Saturday 2nd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: Headlines

புயல் இன்று மாலை கரையைக் கடக்கிறது

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை கரையைக் கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது, சென்னைக்கு தென்கிழக்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று […]

கன்னியாகுமரி -மலையில் இருந்த ராட்சத பாறை சரிந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை உச்சியில் இருந்த பாறை ஒன்று கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி அந்த பாறையை உடைத்து அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது. ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் மலை உச்சியில் உள்ள 2 டன் எடை கொண்ட ராட்சத பாறை […]

5வது சுற்றில் நார்வே நாட்டு வீரர் கார்ல்சன் வெற்றி

சென்னையில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5வது சுற்றில் நார்வே நாட்டு வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9ம் தேதி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , நார்வே நாட்டின் கார்ல்சனுடன் விளையாடி வருகிறார். 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில் முதல் நான்கு போட்டிகளும் டிராவில் முடிந்தன. இந்நிலையில் முதல் வெற்றி யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு விடையாக நேற்று […]

கொல்கத்தாவின் தெருவோர வண்டி கடையில் வடை வாங்கி சாப்பிட்ட இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார்.ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கேமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது.‘விக்டோரியா’ (இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி) என்ற பெயர் கொண்ட அந்த […]

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின்

ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் கண்ணீருடன் பேசினார். அவர் கூறியதாவது 1999–ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார். அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு […]

அமெரிக்க சுகாதார மையத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கிய இந்திய மருத்துவர்

அமெரிக்கவாழ் இந்திய மருத்துவரான விஜய் சங்வி என்பவர் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்துள்ளார். இந்தத் தொகையானது மருத்துவர்கள் விஜய் மற்றும் குஷ்மன் சங்வி அறக்கட்டளை என்ற பெயரில் இதய ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெல்லோஷிப் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும். இத்தகைய நன்கொடை அறக்கட்டளை அமைப்பை சின்சினாட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை […]

கிரிக்கெட் இல்லாமல் சச்சினை நினைத்துப் பார்க்க முடியவில்லை – அஞ்சலி டெண்டுல்கர்!

தனது கணவர் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் இல்லாமல் பார்க்கப்போவதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை என்று சச்சின் மனைவி அஞ்சலி தெரிவித்துள்ளார். “கடைசி ஒருமாதம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த ஓய்வு பெறும் நாளைப் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவோம். கிரிக்கெட் இல்லாத டெண்டுல்கரை நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது. டெண்டுல்கர் இல்லாமல் கிரிக்கெட் இருக்கலாம் ஆனால் கிரிக்கெட் இல்லாமல் டெண்டுல்கர் இல்லை” என்று அஞ்சலி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். “நான் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த நாட்களைப்பார்த்ததேயில்லை. […]

பறந்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவு திறந்திருந்ததால் பயணிகள் அச்சம்

சவுதி அரேபியாவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானம் ஒன்று விண்ணில் பறந்துக்கொண்டிருந்தப்போது அதன் கதவு சரியாக மூடப்படவில்லை என எச்சரிக்கை விளக்கு எரிந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று சவுதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு ஐதரபாத் வழியாக மும்பைக்கு வர இருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தின் ஒரு கதவு சரியாக […]

திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் லட்சக்கணக்கான மக்கள் வருகை

திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் உச்சக்கட்ட திருவிழாவான கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். மலையில் மகா தீபம் ஏற்றும் போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச […]

ரஜினியின் ‘கோச்சடையான்’ ஜனவரி 10–ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »