Saturday 16th November 2024

தலைப்புச் செய்தி :

எந்த யோகத்தையும் அனுபவிக்கவிடாத செய்வினை

நிரஞ்சனா

பில்லி – சூனியம் உண்மையா என்ற சந்தேகம் பலர் மனதில் காலம் காலமாக இருக்கிறது. முன் ஜென்மத்தில் செய்த வினைதான் இந்த ஜென்மத்தில் செய்வினையாக வருகிறது என்றும் அதைதான் நாம் யாரோ நமக்கு செய்த செய்வினை என்கிறோம், அது மூடநம்பிக்கை என்பதும் சிலர் கருத்தாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நம் முன் முற்பிறவி கர்மவினையும் இந்த பிறவியில் நம் எதிரிகளால் செய்யப்படும் துஷ்ட பூஜைகளும் இணைந்தால் அதுவே செய்வினையாகும்.

செய்வினையால் பாதிப்பு அடைந்தவரின் உண்மை சம்பவம் இது.

தனநன்தன் என்ற பேரரசனுடைய சேனாதிபதி ஒரு காட்டின் வழியாக வந்து கொண்டு இருந்தார். வந்தவர் பாதை மறந்தார். யாரிடம் இந்த காட்டில் வழி கேட்பது? என்ற சிந்தனையில் இருந்தபோது அவர் எதிரில் விஷ்ணுகுப்தன் என்ற அந்தணர் வந்துக் கொண்டு இருந்தார். அவரிடம், அரண்மனைக்கு செல்லும் வழியை கேட்டார் சேனாதிபதி.

“நானும் அந்த ஊருக்குத்தான் செல்கிறேன். வாருங்கள் என்னுடன்.“ என்று அழைத்து கொண்டு சாஸ்திரங்களை பற்றியும், சமுதாய விழிப்புணர்ச்சி போன்ற பல தகவல்களை சுவாரசியமாக பேசிக் கொண்டே ஊருக்கு வந்தடைந்தார்கள் இருவரும். “அந்தணரே உன் முக தோற்றமும் தேக தோற்றமும் அழகுடன் இல்லை என்றாலும், பல விஷயங்களையும் சாஸ்திரங்களையும் நன்றாக தெரிந்த அந்தணராக இருக்கிறாய். பலே நீ புத்திசாலிதான்.“ என்று சேனாதிபதி மனமாற விஷ்ணுகுப்தரை பாராட்டினார். அத்துடன், “நாளை அரண்மனைக்கு வா. அரசு விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அரசரும் கலந்து கொள்ள இருக்கிறார். உன்னை அரசரிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்.“ என்று கூறினார் சேனாதிபதி.

மறுநாள் அரண்மனை விருந்து நிகழ்சிக்கு வந்தார் விஷ்ணுகுப்தர். விருந்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் பலர். அப்போது அரசர் அமரும் இடம் என்று தெரியாத விஷ்ணுகுப்தர், அந்த இடத்தில் அமர்ந்து உணவில் கைவைக்கும் போது, திடீரென அந்த நேரத்தில் அரசர் கோபமாக குப்தனை பார்த்து, “டேய்… எழுந்திரு. யார் உன்னை அழைத்தது.“ என்று கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இதை கேட்டு ஓடி வந்த சேனாதிபதி, “மன்னிக்க வேண்டும் மன்னா… நானே இந்த அந்தணரை விருந்துக்கு அழைத்தேன். இவர் பல சாஸ்திரங்களை நன்கு கற்றவர்.“ என்று எவ்வளவோ விஷ்ணுகுப்தரை பற்றிய பெருமைகளை எடுத்து சொல்லியும், அரசர் தனநன்தன் கேட்பதாக இல்லை.

இதனால் அந்தணர் விஷ்ணுகுப்தர் கடும் ஆத்திரம் அடைந்தார். “பலர் முன்னிலையில் அரசன் என்கிற அகம்பாவத்தில் நீ என்னை அவமானப்படுத்திவிட்டாய். உன்னை இதே அரசப்பதவியில் இருந்து வீழ்த்தி காட்டுகிறேன்.  இது சபதம்.“ என்று கூறிவிட்டு வெளியேரினார் விஷ்ணுகுப்தர்.

“சாதாரண அந்தணனாக இருக்கும் எவனோ இவன், அரசனாகிய என்னை வீழ்த்த போகிறானாம். பைத்தியகாரன்.“ என்று சிரித்து கொண்டே சென்றார் அரசர் தனநன்தன். பிறகு அந்தணர் விஷ்ணுகுப்தரையும் நடந்த சம்பவங்களையும் அரசின் பல அலுவலுக்கிடையே மறந்தே போனார் அரசர்.  

ஆனால் விஷ்ணுகுப்தர் அந்த அவமானங்களை மறக்கவில்லை. “அரசனை என்ன செய்யலாம்? படைபலத்துடன் சென்று அரசனை வீழ்த்துவது நடக்காத காரியம். நேருக்கு நேர் மோதுவதும் வம்பில் முடியும். மற்ற எதிரி நாடுகளை தூண்டிவிட்டாலோ அரசன் தனநன்தன் சாமர்த்தியன் – தந்திரி தப்பிவிடுவான். ஆனால் அவன் தப்ப முடியாத ஓரே ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை வீசினால் அவன் என்ன அரசன்? எவனாக இருந்தாலும்  அவர்களுக்கு அது எமன். ஆம்… செய்வினைதான் ஒரேவழி.“ என்ற முடிவுக்கு வந்தார் அந்தணர் விஷ்ணுகுப்தர்.

விஷ்ணுகுப்தர் வைத்த செய்வினை பலித்ததா? ஸ்ரீஆதிசங்கரருக்கும் செய்வினை வைத்தார்கள்.

                    இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்    

 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 20 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

1 Comment for “எந்த யோகத்தையும் அனுபவிக்கவிடாத செய்வினை”

  1. Amudha

    Nice article i appreciate it

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech