Thursday 27th February 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்!

சென்னை:  16.11.2016 அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. 16.11.2016 முதல் 15.12.2016வரை சூரியன், விருச்சிகத்தில் இருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிகத்தில் சனியும், சூரியனும் இணைந்து இருப்பதும் மகரத்தில் இருக்கும் செவ்வாயை இரு கிரகங்கள் பார்வை செய்வதும் உலகத்திற்கு நன்மை இல்லை. உலகின் சில நாடுகளில் பெருத்த மழை, சூறை காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு இப்படி நினைக்க முடியாத இயற்கை சீற்றங்கள் தாக்கலாம். இந்தியாவில் வடமாநிலங்களில் சில இடங்கள், தென்மாநிலங்களில் சில இடங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையலாம். […]

shaligram bestow several benefits

Trees that prevent dhosham

நவகிரக தோஷத்தை நீக்கும் நவராத்திரி நவதானியங்கள் – நவராத்திரி சிறப்பு பரிகார கட்டுரை

Written by Niranjana  பொதுவாக பண்டிகைகள் நம் வாழ்க்கையில் நல்ல ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுப்பதற்காகதான் வருகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்“, “ஒளிமையமான வாழ்க்கை பெற தீபாவளி“, “புது வருடத்தில் புத்தம் புதிதாய் நல்ல விடிவுகாலம் பிறக்கும்“, போன்ற தன்னம்பிக்கை தருவதுதான் பண்டிகைகள். அதுபோல, நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும், அந்தந்த கிரகங்களை வழிபட வேண்டும் என்பது கட்டாயம். ஆனாலும், இறைவனையும் வணங்க வேண்டும் என்பதும் அவசியம். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்லலாம். […]

இச்சாசக்தி-ஞான சக்தி- கிரியா சக்தி அருளை தரும் நவராத்திரி. சரஸ்வதி பூஜை முறைகள்

நவராத்திரி சிறப்பு கட்டுரை – பகுதி 2 முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் Written by Niranjana  விஜயதசமிஎன்றபெயர்காரணம் பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை […]

நவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும் நவராத்திரி சிறப்பு கட்டுரை பகுதி – 1

Written by Niranjana நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது. இப்படி நன்மை தரும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவது? அதன் மகிமை என்ன? என்பதை நாம் […]

வாழ்க்கையை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை அல்லது 12.00 – 1.00 புதன் ஓரை அல்லது 1.00 – 2.00 சந்திர ஓரை அல்லது மாலை 3.00 – 4.00 குரு ஓரை இவ் ஓரைகளில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை பூஜை செய்தால் கணபதியின் அருளால் நன்மைகள் பெருகும்! விநாயகர் […]

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி –5

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் […]

கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர்! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி – 4

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். […]

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.? ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி –3

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »