“பாபா மகிமை சொன்ன மகாசக்தி“ – மகான் சீரடி பாபா வரலாறு – பகுதி 4
மகான் சீரடி பாபா வரலாறு
பகுதி 4
நிரஞ்சனா
யாராலும் தீர்வு கிடைக்காவிட்டால் அவர்கள் இறைவனால் கைவிடப்பட்டவர்கள் என்று நினைக்கக் கூடாது. தெய்வத்தின் குழந்தைகளான நம்மை காக்க தெய்வமே அவதாரம் எடுத்து வருவார். ஆம்… அப்படிதான் மருத்துவரால் கைவிடப்பட்ட ஈரானிய பெண்ணே ஓர் உதாரணம். அந்த பெண்மணிக்கு உடல் நலம் இல்லாமல் எத்தனையோ மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும் பல மருத்துவர்களை பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாள்பட நாள்பட வியாதி அதிகம் ஆனது. அந்த பெண்ணுக்கு. அவளுக்கு வலிப்பு வந்தால் எல்லோருக்கும் பயம் ஏற்படும். அந்த அளவுக்கு அவள் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கும். பற்களால் நாக்கை கடித்து கொள்வதால் ரத்தம் வடிய ஆரம்பிக்கும். அத்துடன் கை, கால்களை இழுத்து கொண்டு பார்ப்பவர்களுக்கு பயமாகவும், பரிதாபமாகவும் இருக்கும்.
இந்த கொடுமை ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல, பல வருடங்களாக அந்த பெண்மணி இந்த வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாள். அந்த பெண்மணியிடம், “நீங்கள் ஏன் சீரடி பாபாவை சந்திக்க கூடாது?“ என்று ஆலோசனை கூறினார்கள் அக்கம் பக்கத்தினர். திக்கற்றவனுக்கு தெய்வம்தானே துணை. பாபாவாலும் தன் நோயை குணப்படுத்த முடியாவிட்டால் இறப்பதே மேல் என்ற முடிவுடன் சீரடிக்கு சென்று பாபாவிடம் சரண் அடைந்தாள். “மணிக்கு ஒருமுறை ஊதியை தண்ணீரில் கரைத்து குடித்து கொண்டு வா“ என்றார் பாபா. என்ன ஆச்சரியம்… நோய் வந்த பெண்மணியை போல் இல்லாமல் உடல் வலிமை பெற்று முகத்தில் புது பொலிவோடு பூரண நலம் பெற்றாள் அந்த பெண்மணி. இப்படி பாபாவின் மகிமைகள் பல.
பாபாவை வணங்கினால் இன்னல்கள் தீரும் என்று மனிதர்கள் சொன்னால் அது பக்தி. ஆனால் இறைவியே சொன்னால் அந்த மகானின் சக்தியை. ஆம்… வாணி என்ற ஊரில் ஸ்ரீசப்த ஷிரிங்கி தேவி ஆலயம் இருக்கிறது. எப்போதும் தேவியே துணை என்று எண்ணாலும் உச்சரித்து கொண்டே இருப்பார் காகாஜி வைத்யா என்பவர். இருந்தாலும் அவருக்கு இருந்த கஷ்டம் – பிரச்சனைகள் தீரவே இல்லை. ஒருநாள் விரக்தியின் எல்லைக்கே சென்றார் காகாஜி.
“தேவியே…. உன்னை நாள் தவறாமல் வணங்கியதால் எந்த நற்பலனும் அடையவில்லை. எத்தனை விரதம்? எத்தனை பூஜைகள்? இத்தனையும் செய்தும் என் மேல் உனக்கு கருனையே இல்லையா?“ என்று மனம் கலங்கி அழுதார்.
மன கவலையுடன் ஆலயத்தை விட்டு இல்லத்திற்கு சென்றார். எதுவும் சாப்பிடாமல் ஆழ்ந்த வருத்தத்துடன் உறங்கினார். எது எது யார் யார் மூலமாக தீர்வு வர வேண்டுமோ அவர் மூலமாக தான் நன்மை கிடைக்கும். சுக்கீரிவன் மூலமாக இராமனுக்கு தீர்வு. விநாயகர் மூலமாக பராசக்திக்கு தீர்வு. அன்னபூரணியால் சிவனுக்கு தீர்வு.
“இன்னார் பிரச்சனை தீர வேண்டும் என்பது விதி இருந்தால் அதை வேறு ஒருவரால் மாற்ற முடியாது. உன் கஷ்டம் போக என்னை வணங்குவதை விட சீரடி சென்று பாபாவை வணங்கு“ என்று காகாஜி கனவில் சக்திதேவி கூறி மறைந்தாள். தூக்கத்தில் இருந்து விழித்து, தான் கண்ட கனவை தன் மனைவியிடம் கூறினார். “பாபா இஸ்லாமியர். அவர் மசூதியில் இருக்கிறார். நாமோ அந்தணர். நம்மை எப்படி மசூதிக்குள் அனுமதிப்பார்கள். மனதளவில் பாபாவை வணங்கினால் உங்கள் கனவில் சக்தி தேவி கூறியது போல் நிச்சயம் நல்ல வழி பிறக்கும்“ என்றாள் காகாஜியின் மனைவி.
ஜாதி மதம் பார்க்க மாட்டார் பாபா. இது காகாஜிக்கு தெரியாதா? அல்லது அவர் விதி விடவில்லையோ, என்ன சொல்வது? விதியை அனுபவித்துதானே தீர வேண்டும்.
பல மாதமாக மனதாலேயே பாபாவை பூஜித்தார் காகாஜி. யாரை பற்றி அதிகம் நினைக்கிறோமோ ஒருநாள் இல்லை என்றாலும் ஒருநாள் அவர்களை பார்த்தே தீர்வோம். இதை டெலிபதி என்பார்கள்.
ஆம்.. பாபாவின் பக்தரான ஷாமா தன் குலதெய்வமான ஸ்ரீசப்த ஷிரிங்கி தேவியை குடும்பத்துடன் வணங்க வேண்டும் என்று நினைத்து வாணி ஊருக்கு சென்றார். ஊர் வந்தடைய இரவு ஆனது. இதனால் கோவில் பூட்டி இருந்தது. எங்கு போவது? எங்கு தங்குவது? தனியாக வந்திருந்தாலாவது ஆலயத்தின் வாசலிலேயே உறங்கி இருந்திருக்கலாம். ஆனால் மனைவி, குழந்தைகளை இந்த நடு ராத்திரிவேளையில் எங்கு தங்க வைப்பது? என்ற கவலையில் இருந்தார் ஷாமா.
ஹுமாயூன் போர் களத்தில் எதிரிகளால் துரத்தியடிக்கப்பட்டு தப்பித்தால் போதும் என்ற பயத்தில் கற்பவதியாக இருக்கும் தன் மனைவியை அழைத்து கொண்டு பாலைவனத்தில் தங்கினார். அப்போது “எனக்கு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது“ என்றாள் ஹுமாயூன் மனைவி ஹமீதா. “அரசராக இருந்தும் மனைவி கேட்ட சாதாரண மாதுளம் பழத்தை கூட வாங்கி கொடுக்க முடியவில்லையே… அல்லா… இது என்ன சோதனை?“ என்று விரக்தியடைந்தார் ஹுமாயூன். நல்லோர் கவலைக்கு உடனே தீர்வு கிடைக்கும் என்பது விதி. குடிக்க கூட தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் ஒட்டகத்தில் மாதுளம் பழ வியபாரி ஹுமாயூன் எதிரில் வந்து கொண்டு இருந்தார். வரும் பழ வியபாரியை பார்த்தவுடன் இந்த பாலைவனத்தில் பழ வியபாரியா? என்று அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார் ஹுமாயூன்.
கோவிலில் தீ மிதி விழா நடக்கும் போது தீயில் கால் வைக்கும் முன் சிறிது மழை துளி வரும். இதில் இருந்து என்ன தெரிகிறது? நம்முடைய ஒவ்வோரு செயலையும் இறைவன் பார்த்து கொண்டுதான் இருக்கிறார் என்பதுதான்.
ஷாமாவின் கவலையை போக்க பாபாவே காகாஜியை அனுப்பினாரா? “வயிறு சரியில்லை… சிறிது தூரம் நடந்துவிட்டு வருகிறேன்.“ என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு காகாஜி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது கோவில் வாசலில் குடும்பத்தோடு யாரோ இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் அவர் அருகில் சென்று விசாரித்தார் காகாஜி. ஷாமா, பாபாவின் பக்தர் என்பதை விசாரிப்பில் தெரிந்து கொண்டு, தன் இல்லத்திற்கு அழைத்து சென்று உணவு கொடுத்து தங்க வைத்தார் காகாஜி. சக்திதேவி தன் கனவில் வந்ததை பற்றியும் பாபாவை தரிசிக்கும் படி உத்தரவிட்டதையும் ஷாமாவிடம் சொன்னார் காகாஜி. இதை கேட்ட ஷாமா, மகிழ்ந்தார். மறுநாள் தன் குல தெய்வத்தை தரிசித்துவிட்டு காகாஜியையும் அவர் குடும்பத்தையும் அழைத்து கொண்டு சீரடிக்கு சென்று பாபாவை தரிசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். பாபாவை தரிசித்த பிறகு காகாஜியின் வாழ்க்கையில் சூரியன் மெல்ல மெல்ல மேல் நோக்கி பிரகாசிப்பது போல் கஷ்டங்கள் மறைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தது காகாஜிக்கு.
பாபாவின் கைகளால் ஒரு ரூபாய் வாங்கிய பாக்கியசாலி யார்.? எவர் அந்த பாக்கியம் பெற்றவர்…?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved
நாம் செய்யும் செயல்களை இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறார். அதனால்தான் தீமிதி விழாவில் மழை துளிவருகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்த்திய விதமும் அதை பாபாவின் சரித்திரத்தில் பயன்படுத்திய விதமும் அருமை.
ஈரானிய பெண்மணியின் கொடுமையாண நோயை பாபா நீக்கியதை படித்த போது மெய்சிலிர்த்துவிட்டது
பராசக்தி தேவி ஸ்ரீஷீர்டிசாய்பாபா மகிமையை சொன்னார் என்பதை நிரஞ்சனாவின் கட்டுரையை படித்தபிறகுதான் தெரிந்து கொண்டேன். புதிய தகவலாக இருந்தது. மகிழ்ச்சி. ஜெய்சாய்ராம்.
hi.This post was extremely remarkable, especially since I was browsing for thoughts on this topic last week. bhakthiplanet.com is superb..