லாஸ்ஏஞ்சல்ஸ்:விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தபடி தனது 100வது பிறந்தநாளை கலிபோர்னியாவை சேர்ந்த தாத்தா ஒருவர் கொண்டாடியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா தென் பகுதியை சேர்ந்தவர் வீனன் மேனார்ட் (100). கார் வியாபாரியான இவர், வயது காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இவருக்கு தனது 100வது பிறந்த நாளை விமானத்தில் உயரமான பகுதிக்கு சென்று அங்கிருந்து பாராசூட் மூலம் குதித்து வானில் பறந்தவாறு கொண்டாட வேண்டும் என்று வித்தியாசமாக ஆசை ஏற்பட்டது. இது குறித்து தனது […]

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில், தானாக ஓடிய அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார். மூதாட்டி படுகாயமடைந்தார்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலைய பணிகள் கடந்த 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையாததால், லாரி பேட்டையை தற்காலிக பஸ்நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, நேற்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து, சின்னத்துரை கடற்கரை கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று விட்டார். அப்போது, அந்த பஸ் திடீரென தானாக இயங்கி […]
நியூ ஜெர்சி, அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். வணிக வளாகம் நேற்று மூடுவதற்கு முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசாரும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வணிக வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் […]
கனடாவில் உள்ள ஒரு நகரின் தெருவிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைகளை போற்றி புகழாரம் சூட்டப்பட்டது. பின்னர், மர்கம் பகுதியில் உள்ள பிரதான தெரு ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்(அல்லாஹ் – ரக்ஹா ரஹ்மான்) […]

மும்பையை அடுத்த குர்கான் பகுதியான சந்தோஷ்நகர் என்ற இடத்தில் 20 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் தீபாவளி பண்டிகையை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை அவர்கள் தங்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று அந்த பெண்ணும் அவர்களுடன் தீபாவளி பண்டிகையில் கலந்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை அவர்கள் வலுக்கட்டாயமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று, குளிர்பானத்தில் பீர் கலந்து கொடுத்து […]

பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சார் பதிவாளர் அலுவலகங்களில் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படுவது அனைத்தும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காக பத்திரப்பதிவு துறை அலுவலக நிகழ்வுகளை காமரா மூலம் கண்காணிக்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்தவகையில், 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் 3 முகாம் அலுவலகங்களில் பத்திரப்பதிவின் போது ஆள்மாறாட்டத்தை தடுக்க வெப்-காமரா மூலம் புகைப்படம் எடுக்கும் திட்டம் நேற்று […]

சென்னை, நவ. 5 – வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால். தமிழக கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை கொடுத்துள்ளார். இயக்குனர் ரமணன் தகவல். வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அருகே வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை […]
தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யும் பத்திரங்களை சிடி ஆக வழங்கும் புதிய திட்டத்தை நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் அரசுத்துறைகளில் வணிகவரித்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது பத்திரப்பதிவுத்துறை. குறிப்பாக 2012-2013 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு துறை ரூ.7,455.41 கோடி வருவாயை ஈட்டி தந்துள்ளது. தற்போது மேலும் […]
பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யா ராய் கடந்த ஒன்றாம் தேதி தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கணவர் அபிஷேக் பச்சன் அவரது பிறந்த நாளுக்கு அளித்த சிறப்பு பரிசு குறித்து நிருபர்கள் கேட்டனர். கணவர் தனக்கு பரிசளித்தார் என்று கூறிய ஐஸ்வர்யா அந்தப் பரிசு என்னவென்பதை அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறும் கூறினார். மேலும், கணவர் தனக்கு அளித்த விலையில்லாப் பரிசு என்று அவர் தனது மகள் ஆராத்யாவைக் குறிப்பிட்டார். […]
விமான பயணத்திலும் போலி டிக்கெட் அறிமுகமான ஒரு சம்பவம் வெனிசுலா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள காரகாஸ் நகரில் இருந்து கனடா நாட்டிற்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் 5 பயணிகள் கூடுதலாக இருப்பது விமானிக்கு தெரியவந்தது. உடனே 5 பேரையும் சிப்பந்திகள் கீழே இறக்கி பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த 5 பயணிகளிடமும் விசாரணை நடத்தியதில் 4 பேர் ஈரான் நாட்டையும், ஒருவர் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்தவர் என்பதும், இவர்களிடம் கனடா செல்வதற்கான […]