Tuesday 20th November 2018
Breaking News:
தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

இந்த வார இராசி பலன்கள் | 19.11.2018 – 25.11.2018

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

19.11.2018 – 25.11.2018

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… புதிய வாகனம் வாங்கும் யோசனை இருந்தால் இந்த மாதத்தில் அல்லது ஜனவரியில் வாங்குங்கள். உறவினர்களால் உற்சாகம் பெறுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீதட்ணாமூர்த்தியை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவை அமையும். நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்து விற்பனை செய்கிற சந்தர்ப்பம் கிடைக்கும். வியபாரத்தில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் லாபமும் பெறுவீர்கள். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு இருந்தாலும், பண விஷயத்தில் கவனமாகவும் இருங்கள். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு வரன் அமையும். சின்ன அளவிலாவது சொத்து வாங்கும் யோகம் உள்ளது. கணவன் அல்லது மனைவியின் ஆலோசனை பயன் தரும். ஸ்ரீஇராமரை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே அரசியலில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெரிய அந்தஸ்தில் உள்ளவர்களின் அறிமுகம் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சொந்த தொழில் கனவு நிறைவேறும். சிவபெருமானை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே கலை பொருட்களை வாங்கி விற்கும் வியபாரத்தில் உள்ளவர்கள் அதிக லாபம் பெறும் வாரம் இது. வங்கி கடன்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் இன்னொரு இடத்திலிருந்து பணம் கிடைத்துவிடும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். உழைப்பு அதிகம் இருக்கும். விநாயகப் பெருமானை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பும் நல்ல விஷயங்களும் அமையும். அவசியமற்ற நட்புகளை தவிர்த்து விடுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தடைப்பட்ட கல்வியை தொடர்வதற்கு முயற்சி செய்யுங்கள். வெளிநாடு சென்று வரும் முயற்சியும் நன்மை அளிக்கும். ஸ்ரீகிருஷ்ணரை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. வீட்டை அழகுப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் விரும்பிய வேலை வாய்ப்பு அமையும். நண்பர்களால் செலவுகள் ஏற்படும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… புதிய இடம் மாறுவது அல்லது இருக்கின்ற வீட்டில் ஏதேனும் மாற்றம் செய்வது போன்றவை இருக்கும். உத்தியோகம் தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சொந்த தொழிலில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயம் அளிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வியபாரத்தில் உங்களின் புதிய யுக்திகள் பயன் அளிக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஸ்ரீமஹா காளியை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே சமூக பணிகளில் உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். வீட்டிற்கு தேவையான நவீன பொருட்களை வாங்குவீர்கள். புத்திர பாக்கியத்தில் தடை இருந்து வந்த தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். முருகப் பெருமானை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும். பணவரவு இருந்தாலும், செலவுகளும் உண்டாகும். இல்லத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி நடக்கும். சந்திக்காமல் இருந்த பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்ததுபோல் எடுத்த காரியம் வெற்றிகரமாக அமையும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். அரசாங்கத்தால் அனுகூலம் அடைவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி பெறுவீர்கள். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Nov 18 2018. Filed under Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech