Monday 17th December 2018
Breaking News:
தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

இந்த வார இராசி பலன்கள் | 17.12.2018 – 23.12.2018

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

17.12.2018 – 23.12.2018

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

Meshamமேஷ இராசி அன்பர்களே… நீண்ட நாட்களாக திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். வியபாரத்தில் புதிய யுக்திகள் பயன் அளிக்கும். பணவரவும் நன்றாக இருக்கும். வெளிநாட்டு தொடர்புகளில் கவனமாக இருக்க வேண்டும். கலைதுறையினருக்கு நல்ல வாரம் இது. ஸ்ரீமாங்காடு காமாட்சி அம்மனை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த வாரம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மருத்துவ செலவுகளும் படிபடியாக குறையும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். முருகப்பெருமானை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே முயற்சி வெற்றி அளிக்கும். வீண் செலவுகள் குறையும். பெண்களால் நன்மை கிடைக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். வெளியூர் பயணங்கள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணம் தேடி வரும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான விசேஷங்கள் நடக்கும். நீண்ட வருடங்களாக திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். வாகனம் வாங்குவதற்கும், வாகனத்தில் செளகர்யமான மாற்றங்கள் செய்யவும் பண வசதி கிடைக்கும். ஸ்ரீதட்ணாமூர்த்தியை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சொந்த தொழில் அமைய வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் தற்சமயம் உத்தியோகத்தை விட்டுவிடாமல் குடும்பத்தினரின் பொறுப்பில் சுயதொழில் செய்யலாம். மருத்துவதுறையில் உள்ளவர்கள் புகழ் பெறுவர். ஸ்ரீவைத்தீஸ்வரனை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… புதிய நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் நன்மையும் உண்டு. சகோதர-சகோதரிகளின் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்ப தேவைக்காக வாங்கிய சில பொருள் திருப்தி ஏற்படுத்தாது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. ஜாதகத்தில் தசா-புக்தி நன்றாக உள்ளவர்களுக்கு உத்தியோகத்தில் உயர்பதவி கிடைக்கும். ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே நினைத்த விஷயங்களை முடித்துவிடுவீர்கள். தடைப்பட்ட கல்வியை மீண்டும் தொடர சந்தர்ப்பம் அமையும். புதிய ஆடை அல்லது சிறிய அளவில் தங்கம் வாங்குவீர்கள். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். ஆரோக்கியத்தில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படலாம். ஸ்ரீமருந்தீஸ்வரரை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… பயணங்கள் நன்மை அளிக்கும். உறவினர்கள் வருகையும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியை தரும். நெருங்கிய நபர்களால் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் அதிகளவில் பணம் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட வேண்டாம். திடீர் அதிர்ஷ்டமும் உண்டு. திருத்தணி முருகனை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… நீண்ட நாள்களாக தேடி வந்த பொருள் கிடைக்கும். சிறிய அளவிலாவது சொத்து வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்தில் மணவாழ்க்கை அமையும். வங்கி அல்லது தனியார் கடன் சுலபமாக கிடைத்தாலும் தேவைக்கேற்ப மட்டும் வாங்குங்கள். ஸ்ரீகோமாதாவை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். சட்ட சிக்கல்கள்-வழக்குங்கள் தீரும். முடிந்தவரை பிரச்னைகளை பேசி தீர்த்துக்கொள்ள இந்த வாரம் உகந்தது. குடும்பத்தில் சிறு,சிறு கருத்து வேற்றுமை உண்டாகும். வேலை தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஸ்ரீமஹா விஷ்ணுவை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே வாகன தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் மிகுந்த வாரம். சிலருக்கு அயல்நாடு சென்று வர வாய்ப்பு கிடைக்கும். தடைபட்டு பாதியில் நின்ற கட்டட பணிகள் தொடர்ந்து நடக்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட சலசலப்பு தீரும். முடங்கி கிடந்த பழைய பொருட்கள் விற்பனை ஆகும். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… பண தட்டுப்பாடு தீருகிற அளவுக்கு பண வரவை பெருவீர்கள். ஆனாலும், தேவையற்ற ஆடம்பர செலவுகளை முடிந்தளவில் இந்த வாரம் தவிர்த்து விடுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். வியபாரிகளுக்கு நல்ல வாரம். பங்கு வர்த்தகத்தில் சின்ன அளவில் லாபம் பார்ப்பீர்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 16 2018. Filed under Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech