Tuesday 28th March 2017
Breaking News:
New update : DOES BLACK-MAGIC AFFECT YOU?    New update : செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?    New update : WILL ATHISAARA VAKRA GURU BESTOW BENEFITS    New update : அதிசார வக்கிர குரு நன்மை தருமா?    New update : கன மழை பெய்யும்...! 14.03.2017 முதல் 08.05.2017வரை மழை காலங்கள்.    From 14.03.2017 till 08.05.2017 heavy rains foreseen.     Read more…    QR Codes: USE THIS QR CODES FOR BhakthiPlanet.Com Horoscope Consultation payment transaction. Click HERE    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi     New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Read More...    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

இரும்பு – இறந்து போனவர்கள் – துணி இவை கனவில் வந்தால் என்ன பலன்

நிரஞ்சனா

இரும்பு கனவில் வந்தால் என்ன பலன் 

இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம்.

இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால் மனநிம்மதி குறையும்.

இரும்பை வாங்குவது போல கனவு கண்டால், எதிர்பாராத சங்கடங்கள் வேலையில் சிரமங்கள் உண்டாகும். பணவிரயம் சந்தோஷம் குறையும். எச்சரிக்கையாக நடந்து கொள்வதே நல்லது.

இரும்பை பிடித்து கொண்டு இருப்பது போல கனவு கண்டால், நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பிப்பீர்கள். கைவிட்டுபோக இருந்த பொருட்களை காப்பாற்றி விடுவீர்கள்.

இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

இறந்து போனவர்கள் கனவில் வந்தால், அவர்களின் ஆசியால் நன்மைகள் ஏற்படும். வரும் ஆபத்தை முன் கூட்டியே அறிவீர்கள். தலைக்கு வந்தது தலைபாகையுடன் போவது போல, பெரிய சங்கடங்கள் வந்தாலும் அது நன்மைக்குதான் என்று உணர்வீர்கள்.

இறந்தவர்கள் கனவில் உங்களிடம் பேசுவது போல கனவு கண்டால், ஆபத்தான தருணத்தில் உங்களுக்கு உதவ சிலர் முன்வருவார்கள். செல்வாக்கை இழந்தவர்களாக இருந்தாலும் சிக்கிமுக்கி கல் பல வருடம் தண்ணீரில் இருந்தாலும் அதை எடுத்து இரும்பால் அடித்தால் நெருப்பு வருவது போன்று, அவப்பெயரில் இருந்தவர்கள் நற்பெயர் திரும்ப பெறுவர். உற்றார் உறவினர்களிடத்தில் புகழின் உச்சிக்கே போவீர்கள்.

இறந்தவர்கள் உங்களுடன் அல்லது உங்கள் குடும்பத்தாருடன் சாப்பிடுவது போல கனவு கண்டால், புகழும் அதன் மூலமாக செல்வங்களும் ஏற்படும். விபத்தில் இருந்தும் தப்பிப்பீர்கள். உங்கள் கஷ்டத்தை மற்றவர்கள் தீர்த்து வைப்பார்கள். பழைய உறவு மீண்டும் புதிய உறவை போல மலரும். வியபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படும்.

இறந்தவர்கள் உங்கள் இல்லத்தில் தூங்குவதை போல கனவு கண்டால், பெரிய ஆபத்தில் இருந்து தப்பிப்பீர்கள். யார் மூலமாவது புதிதாக பிரச்சனை ஏற்படும். இருந்தாலும் அந்த பிரசசனை சுமூகமாக எந்த பெரிய பாதகமும் இல்லாமல் விலகும்.

இறந்தவர்கள் உங்களுக்கு உணவ பரிமாறுவது போல கனவு கண்டால், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் தடை விலகி சுபமாக நடக்கும். வழக்கு நடந்து கொண்டு இருந்தால் அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

துணி கனவில் வந்தால் என்ன பலன்

புது துணி அணிவது போல கனவு கண்டால், புதிய சிக்கல்கள் உருவாகும். எதிர்பாராத வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடக்கும். சும்மா இருந்தாலும் உங்களிடத்தில் வீண் சண்டைக்கு யாராவது வருவார்கள். இப்படி திடீர் என்று இந்த சம்பவத்தால் மன அமைதியில்லாமல் சிறிது நாட்கள் அவதிப்படுவீர்கள் சில நாட்களுக்கு பிறகுதான் யார் மூலமாவது நன்மை கிடைக்கும்.

கிழிந்த துணியை அணிந்து இருப்பது போல கனவு கண்டால், பண வரவு இருக்கும். ஒரு காரியத்தை தொடங்குவீர்கள். அது சுலபத்தில் நடக்காது. இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். புது வரவும் அதனால் உற்சாகமும் ஏற்படும்.

கிழிந்த துணியை தைப்பது போல கனவு கண்டால், புகழ், செல்வம் உண்டாகும். இனிமையான செய்திகள் கிடைக்கும். பணம் பற்றாக் குறையிருக்காது. நினைத்ததை சாதிப்பார்கள்.

துணியை கிழிப்பது போல கனவு கண்டால், வேலையில் சில மாற்றம், உறவில் விரிசல் போன்றவை உண்டாகும். மனப்பூர்வமாக யாரை நம்பினீர்களோ அவர்களால் பிரச்சனை ஏற்படும். பிறகுக்கு நன்மை செய்தாலும் அவர்கள் உங்களை குறைதான் கூறுவார்கள்.

கிழிந்த துணியை உங்கள் குடும்பத்தினர் உடுத்தியிருப்பது போல கனவு கண்டால், ஏதோ ஆபத்து வரும். இருந்தாலும் இறைவனின் ஆசியாலும் உங்கள் புத்திசாலிதனத்தாலும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பி வருவீர்கள். குடும்பத்தில் நிம்மதியின்மை இருக்கும். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் யாரோ ஒரு மூன்றாம் நபர் ஆட்டிபடைப்பார்.

 பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.  

சிலருக்கு கனவு கண்ட சில நாட்களிலேயே பலிக்கும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சி அடைவோம். அதுவே எதிர்மாறான கனவு கண்டால் அந்த கனவை நினைத்து நினைத்தே வேதனைப்படுவர்களும் இருப்பார்கள். அப்படி தீய கனவை கண்டவர்கள் இறைவனை  நம்பிக்கையுடன் வணங்கினால் தீய கனவுகளும் வெறும் கனவாகவே ஆகிவிடும். மொத்தத்தில் “இறைவன் ஒருவனே மிக பெரியவன்”. அவனையே முழு மனதுடன் நம்பினால் சங்கடங்கள் விலகி வாழ்நாள் முழுவதும் எதிலும் சாதிக்கலாம் – புகழ் பெறலாம்.

ஒவ்வொரு கனவுகளின் பலன்களை படிக்க கிளிக் செய்யவும்

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 8 2012. Filed under கனவுகளின் பலன்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech