வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும் | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 2
வாஸ்து வியூக நுட்பங்கள்
பகுதி 2
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்
Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners
வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும்
“கதவுக்கும் கண்ணுண்டு சுவற்றுக்கும் காதுண்டு“ என்று ஏன் சொன்னார்கள் என்றால் எந்த ஒரு கட்டடத்திற்கும் உயிர் உண்டு என்பதால்தான். ஒரு வீடு என்பது கல்லும் – மணலும் சிமெண்டும் கூடிய கலவை மட்டுமல்ல – அதில் இயற்கை சக்தியும் சோ்ந்தே இருக்கிறது. ஒரு கல் எப்படி சிற்பியின் கலைதிறனுக்கு பிறகு தெய்வமாகிறதோ அதுபோன்று ஒரு கட்டடம் பாதி உருவாகும் போதே இயற்கை தன் ஆற்றலை தொடங்கிவிடுகிறது.
ஒர் உயிரினம் என்றால் இரத்தமும் சதையும் எலும்பும் மட்டும் போதாது. உயிரும் இருந்தால்தானே மதிப்பு. அதுபோல ஒருகட்டடத்தில் உயிரே அதன் வாஸ்து அமைப்பாகும். வாஸ்து என்றாலே ஏதோ இடிப்பதும் – உடைப்பதும் அல்ல. இருப்பதை கொண்டு சிறப்பாக மாற்றுவதே உண்மையான வாஸ்துவாகும். உங்கள் வீட்டின் அமைப்பில் ஏதேனும் வாஸ்துகுறை இருப்பதாக சொல்லி அதை இடித்து திருத்த வேண்டும் என்றால் உடனே அதற்கான வேலையை செய்யாமல் மேலும் ஒருசில வாஸ்து நிபுணர்களை கலந்தாலோசித்தே செய்ய வேண்டும்.
காரணம்- சில வாஸ்து குறைபாடுகளுக்கு அந்த அமைப்பிலேயே சில மாற்று பரிகாரங்கள் இருக்கும். அதை தெரிந்து கொண்டால் இடித்து திருத்தவதற்கு வேலை இல்லை. ஒரு வீட்டின் அமைப்பானது வாஸ்துகலையின்படி இல்லை என்றாலும் கூட அங்கு வசிப்பவர்கள் நல்ல நிலையில் இருப்பதை நாம் கவனித்திருப்போம். அதற்கான காரணம் என்ன? என்பதற்கு நம்முடைய பழைமையான கட்டட சாஸ்திர நூல்கள் சில விஷயங்களை குறிப்பிடுகிறது.
அதில் முக்கியமானது – ஓரளவாவது நல்ல வெளிச்சம்
ஒருவீடு எப்போதும் இருட்டாகவே இருக்கக் கூடாது. இருட்டு துஷ்ட சக்திகளின் அறிகுறி. ஒரளவாவது சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் விழ வேண்டும். அதிலும் அந்த சூரிய வெளிச்சமானது வடகிழக்கின் வழியாக வீட்டுக்குள் நுழையும்போது- அற்புதமான பலன்கள் கிடைக்கிறது. அதாவது, நல்ல கல்வி – கல்விக்கேற்ற செல்வம் – செல்வத்தை உணர்த்தும் பொருட்கள் – இவற்றை நன்கு அனுபவிக்க நல் ஆரோக்கியம் இப்படி நல்ல பலன்கள் நம்மை தேடி வந்தடைகிறது.
சூரிய வெளிச்சம் நுழையாத கட்டடத்தில் நாம் சுப பலன்களை எதிர்நோக்க இயலாது. சூரிய வெளிச்சமானது ஒரு வீட்டுக்குள் கிழக்கு நோக்கிய தென்கிழக்கு தவிர்த்து கிழக்கு அல்லது வடகிழக்கு வழியாக நம் வீட்டுக்குள் நுழைவது என்பது ஸ்ரீமகாவிஷ்ணுவே நம் இல்லம் தேடி வருவதற்கு இணையானதாகும்.
காரணம் – சூரியன், ஸ்ரீமகாவிஷ்ணுவின் சக்தியாக அம்சமாக இருக்கிறது. ஒன்பது கிரகங்களில் ஆதித்தன் எனும் சூரியனே முதன்மையானவன். சூரியனே மகாவிஷ்ணு. “சூரியனை வணங்குவது ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்குவதே ஆகும்“ என்கிறார் பராசர முனிவர். சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாமல் சூரிய வெளிச்சமும் சகல பாவத்தை போக்கும் தன்மையுடையது. சூரிய வெளிச்சத்திற்கு துஷ்ட சக்திகள் நெருங்காது.
ரோகத்திற்கு காரணம் “பாபம்“ என்கிறது நம் இந்துதர்மம். பாபம் நீங்கினால் ரோகம் நீங்கும். அதற்கு முக்கிய பரிகாரங்களில் சூரிய நமஸ்காரம் மட்டுமன்றி வீட்டுக்குள் நுழையும் சூரிய வெளிச்சமும் ஆகும். ரிக்-யஜுர்-சாமம் என்கிற மூன்று வேத வடிவமாகிய ஸ்ரீமகாவிஷ்ணு சூரிய ரூபமாக பிரகாசித்து கொண்டு இருப்பதாக பராசர முனிவர் குறிப்பிடுகிறார். இம்மூன்று வேதங்களுமே மகாவிஷ்ணுவின் சரீரமாகவும் அமைந்திருக்கிறது. இவரே சூரியனுக்குள்ளே விளங்குகிறார்.
சூரிய வெளிச்சமானது இப்படி நம் வீட்டுக்குள் பரவும்போது, வீட்டில் நடக்கும் யாகங்கள் – ஹோமங்கள் – பூஜைகள் போன்றவற்றில் சமர்பிக்கப்படும் பொருட்கள் – புகையாக வீட்டினுள்படும் சூரிய கிரணத்தின் வழியாக பூமியிலிருந்து சென்று அந்தந்த தேவதைகளை சென்றடைந்து திருப்திப்படுத்துகிறது. இதனால் அநேக செல்வயோகங்கள் நம்மை வந்தடைகிறது. அத்தகைய அதி அற்பத சிறப்பு வாய்ந்த சூரிய வெளிச்சமானது ஒரு வீட்டுக்குள் மிக அவசியமாக இருக்க வேண்டும்.
சூரிய வெளிச்சம் ஒரளவாவது இல்லாத வீட்டில் செல்வம் குறையும். மகாவிஷ்ணுவின் அம்சமாக கதிரவன் திகழ்வதால் – மகாவிஷ்ணு இல்லாத வீட்டில் மகாலஷ்மிக்கும் வேலை இல்லை. அதனால் இதனை உணர்ந்து நம் வீட்டின் ஒரு பகுதிலாவது சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி கட்டட அமைப்பை உருவாக்க வேண்டும். அடுத்ததாக –
ஒரு கட்டடத்தின் நான்கு திசையினை சுற்றியும் வழி இருக்க வேண்டும். அதாவது – காம்பவுண்ட் சுவற்றை ஒட்டி கட்டடத்தை கட்டக் கூடாது. அந்த கட்டடத்தை சுற்றி வருவதற்கு ஏதுவாக இடம் விட்டு கட்டடத்தை கட்ட வேண்டும். அதற்கான காரணம், இயற்கை சக்திகளுக்கு தடை உண்டாக்கக் கூடாது என்பதற்காகதான். முக்கியமாக நமது மனையின் அல்லது கட்டடத்தின் நான்கு திசைகளில் அதற்குரிய அதிபர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.
யார் அவர்கள்…? அவர்களின் வேலை என்ன?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
விஜய் ஜி கிருஷ்ணாராவ்
வாஸ்துகலை நிபுணர்
(M) 98411 64648 / 98406 75946
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved