சென்னை, நவ. 18- உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில், கார்ல்சன் 4-2 என முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று 7-வது சுற்று போட்டி நடைபெற்றது. 2 சுற்றுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று வெள்ளை காய்களுடனும், கார்ல்சன் கறுப்பு காய்களுடனும் விளையாடினர். […]
சென்னை, நவ.18- நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன. இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது. இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து […]
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.9-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவ விபரம்: டிச.10-ம் வெள்ளி சந்திரபிரபை வாகன வீதிஉலா, 11-ம் தேதி தங்கசூரிய பிரபை வாகன வீதிஉலா, 12-ம் தேதி வெள்ள பூதவாகன வீதிஉலா, 13-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 14-ம் தேதி வெள்ளி யானை வாகன […]
அகமதாபாத்தில் சுமார் 7 லட்சம் பணமிருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் அருகே உள்ள ஒதவ் பகுதியின் சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் ரூ.7 லட்சம் பணமிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம்.மையத்திற்கு வந்து பணம் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை […]
ரஷ்யாவில் கஸன் விமான நிலையத்தில் தரை இறங்கிய போயிங் ரக விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம், ஊழியர்கள் 6 பேர் உட்பட 50 பேருடன் கஸன் நகருக்குச் சென்றது. இரவு 7.25 மணிக்கு கஸன் விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மூன்று முறை பத்திரமாக தரையிறக்க முயன்றும் முடியாததால், விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்த பயணிகள் […]
சென்னை, நவ.18 – சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களில் இரவில் சப்பாத்திகள் வழங்கும் திட்டம் இந்த வாரத்துக்குள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குறைந்த விலையில் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய வழங்கப்படுகின்றன. மேலும் இந்த உணவகங்களில் ரூ. 3_க்கு 2 சப்பாத்திகள் வழங்கப்படும் என்று முதல்வர் […]
பாடகர் உன்னிகிருஷ்ணின் மகள் பாடகியாக களமிறங்கி உள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணின் மகள் உதாரா. 8 வயதே உடைய இவர் ‘சைவம்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் இந்த குட்டிப் பாடகி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். ‘தலைவா’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் விஜய் இயக்கி தயாரித்து வரும் படம் சைவம். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் ‘தெய்வத்திருமகள்’ சாரா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் […]
சென்னை, நவ.18 – இடி – மின்னல் – மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக, 18.10.2013 அன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகைய்யா என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்; ஈரோடு மாவட்டம், […]

நியூயார்க், நவ. 18– அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களில் கடும் சூறாவளிப் புயல் வீசியது. இதனால் இல்லினாய்ஸ், இண்டியானா, கண்டக்கி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் கடுமையாக காற்று வீசியது. இதனால் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தலைகுப்புற வீசி அடிக்கப்பட்டன. சில இலகு ரக வாகனங்கள் காற்றில் பரந்தன. ‘டன்’ கணக்கில் குப்பைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. பலத்த சூறாவளி புயலுக்கு தாக்குபிடிக்க […]

சென்னை, நவ.18 – காற்றழுத்த தாழ்வு நிலை பரவியதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் நேற்று மதியம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. புயல் சின்னம் கரையை கடந்தபோது […]