சென்னை, பிப்.1 – தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என பல்வேறு விதமான ஊழல்கள் மூலம் ஏற்பட்ட பல லட்சம் கோடி பொய் இழப்பினை மீட்கவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, அவற்றை அரசு கருவூலத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல், சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை, அமெரிக்க டாலருக்கு […]
காளகஸ்தி கோவிலில் காஜல்அகர்வால் சாமி தரிசனம் செய்தார். காஜல்அகர்வால் நடித்து வரும் ஆல் இன் அழகு ராஜா, தமிழ் படமும் பாட்சா, நாயக் போன்ற தெலுங்கு படமும் ஸ்பெஷல் 26 என்ற இந்தி படமும் வெளி வந்தன. இந்த வருட துவக்கமும் விஜய் ஜோடியாக நடித்த ஜில்லா படம் மூலம் சிறப்பாக அமைந்தது. ஸ்ரீகாந்த், ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றிலும் பாலாஜி மோகன் இயக்கும் தமிழ் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் இவரது தங்கை திருமணத்தையும் முடித்தார். அடுத்து காஜல்அகர்வாலுக்கும் […]
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா, தான் சிறுவனாக இருந்த போது படிப்பதற்கு அதிகாலையில் கண்விழித்தாலும், ஒரு பொறுப்பற்ற மாணவராக இருந்தேன் என தெரிவித்துள்ளார். டென்னெஸ்கி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா பேசியபோது, என்னுடைய பால்ய பருவத்தில் என்னுடைய தாய் என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார். 6 வயதில் நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். எனவே படிப்பில் பின் தங்கி விடுவேன் […]
உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4–வது இடம் கிடைத்துள்ளது. ஹாலிவுட் ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன் லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிசாயெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடம் அமெரிக்க நடிகை கேத் ஆப்டனுக்கு கிடைத்தது. ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 3–வது இடத்தை பிடித்தார். ஐஸ்வர்யாராய்க்கு 4–வது […]
நாக்பூர், பிப். 1- மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அருகேயுள்ள வினோபா பவே நகரில் காஷ்மிர் வித்யா மந்திர் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்த ஒரு மாணவன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பள்ளி நிர்வாகம் அந்த 14 வயது சிறுவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்தது. ‘இனி இதைப்போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். அவன் இதே பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதியுங்கள்’ என கெஞ்சிய பெற்றோரின் வேண்டுகோளை காதில் போட்டுக் […]
சென்னை: ஜிஎஸ்எல்வி- மார்க்-3 ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. சென்னையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட்ட இயக்குநர் சிவன் செய்தியாளரிடம் தகவல் அளித்துள்ளார். ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3 ராக்கெட்டின் முதல் கட்ட சோதனை வரும் ஏப்ரலில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிக சக்தியுள்ள கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் தயாராகிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 இயங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 4 டன் எடையுள்ள செயற்கைக்கோளை மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார். ஜோதிட கட்டுரை […]
வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: தமிழகத்தின் மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சமூக, பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு […]
வெலிங்டன், ஜன.31- உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, நெளிந்து செல்வதை கண்டு வியப்படைந்த அவர், தனது கைவலையை லாவகமாக வீசி அந்த அபூர்வ மீனை சிறைபிடித்தார். […]
சௌதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை, கணவர் விவகாரத்து செய்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகை மீது வெறியாக இருந்த கணவரின் கவனத்தை தன் மீது திருப்ப, நடிகை போலவே, சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் மனைவி. இதனால், கணவர் தன் மீது அன்பு செலுத்துவார் என்று […]

உயர்நீதிமன்றங்களில் உள்ள தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும், ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை முடித்து வைக்க நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயர்நீதிமன்றங்களின் தற்போதையை நீதிபதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதம் உயர்த்துவது என்று மத்திய சட்டத்துறை அமைச்சகம் முடிவு […]