ஜாதகம் என்பது உண்மையா – பொய்யா?
வி.ஜி.கிருஷ்ணா ராவ்
ஜோதிட வல்லுனர்
(M) 98411 64648
ஜாதகம் பார்ப்பதால் பலன் உள்ளதா? சாதகமான நேரத்தை அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி திசைகளை திசைகாட்டி கருவி சரியாக காட்டி கொடுக்கிறதோ அப்படியே சாதகமான நேரத்தை ஜாதகம் காட்டி கொடுக்கும். ஆகவே சாதகமான நேரம் அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவர்…
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.“
இதன் பொருள்….
பகலில் கோட்டானைக் காக்கை வெல்லும். அரசர்க்கு பகைவரை வெல்லத் தக்க காலம் வேண்டும் என சொன்னார்.
ஒரு மரத்தில் இரண்டு காகம் வாழ்ந்து வந்தது. ஒன்று ஆண் காகம் இன்னொன்று பெண் காகம். இரவு நேரம். அந்த நேரத்தில் ஒரு ஆந்தை பயங்கரமாக சத்தமி்ட்டுகொண்டும் ஆர்பாட்டம் செய்து கொண்டும் இருந்தது. பெண்காகத்திற்கு பயம், அதிர்ச்சி. அடுத்து என்ன நடக்குமோ உயிர் பிரிந்துவிடுமோ என்று அச்சம். பட படபடப்புடன் இருந்தது பெண் காகம்.
ஆண் காகத்தை பார்த்து கேட்டது. “நீ ஆணா? பார் அந்த ஆந்தையை. இப்படி அட்டகாசம் செய்கிறது. அதை அடக்க உன்னால் முடியாதா?“ என கேட்டது. அதற்கு ஆண் காகம் “இதோ பார். உன் பேச்சை கேட்டு நான் அதை அடக்க நினைத்தால் நாம் அடக்கம் ஆகிவிடுவோம். நேரம் வரும் பொறு.
அந்த ஆந்தை அஸ்தி ஆகிவிடும் என்று கூறியது ஆண் காகம்.
இரவு மெள்ள மெள்ள மறைந்தது காலை நேரம் பிறந்தது. இப்பொழுது ஆந்தைக்கு கண் தெரியவில்லை. தத்தி தத்தி ஒரு கிளையில் உட்கார்ந்தது. உடனே ஆண் காகம் அட்டகாசமாக மாறியது. பெண் காகத்திடம் “இப்போது பார் வேடிக்கையை“ என கூறி ஆந்தையை பறந்து பறந்து தாக்கி கொத்தி அலற அலற சாகடித்தது ஆண் காகம். இது குழந்தைகளுக்கான கதையாக இருந்தாலும் நேரம் வரும் வரை அமைதி காக்க வேண்டும் என்ற கருத்தை வள்ளவர் இந்த கதையின் ழூலமாக அருமையாக கூறி உள்ளார்.
ஆகவே சாதகமான நேரம் நமக்கு எப்படி வரும்? எப்பொழுது வரும்? என ஜாதகத்தை பார்க்க வேண்டும். ஜாதகம் உண்மையா – பொய்யா? என்ற கேள்விக்கு ஜாதகம் என்பது உண்மை. இந்த உண்மைகளை பல சம்பவங்கள் காட்டி உள்ளன. என்ன சம்பவங்கள்? எப்போது? அடுத்து வரும் உண்மைகள்.
(தொடரும்)
தொகுப்பு: நிரஞ்சனா