Saturday 20th April 2024

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by Niranjana

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை சிறப்பு கட்டுரை

19.09.2017 அன்று மகாளய அமாவாசை! Written by Niranjana  சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில்  நமது முன்னோர்களும் இறந்து போன ரத்த சம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் காண வருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது […]

குருவே சரணம்- குருபெயர்ச்சி சிறப்பு கட்டுரை

Written by Niranjana. குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். ஸ்ரீதட்சணாமூர்த்திதான் குரு பகவான் என்று பலர் நினைக்கிறார்கள். சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி வேறு, நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான் என்பவர் வேறு. சிவபெருமானான ஸ்ரீதட்சணாமூர்த்தி,  குருபகவானுக்கும் குரு. கல்வி – ஞானத்திற்கும் […]

கணபதி இருக்க கவலையில்லை! விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 1

Written by Niranjana 25.08.2017 அன்று விநாயகர் சதுர்த்தி  தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள, ஒரு திருக்கோயிலில், “பிரளயம் காத்த விநாயகர்” என்ற நாமத்துடன் விநாயகப் பெருமான் இருக்கிறார். இவருக்கு விநாயகர் சதுர்த்தி அன்றுமட்டும், மாலையில் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகம் மறுநாள் அதிகாலைவரை நடைபெறும். இப்படி விடியவிடிய தேனால் அபிஷேகம் செய்தாலும் அத்தனை தேனும் சிறுதுளிக் கூட தரையில் விழாமல் அத்தனை தேனையும் அவர் தனக்குள்ளே ஐக்கியபடுத்திக்கொள்கிறார். இதை காணும் போது என்றென்றும் பிள்ளையார் […]

விநாயகர் சதுர்த்தி சிறப்பு கட்டுரை பகுதி – 2

சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Written by Niranjana விநாயகருக்கு சூரதேங்காய் உடைப்பது ஏன்? விநாயகரை காசி மன்னன், தன் அரண்மனைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருந்தார். விநாயகரின் வரவை பிடிக்காத அசுரனோருவன், விநாயகர் வரும் வழியில் மலைபோல மாய உருவெடுத்து வழி மறித்தான். இதைகண்ட காசி மன்னன், “இறைவா இது என்ன சோதனை.?” என்று வேதனைப்பட்டு நின்றார். அரசனின் வேதனையை போக்க, “அரசே எனக்காக கொண்டு வந்த கும்ப மரியாதை கலசங்களிலுள்ள தேங்காய்களையெல்லாம் எடுத்து, இந்த அசுர […]

பொன்மயமான வாழ்வை தருவார் கிருஷ்ண பகவான்! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை

Written by Niranjana  14.08.2017 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், […]

வேண்டுதல் நிறைவேற்றும் ஆடித் தபசு திருநாள்! சிறப்பு கட்டுரை

Written by Niranjana 06.08.2017 அன்று  ஆடித் தபசு தவம் என்றால் என்ன? நம் மனதில் என்ன விரும்புகிறோமோ அதனை அடையும்வரை காரியத்தில் கண்ணாக இருப்பதுதான் தவம்.   நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும். மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய […]

முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும்! ஆடி கிருத்திகை சிறப்பு கட்டுரை

Written by Niranjana 19.07.2017 ஆடி கிருத்திகை சிவகிரி – சக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார். “குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர். “பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார். பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ […]

உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலஷ்மி விரதம்!

Written by Niranjana 04.8.2017 அன்று வரலஷ்மி விரதம்! கைலாயத்தில் சிவனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சிவபெருமான் தன் அருகில் இருந்த சிவகணங்களான சித்திரநோமியை பார்த்து, “நான் தானே ஜெயித்தேன்.” என்றார். அதற்கு சிவகணமும் “ஆமாம்” என்றது. இதை கேட்ட பார்வதிதேவி கோபம் கொண்டு, “நடுநிலையில்லாமல் தீர்ப்பு சொன்ன நீ குஷ்டரோகம் பிடித்து அவதிப்படுவாய்.” என்று சபித்தாள். அந்த நிமிடமே அந்த சிவகணத்தின் உடலில் குஷ்டரோகம் பிடித்துக்கொண்டது. தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் சித்திரநோமி. […]

ஆடிப்பெருக்கு திருநாள்! சிறப்பு கட்டுரை

Written by Niranjana 03.08.2017 அன்று ஆடிப்பெருக்கு திருநாள்! தெய்வ வழிபாடு விசேஷங்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உகந்த மாதம்  இந்த ஆடி மாதம். ஆம்,  உழவு பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம். கங்கை-காவேரி மற்றும் பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி, அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம மாதங்களிலில் பூஜை செய்வதை விட ஆடிமாதம் […]

கருட பஞ்சமி சிறப்பு கட்டுரை

Written by Niranjana 27.07.2017 அன்று கருட பஞ்சமி  இறைவனை எப்படி வணங்குகிறோமோ அதுபோல இறைவனுடைய வாகனத்தையும் வணங்க வேண்டும். விஷ்ணு பகவானின் வாகனமான கருடனை வணங்கினால், அவர்களுக்கு திருமாலின் ஆசியும் அனுகிரகமும் கிடைக்கும். ஆம். ஸ்ரீமந் நாராயணனின் எல்லா அவதாரங்களிலும் கருடன், பெருமாளுக்கு உதவியாக இருந்தார். ஸ்ரீராமஅவதாரத்தில் மால்யவனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தபோது, ஸ்ரீராமரின் மீது வெயில்படாமல் இருக்க, கருடபகவான் ஆகாயத்தில் தன்னுடைய  இரண்டு இறக்கைகளையும் விரித்து இராமரின் மீது வெயில்படாமல் காத்தார். அதேபோல கிருஷ்ணஅவதாரத்தில், ஸ்ரீகிருஷ்ணபகவான் காளிங்க […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech