Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

அடங்காத மனைவி யாருக்கு?

Astrologer,

V.G.Krishnarau,

(M) 98411 64648

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பெரியோர் கூறுவார்கள். இது உண்மைதான். நாம் என்னதான் முயன்றாலும் நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தேடினாலும் முரட்டு குணமும் மூர்க்க எண்ணமும் கொண்ட மனைவி அமைந்து விடுவது விதி செய்யும் சதியே.

சரி… யாருக்கு முரட்டு மனைவி அமைகிறது.? என்று சற்று ஜோதிடத்தை ஆராய்ந்தால், ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ல் சனி இருந்தாலோ, லக்கினத்தில் சனி இருந்தாலோ, லக்கினத்தில் செவ்வாய் அல்லது 7-ல் செவ்வாய் இதில் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் இப்படிபட்ட ஜாதகனுக்கு (ஆணுக்கு) முரண்டு பிடிக்கும் – பிடிவாதம் – முன்கோபம் கொண்ட எப்போதும் எவரையும் எதிர்த்து பேசுகிற மனைவி அமைவாள்.

7-க்குடையவன் சனியாகவோ, செவ்வாயாகவோ இருந்தால் அதுவும் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்தால் தினமும் சண்டை சச்சரவுதான்.

7-க்குடையவன் நீச்சம் பெற்று அவனுடன் பாபி சேர்ந்தால் குடும்பத்தில் தினமும் சுனாமிதான்.

பொதுவாக 7-க்குடையவன் சுபராக இருந்தால் அந்த ஜாதகருக்கு நன்மையே செய்வான். அல்லது சுபர் பார்வை பெற்றாலும் நன்மைதான். மணமகன்களே… உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தை பாருங்கள். அதனுடைய பலனை அறிந்து கொள்ளுங்கள்.

கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நின்றுக் கொண்டு அய்யோ சூடுகிறதே என்றால் சுடத்தான் செய்யும்.

அதுபோல உங்கள் ஜாதகம் என்னவோ அப்படிதான் மனைவி அமைவாள்.

Click For English Version

©2011 bhakthiplanet.com All Rights Reserved

Posted by on Apr 7 2011. Filed under ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

1 Comment for “அடங்காத மனைவி யாருக்கு?”

  1. Ragav

    We loved your writing style,  keep at it for us all!

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »