Thursday 25th April 2024

தலைப்புச் செய்தி :

திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள் | கண்ணப்ப நாயனார்!

அறுபத்து மூவர் வரலாறு

பகுதி – 17 

Written by Niranjana 

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் niranjana

நிரஞ்சனா

முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம்.

திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை காத்தான் திண்ணன்.

உலகத்தையே காக்கும் சிவன். ஆனால் திண்ணனை பொறுத்தவரை எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனை திண்ணன்தான் பத்திரமாக காக்கிறான். ஒரு சிறு எறும்பு கூட சிவலிங்கத்தின் அருகில் செல்லாதவாறு காத்து வந்தான்.

Bhakthi Planetஸ்ரீராமர் காட்டில் இருக்கும் போது, ஒரு விநாடி கூட உறங்காமல் லட்சுமணன் கண்ணும் கருத்துமாக துணை இருந்ததை போலவே இருந்தான் திண்ணன்.

பொழுது விடிந்தது. தனக்காகவும் தன் குஞ்சுகளுக்காகவும் பறவைகள் உணவுக்காக தமது கூடுகளை விட்டு பறந்தது. ஆனால் திண்ணனோ தனக்காக இல்லாமல் குடுமி சாமிக்காக வேட்டைக்கு சென்றான்.

அத்திருகாளாத்தியின் பக்கத்திலுள்ள காட்டில் வேட்டைக்கு சென்றான். அங்கே பன்றியை வேட்டையாடி கொன்றான். மான்களையும் வேட்டையாடி கொன்றான்.

நம் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் பல வகையான பதார்த்தங்களை செய்து வைப்போமே அதுபோல, குடுமி சாமிக்கு பலவிதமாக இறைச்சிகளை தீ மூட்டி அம்பின் நுணியில் மிருகங்களின் கொழுப்பு மிகுந்த பகுதிகளை தீயில் இட்டு பக்கவமாக நெருப்பில் பன்றியிறைச்சியையும், மான் இறைச்சியையும் சமைத்தான். அந்த இறைச்சியில் சுவைக்காக தேனையும் கலந்தான் திண்ணன்.

இறைவனுக்கு பூஜைக்குரிய மலர்களை தன் குடுமியில் வைத்துக்கொண்டு, அபிஷேகத்திற்கான நீரை தன் வாயில் வைத்து,  சமைத்த இறைச்சிகளை தன் கைகளில் வைத்து கொண்டு குடுமி சாமி இருக்கும் இடத்திற்கு வந்தான்.

சற்று நேரத்திற்கு முன்னதாக சிவகோசாரியார் பூஜித்து சென்றgreensite மலர்களை முன்பு போல் பாதுகை அணிந்திருநத தமது கால்களால் அகற்றினான். தனக்கு தெரிந்தவரை குடுமி சாமிக்கு பூஜை செய்து,  தான் சமைத்த இறைச்சியை லிங்கத்தின் முன் வைத்து, “இந்த தடவை பன்றி, மான் இறைச்சியில் தேனை ஊற்றி சமைத்து இருக்கிறேன் சாப்பிடு சாமி ருசியா இருக்கும்“ என்று கூறினான் திண்ணன்.

வேட்டைக்கு சென்ற மகன் வீடு திரும்பாமல் மலைமேல் இருக்கும் குடுமி சாமியே கதி என்று இருக்கிறானே என்று மனம் வருந்தினார் திண்ணனின் தந்தையும், திண்ணனின் நண்பர்கள் நானனும் – காடனும். அதனால் திண்ணனை காட்டில் இருந்து அழைத்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் தேவராட்டியையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு திண்ணனின் இருப்பிடத்திற்கு வந்தார் திண்ணனுடைய தந்தை.

திண்ணனை பார்த்ததும் அழுது விட்டார். “நீ எப்படி வாழ வேண்டியவன் பைத்தியம் பிடித்ததுபோல் இந்த குடுமி சாமியே கதி என்று இருக்கிறாயே? வேடவர்களுக்கு தலைவனாக வர வேண்டிய நீ, இப்படி யாரும் இல்லாத காட்டில் தனியாக இருக்கிறாயே? இத்தனை நாட்களாக இங்கிருந்தாய்    ஒரு நாளாவது உன் எதிரில் இந்த குடுமி சாமி வந்தாரா? ஏன் இப்படி நடந்துக்கொள்கிறாய்?“ என்று திண்ணனை பார்த்து அழுதும் கொஞ்சியும் பார்த்தார். கடைசியில் கோபமாக திட்டியும் பார்த்துவிட்டார். ஆனால் திண்ணன் எதற்கும் மசியவில்லை.

நெருப்பில் இரும்பை போட்டால் இரும்பு கூட உருகிவிடும். ஆனால் திண்ணனின் மனமோ இரும்பை விட கடினமாக இருந்தது. அந்த அளவுக்கு குடுமி சாமி மேல் இருந்த அன்பு காரணமாக இருந்த்து. அதனால், “குடுமி சாமியை விட்டு நான் வர மாட்டேன்” என்று ஆவேசமாக கத்தினான். இனி இவனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள்.

(சிவதொண்டு தொடரும்-அடுத்த பகுதிக்கு கிளிக் செய்யவும்)

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

©2011- 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech