Saturday 25th May 2013
Breaking News:
இந்த வாரம் உங்கள் இராசி பலன்கள் 20.05.2013 - 26.05.2013வரை!. - Guru Peyarchi 2013 (Jupiter Transit) and what it means to you.! - 2013 – 2014 குரு பெயர்ச்சி பலன்கள்! - ஜாதகப்படி மகா தைரியசாலி யார்? - ஜோதிட சிறப்பு கட்டுரை.! - நண்பனும் விரோதி ஆவது ஏன்? – ஜோதிட சிறப்பு கட்டுரை.!
Category archives for: இந்தியா

கர்நாடகத்திலேயே பணக்கார காங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.910 கோடி

கர்நாடகத்திலேயே மிகவும் பணக்கார வேட்பாளராக கருதப்படும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு ரூ.910 கோடி என்று அவரது வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2008 தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போது சொத்து மதிப்பு ரூ.145 கோடி அதிகரித்து உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10–ந் தேதி தொடங்கியது. மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று வரை மொத்தம் 2,295 பேர் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். மனுக்களில் வேட்பாளர்கள் [...]

பன்றிகளுக்கு பதிலாக இந்தியர்களை மருந்து சோதனையில் ஈடுபடுத்தும் பன்னாட்டு கம்பெனிகள்

எந்தவொரு நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கிறபோது அந்த மருந்தை ‘கிளினிக்கல் டிரையல்’ என்ற பெயரில் ‘கெய்னியா பிக்’ என்ற வகை பன்றிக்கு கொடுத்துத்தான் சோதிக்க வேண்டும். ஆனால் தற்போது பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பலவும் சட்டவிரோதமாக மருந்து பரிசோதனையில் பன்றிகளுக்கு பதிலாக இந்திய மக்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சுவாஸ்த்ய அதிகார் மஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு பொதுநல வழக்கு தொடுத்துள்ளது. அந்த மனுவில், நாடு முழுவதும் பரவலாக மருந்து [...]

இந்தியாவிலேயே தாமதமாக இன்கம் டாக்ஸ் கட்டும் மாநிலம்

பெரும் நிறுவனங்கள் முதல் சம்பளம் வாங்குபவர்கள்வரை வருமான வரி கட்டுவது மிக அவசியம். ஏப்ரல் அல்லது மே மாதங்களிலேயே படிவம் எண் 16 வழங்கப்பட்டாலும் பெங்களூரில் உள்ள சம்பளதாரர்கள் 46 சதவீதம் பேர் ஜுலை மாதத்தில்தான் கணக்கை தாக்கல் செய்கிறார்களாம். கணக்கு தாக்கல் செய்யும் முறைகள் எளிதாக இருந்தும் 96 சதவீதத்தினருக்கு சம்பளம் தவிர வேறு வகையில் வருமானம் இல்லாமல் இருந்தாலும் இவர்கள் தாமதமாகதான் வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறார்கள். இப்படி காலம் தாழ்த்தி வருமான [...]

இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது :உச்சநீதிமன்றம்

எந்தக் கட்சியும் தங்களுக்கு இந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று உரிமை கோர முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மிகவும் சரியாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சம்பளப் பாக்கிக்காக வருத்தப்படுகிறேன்: மல்லையா

கிங்பிஷர் நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. சம்பளப் பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமானோர் கம்பெனியை விட்டு விலகி வருகின்றனர். இதனால் தனது விமான சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது கிங்பிஷர். பல விமானங்களை அது ரத்து செய்ததால் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் விஜய் மல்லையா. அதில் சம்பளப் பாக்கி குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பளப் பாக்கி அதிகரித்திருப்பது தனிப்பட்ட [...]

தூக்கமே போச்சு…! பிரணாப் வேதனை

டெல்லியில் நடந்த பொது வினியோக முறை, உணவுக்கிடங்கு பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “மத்திய நிதி மந்திரி என்ற முறையில் மானியங்களுக்காக மிக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன். இதனால் நான் என் தூக்கத்தை இழந்து விட்டேன். இதில் சந்தேகமே இல்லை. மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.34 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், [...]

எஸ்.எம்.எஸ். தகவலை காட்டி ரெயிலில் பயணம் செய்யலாம்

இ-டிக்கெட் பயணிகளுக்கு புதிய நடைமுறையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் செல்போனுக்கு ரெயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.) எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும். அந்த செல்போனில், இ-டிக்கெட்டில் உள்ள அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்கும். ஒரே டிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பயணிகள் அனைவரது பெயரும் இருக்கும். பி.என்.ஆர். எண், ரெயில் எண், பயண தேதி, பயண வகுப்பு, பெட்டி மற்றும் படுக்கை எண், [...]

ரூ.2100 கோடிக்கு தொலைக்காட்சி சேனல்களை வாங்கிய அம்பானி

உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, செல்போன், சில்லறை காய்கறி கடைகள், பெட்ரோல் நிறுவனங்கள், ஜவுளித்துறை என்று பல்வேறு தொழில்களில் கொடி கட்டிப் பறந்த போதிலும், தற்போது ‘முகேஷ் அம்பானி நெட் வொர்க் 18′ என்ற குழுமத்தை உருவாக்கி உள்ளார். முதல் கட்டமாக நெட்வொர்க் 18 நிறுவனம், தெலுங்கின் முன்னணி நாளிதழான ‘ஈ நாடு’ நிறுவனத்திற்கு சொந்தமான 12 தொலைக்காட்சி சேனல்களை ரூ.2100 கோடிக்கு வாங்கி உள்ளது. எனவே, முகேஷ் அம்பானி [...]

தூங்கிய விமானிகள்: கோவா சென்ற மும்பை விமானம்

கடந்த 15 நாட்களுக்கு முன்னர், துபாயிலிருந்து 100 பயணிகளுடன் மிசி 612 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கிளம்பியது. துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. அதன் பின்னர் அந்த விமானம் ஜெய்ப்பூரிலிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில் ஒரு  விமானி தூங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து துணை  விமானியும் தூங்கிவிட்டார். மும்பை [...]

திருப்பதி கோவிலில் திருமண பதிவு மையம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் தங்கள் பகுதிகளுக்கு சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளதால், அந்த சிரமத்தை போக்க திருப்பதி கோவிலில் திருமணம் செய்பவர்கள் அதை பதிவு செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவில் அருகே திருமண பதிவு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கோவிலில் திருமணம் செய்யும் தம்பதிகள் பள்ளி- கல்லூரி சான்றிதழ், திருமண அழைப்பிதழ் போன்றவற்றை கொண்டு வரவேண்டும். சாட்சிக்கு 3 பேரையும் அழைத்து வரவேண்டும். புதுமணத் தம்பதியர் இங்கு தங்களது [...]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

<

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

Photo Gallery

Log in | Total Hits

Hit Counter provided by Los Angeles SEO