உலக செஸ் சாம்பியன் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடத்தப்படுகிறது. 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் உலக செஸ் சாம்பியன் போட்டியில் மோதுகிறார்கள். இந்த போட்டி வருகிற 9–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. தமிழக அரசின் முழுமையான ஆதரவுடன் தமிழ்நாடு செஸ் சங்கம் இந்தப் போட்டி […]

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 12ஆம் தேதி முதல் கார்த்திகை உற்சவம் தொடங்குகிறது. இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கார்த்திகை உற்சவம் 12.11.2013 முதல் 21.11.2013 வரை நடைபெறுகிறது. உற்சவம் நடைபெறும் 10 நாள்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடிவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும் 17ஆம் தேதி (ஞாயிறு) திருக்கார்த்திகை அன்று திருக்கோயில் முழுதும் லட்சதீபம் ஏற்றப்படும். […]
சென்னை, நவ.6: சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைக்கிறார். சென்னையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில், மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டு 45.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை _ சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடமும், சென்டிரல்_பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2_வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் […]
லாஸ்ஏஞ்சல்ஸ்:விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தபடி தனது 100வது பிறந்தநாளை கலிபோர்னியாவை சேர்ந்த தாத்தா ஒருவர் கொண்டாடியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா தென் பகுதியை சேர்ந்தவர் வீனன் மேனார்ட் (100). கார் வியாபாரியான இவர், வயது காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இவருக்கு தனது 100வது பிறந்த நாளை விமானத்தில் உயரமான பகுதிக்கு சென்று அங்கிருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தவாறு கொண்டாட வேண்டும் என்று வித்தியாசமாக ஆசை ஏற்பட்டது. இது குறித்து தனது […]

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில், தானாக ஓடிய அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார். மூதாட்டி படுகாயமடைந்தார்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலைய பணிகள் கடந்த 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையாததால், லாரி பேட்டையை தற்காலிக பஸ்நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, நேற்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து, சின்னத்துரை கடற்கரை கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று விட்டார். அப்போது, அந்த பஸ் திடீரென தானாக இயங்கி […]
நியூ ஜெர்சி, அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வணிக வளாகம் நேற்று மூடுவதற்கு முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசாரும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வணிக வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் […]
கனடாவில் உள்ள ஒரு நகரின் தெருவிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது. பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) […]

மும்பையை அடுத்த குர்கான் பகுதியான சந்தோஷ்நகர் என்ற இடத்தில் 20 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் தீபாவளி பண்டிகையை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை அவர்கள் தங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று அந்த பெண்ணும் அவர்களுடன் தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று, குளிர்பானத்தில் பீர் கலந்து கொடுத்து […]

பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சார் பதிவாளர் அலுவலகங்களில் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படுவது அனைத்தும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக பத்திரப்பதிவு துறை அலுவலக நிகழ்வுகளை காமரா மூலம் கண்காணிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்தவகையில், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 3 முகாம் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா மூலம் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று […]

சென்னை, நவ. 5 – வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால். தமிழக கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுத்துள்ளார். இயக்குனர் ரமணன் தகவல். வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அருகே வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை […]