Sunday 19th August 2018
Breaking News:
5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை

இந்த வார இராசி பலன்கள் | 20.08.2018 – 26.08.2018

திங்கள் to ஞாயிறு இராசி பலன்கள்  

20.08.2018 – 26.08.2018

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer,Bhakthi Planet

V.G.Krishnarau

 

 

 

 

Meshamமேஷ இராசி அன்பர்களே… குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியபாரம் விருத்தி பெறும். சுபநிகழ்சிகளில் உங்கள் முயற்சிகள் நல்லவிதமாக நடக்கும். சின்ன தடைகள் ஏற்பட்டாலும் அதனை கடந்து வெற்றி பெறுவீர்கள். கடன் தருவதிலும், கடன் பெறுவதிலும் கவனமாக செயல்படுவது நன்மை தரும். சிவபெருமானை வணங்குங்கள்.

reshabamரிஷப இராசி அன்பர்களே உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்லும் முயற்சியும் வெற்றி அளிக்கும். சொந்த தொழில் செய்ய வேண்டும் என்றாலும் இந்த வாரம் தொடங்கலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். மனதைரியத்தால் சிலவற்றை சாதிப்பீர்கள். தேவி கருமாரியம்மனை வணங்குங்கள்.

Methunamமிதுன இராசி அன்பர்களே செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை தீரும். கடன் பிரச்னை சற்று இருக்கும். அதேசமயம் ஓரளவு சின்ன கடனையாவது அடைத்துவிடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். சுபகாரியங்கள் இனிதே நடைபெறும். முருகப் பெருமானை வணங்குங்கள்.

Katakamகடக இராசி அன்பர்களே புதிய திட்டங்கள் வெற்றி அளிக்கும். சிலருக்கு வங்கி பணி கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வரன் அமைவதில் சற்று தாமதம் ஏற்படும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். மருத்துவ செலவு குறையும். யாருடைய விஷயத்திலும் தலையிட வேண்டாம். சேமிக்கும் எண்ணம் தோன்றும். ஸ்ரீலஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

Simamசிம்ம இராசி அன்பர்களே உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் திட்டம் கைகொடுக்கும். தடைப்பட்டுவந்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் நன்மை நடக்கும். பணவரவு உண்டு. உயர்கல்வி பெற முயற்சி செய்தால் பலன் தெரியும். ஸ்ரீஆஞ்சநேயரை வணங்குங்கள்.

Kanniகன்னி இராசி அன்பர்களே… உத்தியோகம் மேன்மை பெறும். குழப்பங்கள் அகலும். கண்திருஷ்டியால் அவ்வப்போது உடலில் சோர்வு ஏற்படும். உறவினர்களால் சற்று மனவருத்தம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு அமையும். வெளிநாடு செல்லும் திட்டம் சிறிய தடைக்கு பிறகு நிறைவேறும். முருகப் பெருமானை வணங்குங்கள்.

Thulaதுலா இராசி அன்பர்களே உத்தியோகம் தேடி வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குறிப்பாக இசை, நடிப்புதுறையில் உள்ளவர்கள் நல்ல சந்தர்ப்பங்களை பெறுவர். வெளிநாடு சென்று வரும் யோகமும் இருக்கிறது. கடன் தொல்லை ஓரளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. எதையும் உங்கள் திட்டப்படி செய்தால் எளிதில் வெற்றி கிடைக்கும். ஸ்ரீதுர்காதேவியை வணங்குங்கள்.

Viruchikamவிருச்சிக இராசி அன்பர்களே… பயணங்கள் அனுகூலமாக இருக்கும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் இருந்த தடை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். போலீஸ், இராணுவ வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உத்தியோகம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். குலதெய்வத்தை வணங்குங்கள்.

Dhanusuதனுசு இராசி அன்பர்களே… பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து அவை உங்கள் கைக்கு கிடைக்கும். சிலருக்கு வீடு அல்லது அலுவலக இட மாற்றம் அமையலாம். சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஸ்ரீமாதவ பெருமாளை வணங்குங்கள்.

Makaramமகர இராசி அன்பர்களே சுயதொழிலில் உள்ளவர்களுக்கு புதிய கூட்டாளிகள் அமைவார்கள். வியபார போட்டிகள், தொழிலில் நிலவிய மந்தம் போன்றவை தீரும். பணவரவு நன்றாக இருக்கும். பெரிய அளவிலான இயந்திரங்களை வைத்து தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். சில நேரங்களில் திடீர் செலவும் இருக்கும். ஸ்ரீநடராஜப்பெருமானை வணங்குங்கள்.

Kumbamகும்ப இராசி அன்பர்களே அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு புகழ் கிடைக்கும். வீட்டில் அழகிய மாற்றங்களை செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். பொன், பொருள் வாங்குவீர்கள். நண்பர்களால் நல்ல மாற்றங்களை பெறுவீர்கள். ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள்.

Meenamமீன இராசி அன்பர்களே… குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் கணிசமாக உயரும். சின்ன அளவிலாவது சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக நன்மை பெறுவீர்கள். பெரிய அளவிலான பணபரிவர்த்தனைகளில் கணக்கு விஷயத்தை கவனமாக பார்க்க வேண்டும். ஸ்ரீமஹாலஷ்மியை வணங்குங்கள்.

ENGLISH Version

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

If you have found any of the information provided in our site of  benefit, value, learned something, appealing or useful,  consider a donation to  support the site and to assist with its growth and say thank you.

All donations are deeply appreciated. If you would like to make a donation, you can pay securely through Paypal below.

Donate© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Aug 18 2018. Filed under Astrology, Bhakthi planet, EBooks, Headlines, இராசி பலன்கள், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech