Wednesday 18th July 2018
Breaking News:
Tamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் !    The Fifth House is the House of Wonders    5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை    Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi

விஞ்ஞானியின் திறமை. ராணி விக்டோரியாவின் பணிவு
நிரஞ்சனா  

“ஒருவர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வயது முக்கியம் இல்லை.  திறமையே முக்கியம்“ என்றார் திருநாவுக்கரசர். திருஞான சம்பந்தர் ஒரு ஊருக்கு பள்ளக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பள்ளக்கின் ஒரு பகுதியை நாவுக்கரசர் சுமந்து வந்தார். இந்த காட்சியை கண்ட சம்பந்தர் பதறி கீ்ழே இறங்கி,

“என்னை பாவியாக்கி விட்டீர்களே“ என்ற சம்பந்தரிடம், “அப்பா நீ தெய்வத்தின் குழந்தை. உன்னை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டு்ம். வயதில் நீ சிறியவனாக இருந்தாலும் திறமையில் நீயே பெரியவன்.“ என்றார் நாவுக்கரசர். அவர் சொன்னது போல, திருமறைக் காடு எனும் ஊருக்கு திருநாவுகரசரும் திருஞான சம்பந்த பெருமானும் வந்த போது அந்த ஊரின் திருக்கோயில் பூட்டப்பட்டு இருந்தது. அத்திருக்கதவை திறக்கும் பொருட்டு “பண்ணினேர் மொழி“ எனும் திருப்பதிகத்தை பத்து பாடல்களாக பாடினார் திருநாவுக்கரசர். கோயில் திருகதவு திறந்தது.

அக்கோயில் கதவானது வழக்கம் போல் எப்போதும் திறந்து மூடும்படியாக ஒரு பாடல் பாடும்படி திருநாவுக்கரசர் ஞான சம்பந்தரை கேட்க அவரும் “சதுரம் மறை“ எனத் தொடங்கும் பாடலை பாட, முதல் பாட்டிலேயே திருக்கதவு மூடிக்கொண்டு வழக்கமாக கதவு மூடி திறக்கும் நிலையை பெற்றது.

திருஞான சம்பந்தரின் திறமை கண்டு வியந்தார் திருநாவுக்கரசர். இந்த சம்பவம் எதை உணர்த்துகிறது? வயதில் சிறியவனாக இருந்தாலும் திறமைவாய்ந்தவர்களுக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு.

இன்றைய நிலையோ வேறு  

ஆனால் இன்றைய நிலையோ வேறு. “திறமைக்கெல்லாம் மரியாதை கொடுக்குறது அந்த காலம். இந்த காலத்துலே திறமைக்கு எங்க மரியாதை? எல்லாம் கரன்சிக்குதான்.“ என்று நீ்ங்கள் நினைத்தால் அதுவும் சரிதான்.
திறமைக்கு எப்போதும் மரியாதை உண்டு என்று நிரூப்பித்த ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை சம்பவம் ஒன்று உண்டு.

அது –

விக்டோரியா மகாராணியின் மகன் கடலில் பாய் மரப்படகில் பயிற்சி எடுத்து கொண்டு இருந்தார். தன் மகனிடம் அடிக்கடி பேச வேண்டும் என்று மகாராணி விரும்பினார். அதனால் கம்பியில்லாமல் தந்தி முறையை கண்டுபிடித்து கொடுக்க யாரால் முடியும்? என தேடினார். “என்னால் முடியும்“ என்று முன் வந்தார் இளம் விஞ்ஞானி மார்க்கோனி.

ராணியின் எதி்ர்பார்ப்புக்கு மேல் பாதி வேலையை முடித்தார் மார்க்கோனி. ஒரளவு வேலை முடிந்தது என்ற மகிழ்ச்சியில் தன் ஆராய்ச்சி கூடத்தை வி்ட்டு வெளியே வாக்கிங் வந்தார். அந்த நேரத்தில் வி்க்டொரியா ராணி தன் அரண்மனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார். “Good Morning“ என்று அரசிக்கு மரியாதை செலுத்தினார் மார்கோனி. அதை சரியாக கவனி்க்காத விக்டோரியா ராணி, விஞ்ஞானிக்கு பதில் மரியாதை செலுத்தாமல் சென்று விட்டார். “வேண்டும் என்றே நம்மை அவமானப்படுத்திவி்ட்டார் மகாராணி“ என்று எண்ணிய விஞ்ஞானி, கம்பியில்லா தந்திமுறை கண்டுபிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த தகவலை ராணியிடம் சொன்னார்கள். “சாதாரண வி்ஞ்ஞானியாக இருப்பவனுக்கு இவ்வளவு திமிரா? சரி போகட்டும் விடுங்கள். வேறு யாராவது ஒரு விஞ்ஞானியை நியமித்து மீதி வேலையை முடியுங்கள்.“ என்று உத்தரவிட்டார் விக்டோரியா.

எத்தனையோ விஞ்ஞானிகள் முயன்றும் கம்பியில்லா தந்தி முறையை கண்டுபிடிக்க முடியாமல் தோல்வியை கண்டார்கள். “இனி கௌரவம் பார்த்தால் வேலை நடக்காது… திறமையானவர்களை மதித்துதான் நடக்க வேண்டும். அப்படி நடந்தால்தான் நல்லது“ என்பதை நன்கு உணர்ந்தார் மகாராணி.

வயதிலும் வசதியிலும் சிறியவரான மார்கோனியின் வீட்டுக்கே நேரடியாக சென்று, “மறுபடியும் நீங்கள் எடுத்த வேலையை முடித்த தர வேண்டும்.“ என்று கேட்டுக்கொண்டார் விக்டோரியா மகாராணி.

உலகத்தையே ஆளும் விக்டோரியா மகாராணியின் அன்புக்கும் பணிவுக்கும் தலைவணங்கி பாதியில் நின்ற வேலையை நல்ல முறையாக செய்து கொடு்த்தார் மார்க்கோனி.

இந்த சம்பவம் எதை உணர்த்துகிறது? திறமையாளர்களை எப்போதும் உலகம் போற்றி புகழும். அவர்களை மதிக்கும்.

நீங்களும் ஜெயிக்கலாம்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

Posted by on Mar 11 2012. Filed under நீங்களும் ஜெயிக்கலாம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech