Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

நீங்கள் யோகவான்களா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5-ம் இடம். இந்த இடத்தை பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவன் பெயரும் புகழுமாக இருந்தால், “அவன் புண்ணியம் செய்தவனய்யா“ என்று கூறுகிறார்கள்.

 ஆம்… புண்ணியம் செய்து இருந்தால், அதாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் யோகசாலியாக இருப்பான்.

 சரி… போன ஜென்மத்தில் அவன் புண்ணியம் செய்தவன் என்று எப்படி தெரியும்?

 இது அருமையான கேள்வி. ஒரு ஸ்கேன் ஒரு நோயாளின் உடம்பிற்குள் உள்ள சிதைந்த பாகத்தை – கட்டியை எப்படி காட்டி கொடுக்கிறதோ அப்படியே ஒரு ஜாதகம், 5-ம் இடம் எனும் பூர்வீக புண்ணியஸ்தானம்தான் இன்றைய வாழ்க்கை யோக, போக பலனை கொடுக்கிறது. அதாவது வங்கியில் பணம் இருந்தால் செக் (காசோலை) பாஸ் ஆகிவிடும். அதை போலவே சென்ற ஜென்மத்தில் புண்ணியம் இருந்தால் இந்த ஜென்மத்தில் யோகம் – போகம் நிச்சயம். அதைத்தான்…

”ஜனனி ஜென்ம சொக்கியானாம்

பதவி பூர்வ புண்ணியாம் நாம்.”

 என்று கூறுகிறார்கள். இனி விஷயத்திற்கு வருவோம்.

 ஜாதகத்தில் 5-ம் இடம் பூர்வீக புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால் அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் உச்சம் பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்கினாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால், அந்த வீட்டில் 6,8,12க்குடையவன் அமராமல் இருந்தால், பாபிகள் அமராமல் இருந்தால் இவர்கள் யோகசாலிகளே.

 ஒரு ஜாதகத்தில் பூர்வீக புண்ணியஸ்தானம் வலுத்திருந்தால் பள்ளத்தில் விழுந்தவனும் பல்லாக்கில் அமர்ந்து செல்வான்.

 ஆகவே நீங்கள் உங்கள் ஜாதகத்தை பாருங்கள். அல்லது ஜோதிடரிடம் பார்க்க கொடுங்கள். பூர்வீக ஸ்தானம் வலுத்திருந்தால் உங்கள் வாழ்க்கை யோக – போக வாழ்க்கையே. இனி பூர்வீக ஸ்தானம் வலுத்து யோகமாக வந்தவர்கள் ஜாதகத்தை ஆராய்ச்சிக்கு கொடுக்கிறேன்.

(தொடரும்)

Click For EnglishVersion

ஜோதிட நிபுணர்,

வி.ஜி. கிருஷ்ணா ராவ்.

(M) 98411 64648

E-Mail: astrokrishnarao@gmail.com

Posted by on Mar 15 2011. Filed under ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

1 Comment for “நீங்கள் யோகவான்களா?”

  1. Elumalai s.s

    I’ve been surfing online more than 3 hours today, yet I never found any interesting article like yours. It is pretty worth enough for me. In my opinion, if all web owners and bloggers made good content as you did, the web will be a lot more useful than ever before.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »