சீதையும் சிவதனுசும்
Written by Niranjana
இராமாயண காலத்தில் சிவதனுசை வளைப்பவருக்குதான் தன் மகள் சீதையை திருமணம் செய்து தருவேன் என்றார் ஜனகர். அது ஏன்?… சீதை சிறு வயதில் இருக்கும் போது தன் தோழிகளுடன் பந்து விளையாடி கொண்டிருந்தாள், அப்பொழுது அந்த பந்து சிவ தனுசின் அடியில் சென்று மாட்டி கொண்டது.சேவர்கள் எவ்வளவோ முயற்சி்த்தும் அந்த பந்தை எடுக்க முடியாமல் அவதிப்பட்டார்கள்.
இதை எல்லாம் பொருமையாக பார்த்து கொண்டிருந்தார் சீதையின் தந்தை ஜனகர். அப்போது ஒரு அதிர்ச்சியை கண்டார். பலசாலியாக இருக்கும் நம் சேவர்களாலும் அசைக்க முடியாத சிவதனுசை ஐந்து வயது குழந்தை சீதை சர்வசாதாரணமாக வில்லை நகர்த்தி பந்தை எடுத்தாள்.
இதிகாசத்து காலத்திலும், சரித்திரத்திலும் பெண்கள் வலிமையானவர்கள்தான். கிணற்றி்ல் கை நழுவி விழும் எல்லா பொருட்களும் கரைந்து விடும் என்று நினைப்பது அறியாமை. கிணற்றில் விழும் பொருட்களை பாதாள சங்கிலி போட்டு எடுப்பது போல, பெண்களிடம் பல திறமைகள் இருக்கிறது என்பதை உணர்தார் மகாகவி பாரதி.
விவேகானந்தரி்ன் சி்ஷ்யை நிவேதாவை பார்க்க மகாகவி பாரதியார் சென்றார். உங்கள் மனைவி வரவில்லையா? என்றார் நிவேதா. “அவள் என்னுடன் வந்து என்ன சாதிக்க போகிறாள்?” என்ற கேள்வியை எழுப்பினார் பாரதி.
அதற்கு நிவேதா, “நீ்ங்கள் என்ன சாதித்தீர்கள்?” என்று எதிர் கேள்வி கேட்டார். இந்த சந்திப்பின் பிறகுதான் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற உண்மை நிலையை யோசித்து பெண்கள் விடுதலைக்காக போராடினார் மகாகவி பாரதியார்.