருமகளே அமைவாள். மருமகளிடம் மதிப்பு எதிர்பார்த்த அளவு வராது. 

11-ம் இடத்தை 9-க்குரியவன், 5.க்குக்குரியவன் பார்த்தாலோ அல்லது குரு பார்த்தாலோ, தன் மாமியாரின் பெருமை பாடும் பெண் மருமகளாக அமைவாள். ஆகவே ஆண் பிள்ளையை பெற்ற தாய்மார்களே… உங்கள் பேச்சை கேட்காமல் வம்பு செய்யும் மருமகளை குறை சொல்லாதீர்கள். உங்கள் ஜாதகத்தில் 11-ம் இடம் தோஷத்தில் அமைந்ததால் அந்த நிலை என உணர்ந்து, உங்கள் மருமகளிடம் அடங்கி போவதுதான் உங்கள் மகனுக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது.♦

 

Astrologer,

V.G.Krishnarau,

(M) 98411 64648

E-mail: astrokrishnarao@gmail.com

 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on May 14 2011. Filed under Photo Gallery, ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech