வலம்புரி விநாயகர்
வலம்புரி விநாயகர் என்று ஏன் பெயர் வந்தது? ஒருமுறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவன் விளையாட்டாக எடுத்து வைத்து கொண்டார். பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு சிவனிடம் சென்று தன்னுடைய வலம்புரி சங்கை தந்து விடுமாறு கேட்டார். “என்னிடம் வலம்புரி சங்கு இல்லை. என் மகன் விநாயகரிடம்தான் இருக்கிறது. அவனிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்.“ என்று சிவன் மகாவிஷ்ணுவிடம் சொல்ல விநாயகரிடம் பலநாள் அலைந்து திரிந்து கடைசியாக ஒருநாள் வலம்புரி சங்கை திரும்ப வாங்கினார் விஷ்ணு பகவான். இப்படி பலநாள் வலம்புரி சங்கை விநாயகர் விருப்பத்துடன் வைத்திருந்ததாலும் வலம்புரி சங்கை தன் தும்பிக்கையில் வலதுபுறமாக வைத்திருந்ததாலும் வலம்புரி விநாயகர் என்று பெயர் வந்தது. வலம்புரி விநாயகரை வணங்கினால் ஸ்ரீ லஷ்மிநாராயணனின் ஆசியால் சகல காரியங்களும் சித்தியடையும்.
தொகுப்பு: நிரஞ்சனா