விரோதிகளை அடக்கும் சக்தி தரும் சாளக்கிராமம் – சுதர்சன சக்கரம்
நிரஞ்சனா
சாளக்கிராமம் உருவான கதையை பல பேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவ – விஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது. அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும் பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்று பயந்தார்கள் தேவர்கள். இவர்களின் மன பயத்தை புரிந்து கொண்ட விஷ்ணுபகவான், மோகினி உருவம் எடுத்து அசுரர்களின் மனதை திசை திருப்பினார். விஷ்ணு பகவான் எப்படி அசுரர்களை சமாளிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள சிவபெருமான அந்த இடத்திற்கு வந்தார். மோகினி, அசுரர்களை மட்டும் கவரவில்லை சிவனையும் கவர்ந்தாள். சிவனின் கை மோகினின் மேல்பட்டவுடன் நாணமுற்றாள் மோகினி. அப்போது, கண்டகி என்ற நதி உருவானது.
அந்த நதி நீரில் வஜ்ரதந்தம் என்ற புழுக்கள் உருவாகி, அங்கு இருக்கின்ற களிமண்ணை கொண்டு கூடு கட்டிக் வாழ்கிறது. அந்த புழுக்கள், கண்டகி நதியில் கலந்து இறந்துவிடும். சிலர் வலை வீசி புழுக்கூடுகள் நடுவில் இருக்கும் பொன்னை மட்டும் எடு்த்து கொண்டு கூடுகளை விட்டுவிடுவார்கள் அந்த புழு கூடுகளே இப்போது சாளக்கிராமமென்று அழைக்கப்படுகிறது. சிவ – விஷ்ணுவின் அருளால் உருவானதே சாளக்கிராமம்.
சாளக்கிராமம் இருக்க வேண்டிய நிறம்ங்கள் –
நீலநிற சாளக்கிராமம் செல்வத்தை கொடுக்கும் – பச்சை நிறம் ஆராக்கியத்தையும் – கறுப்பு நிறம் நல்ல புகழையும் – பொன் நிற சாளக்கிராமம் விரோதிகளை அடக்கும் சக்தி ஏற்படுத்தும் – சாம்பல் நிற சாளக்கிராமம் பூஜைக்கு ஏற்றது அல்ல. வீட்டிலும் வைத்து பூஜிக்கக்கூடாது. சாளக்கிராமத்தை தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும். சாளக்கிராமத்தை வியபாரம் செய்யும் சில வியபாரிகளே தினமும் சாளக்கிராமத்தின் மீது தணணீர் தெளித்து பூக்களை இறைப்பார்கள்.
சாளக்கிராமத்தை தினமும் அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்து கொண்டால், எந்தவித தோஷமும் அண்டாது. சிவனாலும் விஷ்ணுவினாலும் படைக்கப்பட்ட சாளகிராமத்தை வைத்து பூஜை செய்தால் சகல செல்வங்களுக்கும் அதிபதியாகலாம்.
சிவ சஹஸ்ர நாமமும் சுதர்சன சக்கரமும்
ஒருசமயம் அசுரர்களுக்கு பலம் அதிகமானது. அதனால் முனிவர்களை ஆட்டிப்படைத்தார்கள். அசுரர்களின் தொல்லை தாங்காமல் முனிவர்கள் விஷ்ணுபகவானிடம் முறையிட்டார்கள். குழந்தைகள் படும் கஷ்டத்தை எந்த தாயாவது பார்த்துக் கொண்டே இருப்பாளா? தாய் உள்ளத்தை விடவும் மென்மையான உள்ளம் கொண்ட விஷ்ணுபகவான், சிவனை நினைத்து கடும் தவம் இருந்தார். அந்த தவத்தை ஏற்று சர்வேஸ்வரன், பரந்தாமனுக்கு காட்சி கொடுத்தார். ஈசனைக் கண்ட பகவான் சிவ சஹஸ்ரநாமத்தை மகிழ்ச்சியுடன் உச்சரித்தார்.
அந்த சிவநாமங்களைக் கேட்ட பரமசிவன், பரம ஆனந்தம் அடைந்து சுதர்சன ஆயுதத்தைத் கொடுத்தார். அந்த ஆயுதமே சுதர்சனச் சக்கரமாகத் திகழ்கிறது. யுகம் யுகமாக நம் முன்னோர்கள் திருமாலின் திருக்கரத்துச் சக்கரத்தினையும் பூஜிக்கிறார்கள். “உன்னால் இயற்றப்பட்ட சிவ சஹஸ்ரநாமத்தை கேட்பவருக்கும், அதை உச்சரிப்பவர்களுக்கும் சகல தோஷங்களும் விலகும். எதிரிகளால் ஏற்படும் ஆபத்துகளும் நீங்கும். அதேபோல் உனக்குச் சொந்தமான சுதர்சன சக்கரத்தை பூஜிப்பவர்களுக்கு சகல பாவங்கள் அகலும். உயர்ந்த வாழ்க்கையும் ஏற்றமும் ஏற்படும்.“ என்று பரந்தாமனுக்குப் பரமன் ஆசியளித்தார். இப்படி சிவனும் – விஷ்ணுவும் ஒருவரே என்பதை எடுத்துக்காட்டவே சாளக்கிராமம் – சுதர்சன சக்கரமும் – சிவ சஹஸ்ர நாமமும் விளங்குகிறது. இப்படி இரு சக்திகளும் அவற்றினுள் இருப்பதால் அதனை நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கு ஏற்றங்கள் பல கிடைக்கும்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
ஒரு கட்டுரையில் சாளகிராமம் பற்றியும் சுதர்சன சக்கரம் பற்றியும் எழுதியது நன்றாக இருந்தது.
ஒரு கட்டுரையில் சாளகிராமம் பற்றியும் சுதர்சன சக்கரம் பற்றியும் எழுதியது நன்றாக இருந்தது.