Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

பிள்ளைகள் பட்டப் படிப்பு படிப்பார்களா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பெரிய உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்று எண்ணாத பெற்றோர்கள் உண்டா ?.

அப்படி எண்ணியதை போல பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பட்டதாரி ஆவார்களா?

எண்ணிய எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் பிள்ளைகளின் ஜாதகத்தில் 4-ம் இடம் 9-ம் இடம் பலமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வாத்தியார் பிள்ளையாக இருந்தாலும் வாத்துதான்.

4 -ம் இடம் – கல்வி, வாகனம், தாயார் போன்ற விஷயங்களை அறிய வைக்கும் இடம். அதுபோல், 9-ம் இடத்தை முக்கியமாக பாக்கியம் என்று கூறப்படும் சொத்து – சுகங்கள் பிள்ளைகளின் நற்குணம், உயர் கல்வி போன்றவற்றை தெரிவிக்கும் இடம். இந்த இரண்டு இடங்களும் பலமாக இருந்தால், அதாவது லக்கினாதிபதி – ஐந்துக்குடையவன் போன்றவர்கள் மேற்கண்ட இடங்களில் ஒருவரின் ஜாதகத்தில் அமர்ந்திருந்தால் நிச்சயம் கல்வி உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் சனி, ராகு, கேது இருந்தாலும் சுபர் பார்வை இல்லாமல் இருந்தாலும் கல்வி தடைபடும். கல்வியில் தள்ளு – தள்ளு என்று இவர்களை தள்ளிக் கொண்டு போக வேண்டும்.

உதாரணம் – மீன லக்கினம், 5க்குரிய சந்திரன் 9-ல் விருச்சிகத்தில் இருந்தால் உயர் கல்வி உண்டு.

சிம்ம லக்கினம், 4க்குரிய செவ்வாய் 9.-ல் இருந்தாலும் குரு பார்வை பார்த்தாலும் உயர் கல்வி உண்டு. குறிப்பாக 4.-ம் இடத்தில் 9.-ம் இடத்தில் 12.-க்குரிய கிரகம், 8க்குரிய கிரகம் அமர்வது நன்மை இல்லை. கல்வி தடை செய்யும்.

ஆகவே பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களே… உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் 4-ம்இடம், 9-ம் இடம் பலமாக இருந்தால் பயம் வேண்டாம். உயர் கல்வி உண்டு. புகழோடு வாழ்வார்கள்.♦

Click For EnglishVersion

Astrologer,

V.G. Krishna rau,

(M) 98411 64648

E-Mail: astrokrishnarao@gmail.com

Posted by on Mar 28 2011. Filed under ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

1 Comment for “பிள்ளைகள் பட்டப் படிப்பு படிப்பார்களா?”

  1. Gayathri shankar

    அய்யா கட்டுரை நன்றாக உள்ளது. என் மகன் நன்றாகதான் படிப்பான்.ஆனால் சில நாட்களாக சரியாக படிப்பதில்லை. அதற்கு பரிகாரம் உள்ளதா.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »