Thursday 19th January 2017
Breaking News:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு : சென்னை மெரினாவில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இளைஞர்கள் குவிந்து உள்ளனர்.     ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டக்களத்திற்கு இளைஞர்கள், பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.    New update: Saturn Transit Predictions (Sani Peyarchi) 2017-2020 (English Version)    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    New update: சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிப்பெயர்ச்சி பலன்களும்-பரிகாரங்களும்!    The Frightening Natural disasters to the world! | உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்! சிறப்பு கட்டுரை....    Guru Transit Predictions | குரு பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017வரை!     Dhunmuki year predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Dhunmuki Year Predictions | “துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்!    Read More...    Astrology prediction; "These planets shake the world"    உலகத்தை அதிர வைக்கப் போகும் கிரக மாற்றங்கள்!    இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017... Rahu Ketu transit 2016-2017 predictions in tamil    இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? - இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி    2016 New Year Rasi Palan in Tamil | 2016 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள்!    Saturn Transit Predictions 2014-2017 | sani peyarchi in English...!    சனிப் பெயர்ச்சி… இனி தரும் வளர்ச்சி! சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! 2014-2017...

மாணிக்கத்தை அணியும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நவரத்தின மகிமைகள் – பாகம் 2

ஸ்ரீதுர்கை உபாசகர்

வி.ஜி.கிருஷ்ணாராவ்

(M) 98411 64648

சென்ற இதழில் நம்மை நிமிர்ந்த உட்கார வைக்கவும் நடக்க வைக்கவும் மூலாதாரச் சக்கரம் இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த சக்கரம் நம் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது.? இந்த சக்கரத்துக்கு உகந்த தெய்வம் எது? ரத்தினம் எது? எந்த வகையில் அது ஏற்றத்தை தருகிறது? அந்த ரத்தினத்தின் பெயர் என்ன? என்பனவற்றை சொல்கிறேன் என சொன்னேன் அல்லவா. அதற்கு முன்னதாக ஒன்றை சொல்கிறேன்.

 முன்னோரு காலத்திலெல்லாம் ஒருவர் ரத்தின வியபாரியாக இருந்தால் அவரை “மாணிக்க வியபாரி“ என்று சொல்வார்கள். ரத்தினங்கள் பல இருந்தாலும் மாணிக்கத்துக்கு அதிக மரியாதை. காரணம் சூரியன்.

 இருளை விரட்டி வெளிச்சத்தை கொடுப்பது சூரிய பகவான். சூரியன் செயல் இழுந்தால் உலகத்தின் தொடர்கதை முடிந்துவிடும். ஒரு மனிதனுக்கு தேவையான உஷ்ணத்தை தரும் வேலையை சூரியனும் செய்கிறது.

 ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் முனிவரும் அவரின் இரு சீடர்களும் பாதயாத்திரை போகும் போது மழை பெய்தது. மூவரும் மழையில் நன்றாக நனைந்துவிட்டார்கள். இதனால் கடும் குளிரில் நடுங்கினார்கள். “இன்னும் சிறிது தூரம் சென்றால் ஊர் போய் சேரலாம்… அங்கு ஏதாவது ஒரு வீட்டில் தங்களாம்.“ என்ற எண்ணத்தில் நடையில் வேகத்தை கூட்டினார்கள். முனிவருக்கு அதிக வயது என்பதால் அவரால் குளிரில் நடக்க முடியாமல் சிரமப்பட்டார்.

 “சீடர்களே…என்னை உங்கள் முதுகில் சுமந்து செல்லுங்கள். காய்ச்சல் வருவது போல் இருக்கிறது. என்னால் நடக்க முடியவில்லை.“ என்றார் முனிவர்.

 “எனக்கும்தான் குளிர்கிறது. உடல் நடுங்குகிறது. அப்படி இருக்கும் போது எப்படி என்னால் உங்களை முதுகில் சுமந்து நடக்க முடியும்…? ஆளை விடுங்கள்.“ என்று முனிவருக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஒடிவிட்டான் ஒரு சீடன். 

 மற்ற ஒரு சீடனோ… “சுவாமி நான் உங்களை என் முதுகில் சுமக்கிறேன்.“ என்று கூறி குருவை தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்க அரம்பித்தான்.

போகும் வழியில் “ஆளைவிடு“ என்று ஒடிய சீடன் குளிரில் உடல் விரைத்து மரணம் அடைந்ததை கண்ட இரண்டாவது சீடன் “பார்த்தீர்களா குருவே… உங்களை சுமக்க முடியாது என்று ஒடியவனின் உடலை உயிர் சுமக்க மறுத்துவிட்டது பார்த்தீர்களா? இதற்கு காரணம் உங்கள் சாபம்தான்.“ என்றான்.

“சாபம் தோஷமாகுமே தவிர உயிரை கொல்லாதப்பா. இவன் மரணதிற்கு காரணம் சொல்கிறேன் கேள். இவன் கடும் குளிரால் இறந்துவிட்டான். ஆனால் அதே குளிர் உன்னை எதுவும் செய்யவில்லை.“

“காரணம் குருவே…?“

“சொல்கிறேன். எனக்கு இப்போது காய்ச்சல். அதனால் என் உடல் உஷ்ணமாக இருக்கிறது. இந்த நடுங்கும் குளிரில் உன் முதுகின் மீது என் உடலை நீ சுமக்கிறாய். காய்ச்சல் காரணமாக என் உடலில் உள்ள உஷ்ணம் உன் உடலில் பரவியதால் குளிர்காற்று உன்னை எதுவும் செய்யவில்லை. இப்படி தேவையான உஷணம் சூரியனால் இந்த பூமிக்கு கிடைப்பதால்தான் பூமியும் உயிருடன் இருக்கிறது.“ என்றார் முனிவர்.

மூலாதாரச் சக்கரம் அது எங்கே இருக்கிறது?

நிமிர்ந்து நடக்க வைக்கவும் உட்கார வைக்கவும் உதவுகிறது முதுகு தண்டு. அந்த முதுகு தண்டின் கீழே மூலாதாரச் சக்கரம் இயங்கி கொண்டிருக்கிறது. இதற்குரிய  தெய்வம் விநாயகப் பெருமான். இதற்குரிய நிறம் சிகப்பு.  இந்த சக்கரம் சரியாக இயங்க வேண்டு்ம் என்றால் சிகப்பு கல்லான மாணிக்கத்தை அணிய வேண்டும். இதனால் உடலுக்கு நல்ல இரத்த ஓட்டம் ஏற்படும். சிகப்பணுக்கள் நல்ல விதமாக செயல்படும். நரம்பு தளர்ச்சி நீங்கும். உடலில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.. மன வலிமையை -தைரியத்தை உண்டாக்கும். பொருளாதரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களை ஆளும் சக்தி உண்டாகும்.

ஆனால் மாணிக்கத்தை அணியும் முன் உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் அணுகி ஆலோசனை பெற்று அணிந்தால் நல்லது. ஜாதகம் இல்லாதவர்கள் உடல் எண் அல்லது உயிர் எண் ஒன்றாம் எண்ணாக வந்தால் மாணிக்கத்தை அணியலாம்.

உதாரணத்திற்கு –

28-5-1997 =  2 + 8 = 10.  இது பிறந்த தேதி. இதை உடல் எண் எண்பார்கள்.  இவர்கள் மாணிக்கத்தை அணியலாம்.

7- 5- 1960 =  7+ 5+ 1+9+6+0+=28.   2+8+  10. பிறந்த தேதி மாதம் வருடங்களை கூட்டினால் 28. இதன் ஆதிக்கம் ஒன்றாம் எண். இது உயிர் எண் ஆகும். இவர்கள் சூரிய ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் மாணிக்கத்தை அணியலாம்.

 

                                                                        (ஜொலிக்கும்)

 

                                                                                        தொகுப்பு. நிரஞ்சனா  

ஜோதிட ஆலோசனைக்கு

ஸ்ரீதுர்கை உபாசகர்

வி.ஜி.கிருஷ்ணாராவ்

(M) 98411 64648  / E-Mail: astrokrishnarao@gmail.com

Posted by on Mar 10 2011. Filed under ஜோதிடம், நவரத்தினங்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2017 . All Rights Reserved.| designed & developed by Green Site Tech