Monday 29th May 2017
Breaking News:
New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    New update : HEVILAMBI TAMIL NEW YEAR RASI PALAN… ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !    New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    New update : WILL ATHISAARA VAKRA GURU BESTOW BENEFITS    New update : அதிசார வக்கிர குரு நன்மை தருமா?    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஷீரடி சாய்பாபாவுக்கு நிகழ்த்திய அற்புதம்

நிரஞ்சனா

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அது நல்லவிதமாக நிறைவேறும் என்கிற நம்பிக்கையான வார்த்தைகளை பேச வேண்டும். நல்ல வார்த்தைகளே நல்வழிகாட்டியாக அமைந்துவிடும். நல்ல விஷயங்களை பேச வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல செயல்களை செய்ய செய்ய  ஊழ்வினை அகலும்.

வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகள் பூர்வஜென்ம பலன்களால்தான் அமைகிறது. இன்று விதைத்ததைதான் சில மாதங்கள் கழித்து அறுவடை செய்கிறோம். எள்ளை விதைத்துவிட்டு நெல்லை எதிர்பார்க்கலாமா?. அதுபோலதான் நாம் செய்யும் நன்மை-தீமைகளே வாழ்க்கையின் ஏற்ற-தாழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது.

ஜெனனத்துக்கு முன்பும், மரணத்திற்கு பிறகும் நாம் எங்கிருந்தோம்? எங்கிருந்து வந்தோம் என்று கேள்விக்கு விடைதெரிந்துவிட்டால், விதியாவது கடவுளாவது என்று பேசலாம்.

ஒரு பொருள் உருவாகிறது என்றால் அதற்கு மூலபொருள் வேண்டும் அல்லவா. அதுபோலதான் மனிதன் எப்படி தோன்றினான்? இந்த பூலோகத்தின் முதல் மனிதனின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது?

இதற்கு விடைகளை விஞ்ஞானம் சொன்னாலும், எந்த படைப்புக்கும் மூல பொருளாக, இந்த உலகத்தை கட்டிகாக்கிறது ஒரு சக்தி. எது எப்படி அமைய வேண்டும் என்பதையும், அந்த சக்திதான் தீர்மானிக்கிறது.

காக்கைக்கு வைத்த சிறகை மனிதனுக்கு வைத்தால் எப்படி இருக்கும்.? ஆந்தைக்கு வைத்த கண்ணை மனிதனுக்கு வைத்தால் எப்படி இருக்கும்.? விதி வசத்தால் மனித தோற்றங்களில் வித்யாசம் இருக்கலாமே தவிர, இறைவன் இந்த குறைகளை அனைவருக்கும் தருவதில்லை. தன் சக்தியால் படைக்கபட்ட ஜீவன்களின் நலனில் இறைவனுக்கு எப்போதும் அக்கறை உண்டு – துணை உண்டு.

இறைவனை நம்பியும் கெட்டவர்கள் இருக்கிறார்களே என்றால், “செய்த வினையும், செய்கின்ற தீ வினையும், ஓர் எதிரொலியை காட்டாமல் விடாது.” என்றார் ஒரு அறிஞர்.

அந்த தீ வினைகள் அகல, இறைவனின் நாம மந்திரமே நமது வாழ்வை சிறப்பாக இயங்க வைக்கும் இயந்திரம்.

“கோவிந்தா, கோபாலா, பெருமானே, ஈஸ்வரா” என்று சொல்லி வரும்போது, ஆபத்தான காலகட்டத்தில் அந்த பெயர் உடையவர்கள் நிச்சயம் நமக்கு உதவி செய்கிறார்கள். ஆபத்தில் இருக்கும்போது ஒருவர் நம்மை காப்பாற்றினால், காப்பாற்றியவர்களின் பெயரை கேட்டால் நிச்சயம் அது நம் இஷ்ட தெய்வ பெயராகவே இருக்கும்.

விஞ்ஞானமா? மெய்ஞானமா?

பூகம்பத்தையும், சுனாமியையும் இனி வராமல் நிறுத்திவிட்டால் இயற்கைக்கு சக்தி இல்லை – இறைவன் இல்லை என்று கூறலாம்.

ஆனால் அதுவரை இறைவன் இருக்கிறார். நம் செயல்களை கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார். நம்மை ஆட்டிபடைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லி எழுதி வைத்தவர்கள், அவர்களின் தலைமுறையில் கூட அவர்களுடைய எழுத்துக்கள் போற்றப்பட்டதில்லை. ஆனால் இறைவன் உண்டு என்று சொன்ன “திருவாசகம்” போன்றவை காலம் கடந்தும் புகழ் பெறுகிறது – கடல் கடந்தும் புகழ் பெறுகிறது. காலத்தால் அவற்றை அழிக்க முடியவில்லை. காரணம் அவற்றில் இறைவனின் நாமம் இருக்கிறது. இறைவனுடைய நாமம்தான் அத்தகைய சிறந்த படைப்புகளை இன்னும் உயிருடன் வைத்திருக்கிறது.

 ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்,  ஷீரடி சாய்பாபாவுக்கு    நிகழ்த்திய அற்புதம்

எண்ணற்ற அற்புதங்களை தன் பக்தர்களின் நலனுக்காக நடத்தி காட்டியவர் மகான் ஷீரடி சாய்பாபா. பக்தர்களின் கர்மாக்களை போக்கும் நம் ஷீரடி சாய்பாபாவுக்கு  ஒருநாள் நெஞ்சுவலி ஏற்பட்டது. தமது நெஞ்சுவலி எந்த மருந்தால் நீங்கியது என்பதை பற்றி சாய்பாபா தன் பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதை பற்றி பார்ப்போம்.

ஒருநாள் இராமதாஸர் என்பவர் ஷீரடி சாய்பாபாவை பார்க்க வந்திருந்தார். அவர் எப்போதும் விஷ்ணு சஹஸ்ரநாமம், இராமாயணம் போன்ற நூல்களை கையோடு எடுத்து வருவார். அவரை விட்டு என்றும் அந்த புராண புத்தகங்கள் பிரிந்ததில்லை. எங்கு சென்றாலும் தம் செல்ல பிள்ளைகளைபோல அந்த நூல்களையும் தம்முடன் எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்டவர் இராமதாஸர்.

ஒரு சமயம் சாய்பாபா இராமதாஸரிடம், ”எனக்கு வயிற்று வலியாக இருக்கிறது இராம். நீ, நான் சொல்லும் மருந்தை வாங்கி, அதை கஷாயம் செய்து எடுத்து வா” என்றார்.

சாய்பாபாவின் கட்டளையை ஏற்று, அவர் கையில் இருந்த ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம நூலை அங்கேயே வைத்துவிட்டு, பாபா சொன்ன சூரணத்தை வாங்கி, அதை கஷாயம் செய்து கொண்டு வர சென்றார் இராமதாஸர்.

இராமதாஸர் வைத்துவிட்டு சென்ற ஸ்ரீவிஷ்ணுசஹஸ்ரநாமம புத்தகத்தை எடுத்த பாபா, அதை ஷாமாவிடம் கொடுத்து, “ஷாமா.. இந்தா… இது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம். இதை நீ படி. இந்த புத்தகத்தையும் நீயே வைத்துக்கொள். இந்த நூலுக்கு ஒரு சக்தி இருக்கிறது. ஒருநாள் எனக்கு நெஞ்சுவலி இருந்தபோது, இந்த புத்தகத்தை என் மார்போடு அணைத்தப்படி உறங்கினேன். என் நெஞ்சுவலி நீங்கியது. இதை நீயே வைத்துக்கொண்டு தினமும் படித்து வா. மனதில் மகிழ்ச்சி எழும். ஆற்றல் கிடைக்கும்.” என்றார் ஷாமாவிடம் சாய்பாபா.

இப்படி நோய் தீர்க்கும் ஆற்றல் பல மந்திரங்களுக்கு இருந்தாலும், அதில் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமமும் விசேஷமானது.

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க அனைத்து வியாதிகளும் நீங்கும் அல்லது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்நாமத்தை வீட்டில் ஒலிக்கச் செய்தாலும் அந்த “மந்திர ஒலி அலைகள்” வீட்டுக்கும் – அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும் நன்மைகளை தந்திடும்.!

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்விபதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 N. JOTHI,
Advocate,
319. Law Chambers
Madras High Court,
Chennai – 104

web counter

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech