கொலுசின் ஒசை திருஷ்டியை விரட்டும்
நிரஞ்சனா
பெண்கள் காலில் கொலுசு போட வேண்டும் என்று பெரியவர்கள் எழுதாத சட்டமாக வலியுறுத்தி கூறினார்கள். ஏன் தெரியுமா? கொலுசை காலில் அணிந்து நடக்கும் போது அந்த சலங்கை ஒலி கண் திருஷ்டியை அண்டவிடாது. கொலுசின் ஒலியைக் கேட்ட கஜலட்சுமி ஆனந்தம் அடைந்து வாழ்க்கையை ஆனந்தமாக வைத்திருப்பாளாம். கொலுசை வெள்ளியில்தான் அணிய வேண்டும். தங்கத்தில் கொலுசை அணியவேக் கூடாது.
கண்ணகியும் கோப்பெரும் தேவியும் தங்கத்தால் சிலம்பை காலில் அணிந்ததால்தான் பிரச்சனையே உண்டானது.
ஒரு கேள்வி எழலாம்…“தங்கத்திலும் வெள்ளிலும் ஸ்ரீ மகாலஷ்மி இருப்பதாகதானே சாஸ்திரம் சொல்கிறது. அப்படி என்றால் வெள்ளி கொலுசிலும் ஸ்ரீமகாலஷ்மி இருக்கிறாரே… அதுவும் தவறுதானே?“ என்று சிலருக்கு கேள்வி எழும். தங்கத்தின் நிறம் மஞ்சள். ஜாதகத்தில் குரு பிராப்தம் இருந்தால்தான் திருமணமே நடக்கும். அதனால்தான் தங்கத்திலும், மஞ்சளிலும் மாங்கல்யத்தை அணிகிறார்கள். மஞ்சள் குரு பகவானுக்குப் பிடித்த நிறமும் கூட. அப்படிப்பட்ட தங்கத்தை காலில் அணிவதுதான் தவறு. வெள்ளியின் நிறம் வெள்ளை. அது சுக்கிரனின் ஆதிக்கம். சுக்கிரன் அசுரகிரகம். குரு பகவான் தேவர்களுக்கெல்லாம் குரு. சுக்கிரன் அசுரர்களுக்கெல்லாம் குரு. அதனால் சுக்கிரனுக்குரிய வெள்ளியில் செய்த கொலுசை காலில் அணிந்தால் முகம் பொலிவு பெறும். உடல் வலிமை பெறும்.