Thursday 28th March 2024

தலைப்புச் செய்தி :

success quotes

நிரஞ்சனா

1. மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று  தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை.    

2. தன்னை தானே தாழ்மைபடுத்திக்கொள்பவன் பாதாளத்தில் வீழ்கிறான்.  தன்னம்பிக்கையில் சிறந்தவன், எப்படியும் போராடி சிகரத்தை அடைகிறான்.   

3. பூக்களுக்குள் இருக்கும் நறுமணத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அறிய வைக்கும் காற்றை போல, இந்த சமுதாயத்தில் ஒருவருக்கு நல்ல பெயர் – புகழ் என்பது, அவர் செய்யும் நற்செயலால்தான்  கிடைக்கிறது.

4. தன்னம்பிக்கை விடாமுயற்சி இவை இரண்டும் ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய நண்பர்கள். இந்த நண்பர்களை போன்று வேறு யாரும் ஒருவரை வெற்றி பெற செய்ய முடியாது.

5. முயற்சியில் தோல்வி ஏற்பட்டால் மற்றவர்கள் மத்தியில் கேவலமாகிவிட்டதே என்று கருதாமல், கரையை தொட நினைக்கும் கடல் அலைகளின் முயற்சிபோல் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.

6. குடையினால் சூரியனை எப்படி மறைக்க முடியாதோ அதுபோல தன்னம்பிக்கை உள்ளவரை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது.

7. தவழும் குழந்தை நடக்கும் போது, பலமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடக்க முயற்சிக்கும். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அது தற்காலிகம்தான். தொடர் முயற்சி ஒருநாள்  வெற்றி தரும் என்று பெரியோர்களுக்கு சொல்லாமல் செயலில் காட்டுகிறது குழந்தை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Jun 25 2012. Filed under நீங்களும் ஜெயிக்கலாம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech