Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

சொந்த வீடு | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 1

வாஸ்து வியூக நுட்பங்கள்

பகுதி 1

Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners

சொந்த வீடு  என்பது அனைவரும் விரும்புகிற ஒன்று. சில வருடங்களுக்கு முன்புவரை சொந்த வீடு கட்டுவதும் வாங்குவதும் கனவாக இருந்தது. ஆனால் இன்று, அரசு வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் கடன்களை தருவதால் அவரவர் சக்திக்கேற்ப வீடு கனவு நிறைவேறுகிறது. என்ன இருந்தாலும் ஆயிரம் வசதிகள் வந்தாலும் அதற்குரிய யோகமும் வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

“எலிவலையானாலும் தன் வலை” என்பதற்கேற்ப என்னதான் ஆயிரக்கணக்கில் பணம் தந்து வாடகை வீட்டில் குடியிருந்தாலும் அதில் முழு திருப்தி இருக்காது. நம் சக்திக்கு ஏற்ற சிறிய அளவில் ஒரு வீடு இருந்தால்தான் கௌரவம் அல்லது சௌகர்யம் என்பது பொதுகருத்து. ஆனால் அதற்கும் கூட ஜாதக யோகம் வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனது குடும்ப நண்பரில் ஒருவர் மிகுந்த செல்வந்தர். இன்றளவும் வாடகை வீடுதான். கடற்கரை சாலையில் அழகிய சொந்த பங்களா இருக்கிறது. வாரத்தில் ஒருநாள் மட்டும் தன் குடும்பத்தினருடன் அங்கு தங்கிவி்ட்டு மீண்டும் தன் வாடகை வீட்டுக்கே வந்துவிடுவார். அவரது வழக்கம் அப்படி.

இன்னொரு நண்பர் அவரும் தொழில் அதிபர்தான். சொந்த வீடும் இருக்கிறது. ஆனால் வீட்டின் அமைப்பு இன்றைய நவீன அமைப்பி்ல் இருக்காது. கொஞ்சம் பழைய அமைப்பு. ஆனால் வீடு மிக பெரியது. அவருக்கு திருமண வயதில் ஒரு மகள். அந்த பெண்ணுக்கு வரன் தேடும் போது மிக பெரிய கோடீஸ்வர குடும்பதிலிருந்து வரன் அமைந்தது. மாப்பி்ள்ளை வீட்டாரின் அந்தஸ்தோடு ஒப்பிடும் போது இவரின் அந்தஸ்து சற்று குறைவுதான். பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும் போது, தன் வீடும் அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்ப இருக்க வேண்டுமே, உடனே அதற்கு என்ன செய்வது.?

அலாவுதீன் விளக்கு இருந்தாலாவது ஒரே இரவில் அரண்மனையை போல வீட்டை மாற்றிவிடலாம். ஆனால் அதற்கு சாத்தியமி்ல்லை. தேடி வந்த வரனையும் விட்டு விட கூடாது. அதற்கு நண்பர் என்ன செய்தார் என்றால்,  தன் சொந்த வீட்டை காலி செய்துவி்ட்டு, முதலில் சொன்ன நண்பரின் கடற்கரை சாலையில் இருக்கும் பங்களாவுக்கு வாடகைக்கு குடியேறிவிட்டார்.




இருவரும் நண்பர்கள் என்பதால் உடனடியாக குடியேறிவிட்டார். அவர் எதிர்பார்த்தபடி பெண்ணுக்கும் நல்ல முறையில் திருமணமாகிவிட்டது. ஆனால் அதன் பிறகும் வாடகை வீட்டைவிட்டு தன் சொந்த வீட்டுக்கு திரும்ப நண்பருக்கு மனமி்ல்லை. பூட்டி கிடக்கும் தன் சொந்த வீட்டை மாற்றி நவீன அமைப்பில் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டார். இன்றளவும் திட்டத்துடனே இருக்கிறதே தவிர இதுவரை வீட்டை கட்டவில்லை. வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள் இரு நண்பர்களும்.

சொந்த வீடு இருந்தும் அனுபவிக்க இயலாத நிலை. இதுவும் கூட ஜாதக அமைப்புதான் என்பார்கள் ஜோதிட அன்பர்கள். ஆக,  சொந்த வீட்டில் வாழ்ந்து அனுபவிக்க யோகம் என்பது மிக அவசியம். சொந்த வீடு இருந்தும் அதில் குடியிருக்காமல் வாடகை வீட்டிலேயே காலம் தள்ளுவதற்கும் வாஸ்து அமைப்பு காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த நண்பர்களை பொறுத்தவரையில் சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டதே தவிர வாஸ்து குறை என்று பெரியதாக ஒன்றுமில்லை. ஆனால் பொதுவாக, வடகிழக்கிலோ (North East) அல்லது தென்மேற்கிலோ (South West) ஒரு மனையில் அல்லது கட்டடத்தில் வாஸ்து குறை இருக்கும் போது – அது சொந்த வீடாக இருந்தாலும் அதனை அனுபவிக்க விடாது.

அதற்கு என்ன செய்யலாம்? – அதற்கும் வழி இருக்கிறது.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Feb 28 2011. Filed under கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »