செல்வம் பெருக ஸ்ரீ மகாலஷ்மி கூறிய இரகசியம்
நிரஞ்சனா
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு காபி,டீ கொடுத்து உபசரிப்பது வழக்கம். அதில் சுமங்கலி பெண்கள் இருந்தால் அவர்களுக்கு மஞ்சள் – குங்குமம் – வெற்றிலை-பாக்கு-வாழைபழம் இவற்றுடன் வஸ்திரதானமும் செய்தால் ஸ்ரீ மகாலஷ்மிக்கே அவற்றை கொடுப்பதாக ஐதீகம். கொடுப்பவருக்கு தனம், தானியம் வற்றாத செல்வம்யாவும் கிடைக்கும். அதனால்தான் வரலஷ்மி விரதத்தன்று சுமங்கலி பெண்களுக்கு இவற்றை கொடுக்க வேண்டும் என ஸ்ரீமகாலஷ்மியே பத்ரச்வஸ் என்ற அரசனின் மகள் சியாமளாவுக்கு கூறியதாக புராண கதையில் உள்ளது.