“விரதங்ளும் அதன் கதைகளும்“ பகுதி -1
இந்துக்கள் மட்டும்தான் விரதம் இருப்பார்கள் என்றில்லை இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவரவர்களின் வழிபாட்டு முறைப்படி விரதம் இருப்பார்கள். சாதிக்க வேண்டும் என்றால் ஒன்று போராட வேண்டும் (அ) உண்ணாவிரதம் இருந்து நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பார்கள். பிள்ளைகள் பட்டினி கிடந்தால் பெற்றோர்களால் தாங்க முடியாது. கேட்டதை வாங்கி கொடுத்து விடுவார்கள். இந்த ஒரு ஜென்மத்திலேயே அவர்கள் நம் மேல் பாசமாக இருக்கும் போது, பல பிறவி எடுத்து கொண்டு இருக்கும் நமக்கு இறைவனே எல்லா ஜென்மங்களுக்கும் தாய்-தந்தையாக இருக்கிறார்.
ஆகவே நம்முடைய பிரச்சனைகளும், நினைக்கும் விஷயங்களும் விரைவாகவும் தடையி்ல்லாமலும் நடக்க வேண்டும் என்றால் இறைவனை மனதி்ல் நினைத்து விரதம் இருந்தால் நிச்சயம் கடவுள் மனம் இறங்கி நினைத்ததை சாதிக்க வைப்பார்.
நல்ல உடல்நலம் இல்லாதவர்கள் விரதம் இருந்தால் அதனால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படலாம் என்பதால் அவர்கள் காய் கனி வகைகளை சாப்பிடலாம் என்று கூறினார்கள் மகான்களும் முனிவர்களும்.
இன்னும் எளிய வழியாக வயிற்றை பட்டினி போடாமல் ஒரு நாளாவது மனதை அமைதியாக வைத்திருந்து இறைவனுடைய பெயரை மனதில் உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும். இது உண்ணா நோம்பை விட – விரதத்தை விட உயர்ந்த விரதம் என்கிறது சாஸ்திரம்.
விரதம் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவில் வருவது கந்தசஷ்டி விரதம், சோமவார விரதம். இவற்றுடன் இன்னும் சில விரதங்கள் இருக்கிறது. அதில் செல்வத்தை உண்டாக்கும் விரதம் ஸ்ரீ சந்தோஷ்மாதா விரதம். செல்வத்தில் உயர்ந்த செல்வமான பிள்ளை செல்வத்தை கொடுக்கும் விரதம் சஷ்டி தேவி விரதம். காலசர்ப்ப ஜாதகமாக இருப்பவர்களின் வாழ்க்கை முப்பது வயதுக்கு பிறகு யோகத்தை தரும். அதுவரை காலசர்ப்பம் அவர்களுக்கு யோகமாக இல்லாமல் காலசர்ப்ப தோஷமாகத்தான் இருக்கும். அவர்களுக்கு மானஸா தேவி விரதம் சிறந்தது. இதுபோல இன்னும் பல விரதங்கள் உள்ளன. அவை அனைத்தையும் அனுசரிக்க இயலாவிட்டாலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற விரதத்தை செய்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும் என்பதை நீங்களே அனுபவத்தில் உணர்வீர்கள்.
முன்னொரு காலத்தில் வித்தியுன்மாலி என்ற அரசர் இருந்தார். பெயருக்குதான் அரசரே தவிர உடலாலும் உள்ளத்தாலும் அவர் வறுமையாக இருந்தார். அது என்ன வறுமை என்கிறீர்களா? வியாதிதான் அந்த வறுமை. வியாதி எப்படி வறுமையாகும்? பணம் உள்ளவன் பணக்காரன் என்கிறோம். அது இல்லாதவன் ஏழை. அதுமாதிரி உடல் ஆரோக்கியமாக இருப்பவன் பலவான். உடல் ஆரோக்கியம் இல்லாதவன் நோயாளிதானே. ஒரு சிறப்பு ஒருவனிடம் இல்லை என்றால் அதில் அவன் வறுமையில் இருக்கிறான் என்றுதானே பொருள். ஆனால் வித்தியுன்மாலி என்கிற அந்த அரசர் தன் வியாதி எனும் வறுமை நீங்கப்பெற்று “அரசர்“ என்கிற பெயருக்கு ஏற்ப வாழ்வாங்கு வாழ வைத்த விரதம் எது தெரியுமா? அது…
(தொடரும்)