Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

புத்தி கூர்மைக்கு முத்து. பணம் அள்ளி தருவதும் முத்து.

நவரத்தின மகிமைகள்

பகுதி – 3

 

ஜோதிட நிபுணர்,

வி.ஜி. கிருஷ்ணா ராவ்

(M) 98411 64648

E-Mail: astrokrishnarao@gmail.com

 

 

ஒவ்வோரு  மனிதர்களின் உடலிலும் ஒளிவட்டம் இருக்கும். அந்த ஒளிவட்டம் வெவ்வெறு நிறத்தில் இருக்கிறது. ஞானிகள் – முனிவர்கள் – மகான்கள் தியானம் செய்து அந்த ஒளியை வலுப்படுத்தி சக்தியானவர்களாக மாறிவிடுகிறார்கள். அதிகமாக மகான்களின் ஒளிவட்டம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்கிறது யோக சாஸ்திரம். அத்துடன் வெள்ளை நிறத்திற்கு மற்றவர்களை அடக்கியாலும் சக்தியும் உண்டு.  அதனால்தான் அரசியலில் இருப்பவர்கள் அதிகம் வெள்ளை நிறத்தை உபயோகிக்கிறார்கள்.

கால்குலஸ் என்னும் கணித வகையும், புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்து சொன்ன ஸர் ஐசக் நியூட்டன்தான் வெள்ளை ஒளிக்குள் ஏழு வண்ணங்கள் இருக்கிறது என்று தன் ஆராய்ச்சியில் கண்டுபடித்து உலகத்திற்கு சொன்னார்.

இவர் விஞ்ஞானத்தில் அதிபுத்திசாலி என்றாலும் இவர் வாழ்வில் வேடிக்கையான சம்பவம் பல உண்டு. ஒருநாள் ஐசக் நியூட்டன் தன் வீட்டின் கதவில் பெரிய ஓட்டையும் அதன் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போட்டார். இதை கண்ட நியூட்டனின் நண்பருக்கு ஒன்றும் புரியாமல், “எதற்காக பெரிய ஒட்டையின் பக்கத்திலேயே சிறிய ஒட்டையும் போடுகிறீர்கள்.?“ என்றார்.

அதற்கு நியூட்டன், “நான் பூனை வளர்க்கிறேன். அது ஒரு இடத்தில் உட்காராமல் வெளியே செல்வதும் வருவதுமாக இருக்கிறது. அந்த பூனைக்காக இருபத்தி நான்கு மணிநேரமும் கதவை திறந்து வைத்திருக்க முடியாது இல்லையா.? அதனால்தான் அது எந்த நேரமும் வெளியே சென்று வர, கதவில் ஒட்டைகள் போட்டேன்.“ என்றார்.

அதற்கு நண்பர், “அது சரி. அதற்கு ஏன் கதவில் இரண்டு ஓட்டை போட்டீர்கள்.?“ என்றார்.

“அந்த பூனையுடன் ஒரு குட்டி பூனையும் இருக்கிறது. பெரிய ஓட்டையில் பெரிய பூனையும், சின்ன ஓட்டையில் குட்டி பூனையும் சென்று வருவதற்குதான்.? என்றார் நியூட்டன்.

“உன் புத்திசாலிதனத்திற்கு ஒரு அளவில்லையா…? பெரிய ஓட்டையிலேயே இரண்டு பூனைகளும் போய் வருமே.“ என்றார் நண்பர்.

நியூட்டனை போல் அதிமேதாவியாக இருப்பவர்களும் சில நேரத்தில் மூலை மந்தமாக வேலை செய்யும். அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள், “யானைக்கும் அடிசறுக்கும். அதிகம் சிந்தித்தால் மூலை சூடாகி குழும்பி விடும்.“ என்று.

ஒரு பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் பதட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பதை மறந்து, அந்த சிறு பிரச்சனையை பூதகரமாக்கி விடுவோம். பிறகு, “இதை இப்படி கையாண்டு இருக்கலாமோ ?“ என்று சிந்திப்போம்.

இப்படிபட்டவர்கள் நவரத்தினங்களில் ஒன்றான முத்தை அணிந்தால் நல்ல புத்தி கூர்மையை அடைவார்கள். சிறந்த யோகத்தையும் பெறுவார்கள். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் முத்துக்கு உண்டு. சமுதாயத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தும் ரத்தினம் முத்து. செல்வத்தை பெருக்கும். பண பிரச்சனை தீர்க்கும். மற்றவர்களின் உதவியை சுலபமாக பெற வைக்கும் ஆற்றலும் முத்துக்கு இருக்கிறது. முத்தை அணியும் முன் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டி, உங்களுக்கு முத்து ரத்தினம் சாதகமாக இருக்குமா?  என்று ஆலோசனை பெற்ற பிறகு அணிந்தால் இன்னும் யோகம் ஏற்படும்.

 ஜாதகம் இல்லாதவர்கள், பிறந்த தேதி இரண்டோ அல்லது தேதி – மாதம் – வருடம் கூட்டினால் இரண்டோ வந்தால் முத்தை அணியலாம்.

உதாரணத்திற்கு –

2 – 11 -29 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம்.

8.4.1970 என்றால், 8 + 4 + 1 + 9 + 7 + 0 =  29 வருகிறது. இதில் 2 + 9 = 11 வரும்.  1+1=2 ஆக மொத்தம் 2.  இது உயிர் எண். இதன் ஆதிக்கம் சந்திரன். சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் முத்தை அணியலாம்.

 

தொகுப்பு. நிரஞ்சனா

Posted by on Mar 18 2011. Filed under ஜோதிடம், நவரத்தினங்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »