Thursday 18th April 2024

தலைப்புச் செய்தி :

இராணுவ வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

Click for Previous Part

கேள்வி : வணக்கம் ஐயா. இங்கு என்னுடைய ஜாதகத்தை இணைத்துள்ளேன். பிறந்த தேதி – 22.11.1985. பிறந்த நேரம் – இரவு 08.50. பிறந்த இடம் – புதுகோட்டை. B.E(Computer Sceince & Engg) படித்துள்ளேன். நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.?

-என்.கார்த்திகேயன்

பதில் : மீன இராசி, மிதுன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு தற்காலம் கேது திசை, புதன் புக்தி 28.12.2014வரை நடைப்பெறுகிறது. கோச்சாரத்தில் குரு 4-ல் இருப்பதால இன்னும் 6 மாத காலத்திற்குள் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கேள்வி : அன்புள்ள ஐயா. என் பிறந்த தேதி – 17.07.1977. பிறந்த நேரம் – காலை 09.30. பிறந்த இடம் – கல்லங்குறிச்சி. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நிரந்தர வேலையும் இல்லை. நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். இந்த வேலையில் திருப்தி இல்லை. எனக்கு இசையில்தான் ஆர்வம். இசையமைப்பாளர் ஆக விரும்புகிறேன். திருமணம், வேலை, எனது குறிக்கோள் போன்றவற்றில் மலையளவு தடைகள் வருகிறது. எனது பிரச்னைகள் தீர்ந்து வெற்றி பெறுவேனா?

-என்.சிவக்குமார்

பதில்: குடும்ப ஸ்தானத்தை சூரியன் பார்வை செய்வதால் திருமணம் தாமதம் ஆகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜீவனஸ்தான அமைப்பின்படி வேலை வாய்ப்பு நிச்சயம் அமையும். தசா-புக்தி சாதகமான நிலை தற்போது இல்லை என்றாலும், 28.02.2014 பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. சுக்கிரன், குருவோடு சேர்ந்துள்ளதால் இசைத்துறையில் பெரிய அளவில் வருவது கடினம். உத்தியோகமே சிறந்தது.

கேள்வி : ஐயா, எனக்கு திருமணம் நடைப்பெற இருக்கிறது. இருந்தாலும், எனக்கு நிறைய கடன் பிரச்னை உள்ளது. எல்லாம் என் குடும்பத்திற்காக செலவு செய்தேன். என் கடன் அடைப்படுமா?. என் சொந்த வீடு கனவு நிறைவேறுமா?. நான் வாழ்வில் முன்னேறுவேனா. என் ஜாதகம் அனுப்பி உள்ளேன்.

-சுப்பிரமணி

பதில் : மேஷ இராசி, கடக லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு சந்திர திசையில் இராகு புக்தி நடைப்பெறுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் திருமணம் நடக்க வாய்ப்பள்ளது. 6-ம் அதிபதி குரு, 3-ல் இருப்பதால் கடன் தொல்லை நீங்கி விடும். சொந்த வீடு அமையும் யோகம் உண்டு.

கேள்வி : பிறந்த தேதி – 03.04.1980. பிறந்த நேரம் – இரவு 09.12. பிறந்த இடம் மலைசியா. பிறந்த தேதி – 05.08.1981. பிறந்த நேரம் தெரியவில்லை. பிறந்த இடம் ஸ்ரீலங்கா. இராசி-நட்சத்திரம் என்ன?

-St Law

பதில் : மலேசியாவில் பிறந்தவரின் இராசி துலா. லக்கினமும் துலா. நட்சத்திரம் விசாகம் 1-ம் பாதம். ஸ்ரீலங்காவில் பிறந்தவரின் பிறந்த நேரம் இல்லாமல், ராசி-லக்கினம்-நட்சத்திரம் துல்லியமாக கணிக்க இயலாது.

கேள்வி : வணக்கம் ஐயா. நான் பக்தி பிளானட்டை தொடர்ந்து பார்த்து வருகிறேன். என் பிறந்த தேதி – 04.04.1981. பிறந்த நேரம் – இரவு 10.48. பிறந்த இடம் – சென்னை. நிறைய சோதனைகளை வாழ்க்கையில் சந்தித்து வருகிறேன். 2006-ம் ஆண்டு என் திருமணம் நடந்தது. என் கணவருடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என் பிரச்னை எல்லாம் என் மாமியாரும் என் வேலையிலும்தான். இப்போது இந்த சமுதாயத்தின் மீதும் கவலைப்படுகிறேன். இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளும் எடுத்துக்கொண்டேன். ஆனால் எந்த மருந்தும் பயன் தரவில்லை. என் கணவர் மற்றும் என் குழந்தைகளை தவிர மற்றவர்களை நான் நேருக்கு நேராக பார்ப்பதும் இல்லை. என் பிரச்னைகளுக்கு என்ன பரிகாரம் என்பதை தெரிவிக்கவும்.

-ஸ்ரீ

பதில் : மீன இராசியில் பிறந்த நீங்கள் தற்காலம் அஷ்டம சனியில் இருக்கிறீர்கள். குரு பார்வையால் அஷ்டம சனியின் தொல்லை சற்று குறையும். உங்களுக்கு சுக்கிர திசையில், குரு புக்தி நடைப்பெறுகிறது. வரும் 2014 பிப்ரவரிக்கு பிறகு பிரச்னைகள் தீரும். பிரதி வெள்ளிகிழமைகளில் அம்பாள் கோயில் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும். நன்மைகள் தேடி வரும்.

கேள்வி : ஐயா, எனது காதல் திருமணம், 06.07.2003 அன்று வடபழனி முருகன் கோயிலில் நடந்தது. திருமணத்தின்போது பொருத்தம் எதுவும் பார்க்கவில்லை. நாங்கள் தற்போது 5 மாதங்களாக பிரிந்து வாழ்கிறோம். குழந்தையும் இல்லை. எனது தாயாருக்கு நான் ஒரே மகள். தாயார் என்னுடன்தான் இருந்து வந்தார். எனக்கு தந்தை இல்லை. இதுநாள்வரை அனைத்துBhakthi Planet பிரச்னைகளையும் நான் தான் கவனித்து வந்தேன். 7 ஆண்டுகளாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் குழந்தை ஏதும் இல்லை. எனது கணவருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக அதாவது 2 முதல் 5 மில்லியன் மட்டும் உள்ளது. எனக்கு தைராய்டு பிரச்னை உள்ளது. அதுவும் தற்போது நார்மலாகதான் உள்ளது. எனது கணவர், தான் ஆண் என்னும் அகம்பாவம் அதிகம் உள்ளவர். என்னை அடிக்கிறார். நான் விவகாரத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவித்த நிலையில், தற்போது என்னிடம் அழுது தன்னை மன்னிக்குமாறு கோருகிறார். எனது கணவர் விதிக்கும் கட்டுப்பாடுகளில் முக்கியமானது எனது சம்பள அட்டையை அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்கிறார். காளகஸ்தி, இராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டேன். எனது ஜாதகப்படி எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்.

-கவிதா

பதில் : டிசம்பர் 2013வரை தசா-புக்தி மற்றும் கிரக சூழ்நிலைகள் சாதகமாக இல்லை. அம்மன் வழிபாடு தொடர்ந்து செய்து வரவும். பிரச்னைகள் குறைந்து நிம்மதி கிடைக்கும்.

கேள்வி : ஐயா, என் பிறந்த தேதி – 18.04.1966. காலை 08.04. கோவை. இதுவரையில் வாழ்க்கையில் சரியாக சாதிக்க முடியவில்லை. செய்த எல்லா வியபாரங்களும் நஷ்டமாகிவிட்டது. எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடன்கள் அதிகம் உள்ளது. பரிகாரங்களும் செய்து பார்த்துவிட்டேன். எனக்கு சர்க்கரை வியாதியும் வந்து சிரமப்படுகிறேன். என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.? தயவு செய்து தெரிவிக்கவும்.

-ஜி.சந்திர சேகரன்

பதில் : மீன இராசியில் பிறந்த உங்களுக்கு அஷ்டம சனி இருப்பதாலும், லக்கினத்தில் இராகு இருப்பதாலும் சனிகிழமையில் நவகிரக சந்நதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும். தடைகள் விலகும். சுக்கிர திசையில் சூரிய புக்தி 08.11.2013வரை நடைப்பெறுகிறது. இதன் பிறகு நல்ல எதிர்காலம் உண்டு.

கேள்வி : வணக்கம். என்னுடைய பிறந்த தேதி 22.11.1989. நேரம் – காலை 06.37. நான் இராணுவ வேலைக்கு முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். இராணுவ வேலை எனக்கு உகந்ததா?

– KG P

பதில் : சிம்ம இராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் அமைந்த இடம் சிறப்பாக உள்ளது. அரசாங்க உத்தியோகம் உண்டு. இராணுவத்தில் பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

கேள்வி : என் பிறந்த தேதி 04.05.1989. காலை 03.40. திண்டுக்கல். எனக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு அமையுமா?. வாய்ப்பு இருக்கும் என்றால் கல்வி கற்ற பிறகு வெளிநாட்டில் நான் சிறப்பாக வாழ முடியுமா?. அல்லது இந்தியாவில் கல்வி கற்று முன்னேறுவேனா?

-சீனு அருண்

பதில் : நல்ல கல்வி அமையக்கூடிய கிரக நிலைகள் உங்கள் ஜாதகத்தில் உண்டு. வெளிநாடு செல்லக்கூடிய சிறப்பும் இருக்கிறது. சனி பகவான் தற்போது உங்களுக்கு தடைகளை தந்துக்கொண்டிருக்கிறார். பிரதி சனிக்கிழமையில் நவகிரக சந்நதியில் வழிபாடு செய்யவும். சிறப்புகள் சேரும்.

கேள்வி : என்னுடைய பிறந்த தேதி 11.10.1976. நேரம் காலை 7.00 இறையூர், செய்யாறு தாலுகா. நாள் டிசம்பர் மாதம், நண்பருடன் இணைந்து டி.வி.ஷோ எடுக்க ஆரம்பித்தேன். அதற்கு பல தடைகள் வருகிறது. டி.வியில் ஒளிபரப்பு ஆகாமல் தடைப்படுகிறது. எனக்கு ஷேர் மார்கெட்டில் ஆர்வம் அதிகம். 4 வருடமாக முயற்சிக்கிறேன். லாபம் சம்பாதிக்க முடியவில்லை. அதை விடவும் மனம் இல்லை. தொடரலாமா?.

-சந்திரசேகரன் மணியன்

பதில் : மேஷ இராசியில் பிறந்த உங்கள் ஜாதக கிரக நிலைகளின் அமைப்பின்படி ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் லாபம் எதிர்பார்ப்பது வீண். உங்கள் ஜாதகம் காளசர்ப்ப யோகம் உள்ள ஜாதகம். ஒருமுறை திருகாளத்தி சென்று பரிகாரம் செய்து வரவும். நாக வழிபாடு தொடர்ந்து செய்து வரவும். தொழிலில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

****************************************************

ஜோதிடம் – ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

இது ஒரு இலவச சேவையாகும்.விரிவான பலன்களை அறிய கட்டண சேவையை பார்க்கவும்.

உடனடியாக 3 நாட்களுக்குள் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவை பார்க்கவும்.

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Jun 29 2013. Filed under Headlines, இலவச ஜோதிட கேள்வி பதில், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech